தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் தலைவரை வழிமறித்த குழந்தை…
கோரோன ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரையிலும் மதியம் 600, 650 ஆட்களுக்கு உணவும் மற்றும் சுத்தி இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிவந்த தமிழ்நாடு இளைஞர் கட்சி மூன்று நாட்களுக்கு முன்பு பாலில்லா குழந்தைகளை ை கண்டு மிகவும் வருத்தம் அடைந்தனர்.
பின்பு இன்றைய திருப்பூர் மாவட்ட தலைமை கலந்தாய்வு நடத்தி சமூக ஊடகம் மூலமாக தெரியப்படுத்தி இரண்டரை வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பால் கொடுப்பதாக தெரிவித்தார்கள்.
அதன் அடிப்படையில் மூன்று நாட்களாக திருப்பூர் மாவட்டத்தை சுற்றி இருக்கக் கூடிய பகுதிகளை கண்டறிந்து பால் இல்லாத குழந்தைகளுக்கு பால் வழங்கி வந்தனர்.
இன்று மூன்றாவது நாளாக பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்கள் காமநாயக்கன்பாளையம் திருப்பூரில் இருந்து 27 கிலோ மீட்டரில் உள்ள அந்தப் பகுதிக்கு பால் கொடுக்க சென்றார், அப்பொழுது இரண்டு நாட்களாக பால் வாங்கிக் கொண்டிருந்த 17 குழந்தைகளும் ஒன்றிணைந்து அவருக்கு தன்னுடைய உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 100 ரூபாய் பணத்தை கொடுத்தார்கள்.
அப்பொழுது அதை வாங்க மறுத்த தமிழ்நாடு இளைஞர் கட்சி பல்லடம் நகர தலைவர் அந்தோணி அவர்கள் அவர்களிடம் ஏன் என்று கேள்வி எழுப்பினார் இத்தனை தூரத்திலிருந்து வந்து உங்களுடைய பெட்ரோல் மற்றும் பால் செலவு அனைத்தையும் பார்த்து எங்களுக்கு கொடுத்தீர்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆதலால் என்னுடைய உண்டியலில் சேர்த்து வைத்த 100 ரூபாய் பணத்தை உங்கள் கட்சிக்கு நிதியாக கொடுக்க அவர்கள் அம்மா, அப்பாவிடம் கூறியிருக்கிறார்கள் கையேந்தும் பழக்கம் போய் இன்று மற்றவருக்கு ் கொடுக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிய இந்த குழந்தைக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சி திருப்பூர் மாவட்ட தலைமை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.