ஒரு பள்ளியின் தாளாளர் அட்வகேட் சமூக ஆர்வலர் என்று பலதரப்பட்ட அடையாளங்களை வைத்துக் கொண்டு தினமும் தோட்டத்தை உருவாக்கும் தோட்டக்காரன் ஆகவும் ஆடுகள் பராமரிப்பு செய்யும் தொழிலாளியாகவும் விவசாயம் செய்யும் விவசாயி ஆகவும் உருவெடுத்து
திறம்பட தினமும் செய்து வரும் ஒரு மனிதர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசிக்கும் K. முகம்மது பஜ்லுல் ஹக், BA, BL,
அட்வகேட், நோட்டரி அவர்களை இளைஞர் குரல் சார்பாக அரவக்குறிச்சியின் இளைஞர்களின் நாயகன் என்று பாராட்டுகிறோம்.
இவர் உருவாக்கிய அக்னி வெயிலில் கூட பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் கொண்ட ஒரு பள்ளி அரவக்குறிச்சியில் உருவாக்கி வருவது மிகவும் சிறப்பாக இருக்கிறது…
நங்காஞ்சி ஆறு பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், 300 மரங்களை அரவக்குறிச்சி பகுதியில் நட்டு வைத்து அதற்கு பாதுகாவலனாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது…
இயற்கையோடு ஒன்றி வாழ நினைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டுமொருமுறை இளைஞர் குரல் சார்பாக வாழ்த்தி வணங்குகிறோம்…