Saturday , November 15 2025
Breaking News
Home / Politics / அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆயத்தத்திற்காகவும், அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
MyHoster

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆயத்தத்திற்காகவும், அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

May be an image of 3 people and dais

1⃣ செபி மற்றும் அதானி இடையேயான தொடர்பின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை. பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்படக் கூடாது. மோடி அரசு உடனடியாக செபி (SEBI) தலைவரை பதவியில் இருந்து நீக்கி மற்றும் இது தொடர்பாக விசாரிக்க, பாராளுமன்றக் கூட்டுக்குழுவை (JPC) அமைக்க வேண்டும்.

2⃣ கட்டுப்படுத்தப்படாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் குடும்பச் சேமிப்புகள் குறைதல் ஆகிய அழுத்தமான பிரச்சனைகள் குறித்து எங்களுடைய கவனம் இருக்கவேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. ஏழை, நடுத்தர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

3⃣ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் தடையின்றி தொடர்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

4⃣ நமது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

தேசபக்தியுள்ள நமது இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

5⃣ கோடிக்கணக்கான பயணிகள் அவதிப்படும் நிலையில், ரயில் தடம் புரள்வது வாடிக்கையாகி விட்டது. காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் சரிந்து வரும் உள்கட்டமைப்பு ஆகியவையும் கவலைப்படவைக்கும் விஷயமாக உள்ளது.

இந்தப் பிரச்னைகளைச் குறித்து விரிவாக தேசிய அளவில் பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

– காங்கிரஸ் தலைவர் திரு Mallikarjun Kharge

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES