1917 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது கல்வி சுகாதாரம் பாதுகாப்பு வேலைவாய்ப்பு சம ஊதியம் போன்ற எல்லாவற்றிலும் போராடவேண்டிய நிலையில் உள்ள இவ்வேளையில் மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னெடுப்போம் உரிமைகளோடு…. மகளிர் தினம் வெறும் கொண்டாட்டம் அல்ல.. உரிமையை மீட்டெடுத்த நாள் அல்லது மீட்கும் நாள்.
மகளிர் தின கொண்டாட்டம் என்பது சந்தைப்படுத்துதல் இல்லை.
மகளிர் தின கொண்டாட்டம் என்பது 1910 ஆம் ஆண்டு டென்மார்க் தலை நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய பெண்கள் மாநாட்டில் பெண்கள் பிரச்சனைக்கு உரிமையை மீட்பதே தீர்வு என்ற முழக்கத்துடன் 1917 ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதியன்று பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரிய பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினத்தையே ஐ.நா சபை மகளிர் தினமாக அங்கீகரித்து அன்று முதல் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய தொழில் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திய பொருளாதார சுதந்திரம் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டுபயந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப் போம்.
இந்த மகளிர் தின கொண்டாட்டத்தில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
K. Balamurugan, Founder, IlangyarKural