Thursday , November 21 2024
Breaking News
Home / தென் மாவட்டங்கள் / மதுரை / அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அறிக்கை..!
MyHoster

அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி அறிக்கை..!

எங்களின் உரிமைக்காக போராடும் அதிமுகவிற்கு தோள் கொடுப்போம் ; தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத்தலைவர் திருமாறன் ஜி அறிக்கை

கள்ள சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் விவகாரம் குறித்து தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி திருமாறன்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் எதிர்த்து போராட்டங்களை நாங்கள் நடத்தி உள்ளோம். மேலும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பி இருக்கின்றோம். அதன் பொருட்டு எங்களின் உரிமைக்காக கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை அரசு பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை அறிவித்து பின்னர் அதனை தொடர்ந்து நாளை சனிக்கிழமை மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருக்கின்றார்.

அதனை வரவேற்கும் விதமாக எங்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும்
அதிமுகவிற்கு தோள் கொடுப்போம். அதிமு.கவுடன் இணைந்து தென் மாவட்டங்களில் உள்ள எங்களது தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் பங்கேற்க இருக்கின்றோம் என்பதனை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு எங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று பள்ளியுடன் இணைக்கும் முயற்சியை
கைவிட வேண்டும். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கம் சார்பாக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் சிவஞானபுரம் பகுதியில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் விவசாயிகள் ஆலோசனைக் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES