Thursday , July 3 2025
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / மதுரை / கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி..!
MyHoster

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேட்டி..!

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா மத்திய அரசு விழா என்று முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டி

மதுரை ஆகஸ்ட் 20

மதுரை காந்தி மியூத்தில் மாற்று திறனாளிகளுக்கு அக்சயபாத்திரம் டிரஸ்ட் சார்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ் எஸ் சரவணன், தமிழரசன்,மாணிக்கம், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ கே பி சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

இதனை தொடர்ந்து  ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

தமிழ்நாட்டு மக்களிடத்தில் பரவலாக பேசப்பட்டு வருவது கருணாநிதி நாணய வெளியீட்டு விழா தான், கருணாநிதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக கட்சிக்காரர்களை விட புகழ்ந்து பேசி இருப்பது மகிழ்ச்சி அடைகிறேன் இதனால் எனக்கு தூக்கம் வரவில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லியுள்ளார்.ஏற்கனவே தமிழ்நாட்டு அமைச்சர்கள் கண்ணா, பின்னாவென்று பேசியது எனக்கு தூக்கத்தை கெடுத்து விட்டது என்று திமுக கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.முதலமைச்சருக்கு தூக்கம் தொலைந்தால் அவர்களுக்கு உடம்புக்கு நல்லது அல்ல,

 கடந்த மக்களவைத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மேடைக்கு, மேடை ஸ்டாலின் பேசினார் அதில் பாஜக பாசிச ஆட்சி மோடி ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் இந்தியா கூட்டணியின் அஜந்தா என்று கூறினார், ஆனால் இன்றைக்கு பிஜேபி ஆட்சிக்கு வந்தவுடன் தன் ஆட்சியை காப்பாற்ற விழா எடுக்கிறார்.இன்றைக்கு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் பெயர் இடம் பெற்றுள்ளது, ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது, துரைமுருகன் பெயர் இடம் பெற்றுள்ளது இதற்கு தலைமைச் செயலாளர்தான் அழைப்புகள் கொடுத்துள்ளார் ,இந்த நாணய வெளியிட்டு விழாவில் இணை அமைச்சர் முருகன் பெயர் இடம்பெறவில்லை ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்றார், ஆனால் இந்த நாணய வெளியிட்டுவிழா மாநில விழா அல்ல மத்திய அரசு விழா தான் என்று முழு பூசணிக்காயை முதலமைச்சர் ஸ்டாலின் மறைக்க பார்க்கிறார், இதை கேள்வி கேட்ட எடப்பாடியாரை அரசியல் நாகரீகம் இல்லாமல், தரம் தாழ்ந்து, அரசியல் நாகரிமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை செய்து, மூளை உள்ளதா என்று கிண்டலும், நையாண்டியுமாக பேசியுள்ளார்.இன்றைக்கு தனது தந்தைக்காக தமிழ்நாடு தன்மானத்தை அடகு வைத்து விட்டார், நாணயத்தில் இந்தி உள்ளது என்று எடப்பாடியார் பேசியது தேச குற்றமா?  இதே கல்லக்குடி போராட்டத்தில் ரயில்வே நிலையத்தில் ஹிந்தியில் உள்ளது அதை அழித்து தண்டவாளத்தில் தலை வைத்து இந்து ஒழிக என்று சொன்ன தலைவருக்கு ஹிந்தியில் நாணயம் வெளியிட்டுள்ளது என்று மக்கள் இன்று கேலி பேசி வருகிறார்கள். இன்றைக்கு தமிழகத்திற்கு ஒரு பைசா நிதி ஒதுக்கவில்லை, மெட்ரோதிட்டங்கள், ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை, வறட்சிக்கு நிதி ஒதுக்கவில்லை, வெள்ள நிவாரணத்திற்கு நிதி ஒதுக்கவில்லை இன்றைக்கு அப்பா மீது உள்ள பாசத்தால் தமிழகத்தை முதலமைச்சர் காவு வாங்கி விட்டார். என கூறினார்.

About Kanagaraj Madurai

Check Also

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES