போலீசார் அறிவுரை: இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது .
இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர்கள் பணம் திருடுவதை தடுக்க சைபர் கிரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது.
அதாவது, OTP மட்டுமல்லாது PIN அமைக்கும்படியும், SMS, லிங்குகளை நம்பி டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பணத்தை திருடும் முயற்சி நடப்பதாக உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrim.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.