Tuesday , October 21 2025
Breaking News
Home / Kanagaraj Madurai (page 24)

Kanagaraj Madurai

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் நிர்வாகிகள் போஸ், சரவணராஜ், கந்தராஜ், பன்னீர்செல்வம், முருகேசன்,பாஸ்கர், ஆகியோர் உள்ளனர்.

Read More »

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக”கண் பரிசோதனை முகாம்.1000 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் “மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை” சார்பாக சர்க்கரை நோயாளிகளுக்கான “கண் பரிசோதனை முகாம்” நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டாக்டர் கிம் தலைமை தாங்கினார். டாக்டர் நரேஷ் பாபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் சிறப்பாக செய்திருந்தார். இதில் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் டாக்டர் சிவதர்ஷன் மற்றும் கோமதி, கிருஷ்ணவேணி, …

Read More »

சாத்தையாறு அணையை தூர்வாரக்கோரி முத்துராமன்ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மதுரை மாவட்டம் சாத்தையாறு அணையை தூர் வாரி, ஷட்டரை பழுது பார்க்க வேண்டும் எனவும்,அணைக்கு வரும் நீர் வரத்து கால்வாய்கள்‌ மர்ம‌நபர்கள் அடைத்து வைப்பதை‌ தடுக்க‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர்‌‌ முத்துராமன் ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார் அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது ‘மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சாத்தையாறு அணை மொத்தம் 29 அடி ஆழம் …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பாக 1008 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்தியாவில் நடந்து வரும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி – வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் …

Read More »

மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் விவசாயிகள் கலந்துரையாடல்

மதுரை, நவம்பர்.17- மதுரையில் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில் :- விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனுக்குடன் பதிவேற்று தரும் அதிகாரிகளுக்கு முதலில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமப்புற கூட்டுறவு வங்கிகளில் உள்ள இ.சேவை மையங்களுக்குவிவசாயிகள் சிட்டா, …

Read More »

திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பாக தேசிய பத்திரிகையாளர் தின விழா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் திருச்சியில் தேசிய பத்திரிகையாளர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் சத்யநாராயணன் வரவேற்று பேசினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் மாநிலத்தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் மற்றும் செயலாளர் ரவிச்சந்திரபாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், கார்த்திக் உள்பட ஏராளமான நிர்வாகிகள் …

Read More »

மதுரையில் பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா.!

பெருந்தலைவர்,நடிகர்திலகம் அறக்கட்டளை சார்பாக கார்த்தி சிதம்பரம் பிறந்த நாள் விழா மதுரை, நவம்பர்.16- முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு,மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர், நடிகர்திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், லெனின், முத்துக்குமார்,கனகராஜ் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. முன்னதாகஅருள்மிகு காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் …

Read More »

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் சார்பாக சிறப்பு பிரார்த்தனை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டி மற்றும் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற மதுரையில் சிறப்பு பிரார்த்தனை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ஆஃப் ரோட்டரி சங்கம் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவா கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரியவா விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மஹன்யாஸம், …

Read More »

தரமில்லாத விதைகளை வழங்கும் தோட்டக்கலைத்துறை: ஆபெல் மூர்த்தி கண்டனம்.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி பேசுகையில் :- தோட்டக்கலைத்துறை சார்பாக தரும் விதைகள் தரமாக இல்லாததால் முளைப்பதில்லை. மேலும் சான்றிதழ் இல்லாமல் விவசாயிகளுக்கு விதைகளை வழங்கி வருகின்றனர். தரமில்லாத விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே சான்றிதழ் பெறாத விதைகளை …

Read More »

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More »
NKBB TECHNOLOGIES