கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது. சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி எடுத்தார்.
இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.
சென்னை புழல் சிறையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது எனவும், பரிசோதனை முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.