Saturday , November 22 2025
Breaking News
Home / செய்திகள்

செய்திகள்

All News

iew(opens in a new tab)Publish

Change block type or style

Change text alignment

Displays more block tools

வணக்கம் தங்க நகைகளுக்கு BUREAU OF INDIAN STANDARDS துறை மூலமாக Six Digit Alphanumeric HUID Code எண்களை பயன்படுத்தி தங்க நகைகள் வாங்க வேண்டும். அதை B I S CARE APP மூலமாக தங்க நகைகளை நாம் தரமான 22K916 நகைகளா…..?

தங்க நகைகளுக்கு BUREAU OF INDIAN STANDARDS துறை மூலமாக Six Digit Alphanumeric HUID Code எண்களை பயன்படுத்தி தங்க நகைகள் வாங்க வேண்டும். அதை

B I S CARE APP மூலமாக தங்க நகைகளை நாம் தரமான 22K916 நகைகளா என்பதை ஆய்வு செய்து நாம் வாங்குகிறோம். இப்போது தங்க நகை விலைகள் அதிகமாய் கொண்டிருக்கிறது ஆகையினால் அனைவரும் B I S CARE APP பயன்படுத்தி நகைகளை வாங்க வேண்டும் அதேபோல் மத்திய அரசு வெள்ளி பொருட்களும் Six Digit Alphanumeric HUID Code B I S CARE APP மூலமாக என்னை பார்த்து பொருளை வாங்க வேண்டும்(ஆனால் இப்பொழுது ஒரு சில கடைகள் தவிர மற்ற கடைகளில் HUID எண்கள் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள் பொதுமக்கள் நீங்கள்தான் பணம் கொடுத்து பொருளை வாங்கும் போது அது தரமான பொருளா என்பதை ஆய்வு செய்து பொருளை வாங்க வேண்டும்) இப்பொழுது தங்கமாக இருக்கட்டும் வெள்ளியாக இருக்கட்டும் விலைகள் உயர்ந்து இருக்கிறது நாம் ஒரு பொருளை வாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும் அரசு எப்படி நகைகளை வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் மத்திய அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது அதை நாங்கள் நுகர்வோர் அமைப்பு மூலமாக பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் செய்திகளை கொண்டு செல்கிறோம். ஆனால் வெள்ளிப் பொருள்களுக்கு HUID எண்கள் இல்லாமல் ஒரு சில கடைகள் தவிர அனைத்து கடைகளிலும் விற்கப்படுகிறது நீங்கள்தான் விழிப்புணர்வுடன் பொருளை பார்த்து வாங்க வேண்டும்

பொது நலன் கருதி

தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

உங்கள் கணக்கு சரியா உள்ளதா?

அவ்வப்போது சரி பார்த்து கொள்ளுங்கள்…🙏

விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் மிகவும் மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையின் உரிமையாளரான மருத்துவர் நோயாளியைப் பார்த்தவுடன், அவர் உடனடியாக ஐசியூவில் சேர்த்து மருத்துவ உதவியும், அறுவை சிகிழ்சையும் செய்ய சென்றார்.

2-3 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர் வெளியே வந்து,
“இவருக்கு இங்கு எந்த விதமான சிரமமோ, அசௌகரியமோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்…
மேலும் ,
அந்த நபரிடம் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு பணம் எடுக்க வேண்டாம்” என்றும் தனது ஊழியர்களிடம் கூறி சென்றார்.

நோயாளி சுமார் 15-20 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.

அவர் நன்றாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தபோது, ​​

மருத்துவர் (மருத்துவமனையின் உரிமையாளரும்) அவரது இறுதி அறிக்கையை பரிசீலனைக்கு பெற்றார்.

அதனுடன் அந்த நோயாளிக்கு சுமார் 5.50 லட்சம் ரூபாய் ரசீது வழங்கப்பட்டது.

டாக்டர் அவருடைய அக்கவுண்ட் மேனேஜரை அழைத்து,
“இவரிடம் ஒரு பைசா கூட வாங்க வேண்டாம். அந்த நோயாளியை என் கேபினுக்கு அழைத்து வாருங்கள்” என்றார்.

நோயாளி சக்கர நாற்காலியில் மருத்துவர் அறைக்கு அழைத்து வரப்பட்டார்.

மருத்துவர் நோயாளியிடம்,
“தம்பி! என்னை அடையாளம் தெரிகிறதா?”

நோயாளி கூறினார்,
“நான் உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
ஆனால் எங்கே என்று ஞாபகம் இல்லை…”

டாக்டர் சொன்னார்,
“நாலு வருஷத்துக்கு முன்னாடி, சூரியன் மறையும் சமயத்துல ஊருக்கு அப்பால் அந்த காட்டில் ஒரு காரை சரி பண்ணினீங்க…
இப்போது ஞாபகம் வருகிறதா?”

“ஆமா சார், நல்லா ஞாபகம் இருக்கு…”

“அன்றைய தினம் நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த போது, ​​கார் பழுதாகி விட்டது.

சுற்றிலும் வெறிச்சோடிய காடுதான் இருந்தது.

குடும்பத்தில் அனைவரின் முகத்திலும் கவலையும் பயமும் படர்ந்திருந்தது.

நாங்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்ய கடவுளிடம் பிரார்த்தனை செய்தோம்.

சிறிது நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது.

நீங்கள் பைக்கில் வந்தீர்கள்…

பைக்கை நிறுத்திவிட்டு எங்கள் பிரச்சனைக்கு காரணம் கேட்டீர்கள்.

பிறகு காரின் பானட்டைத் திறந்து சரிபார்த்தீர்கள்…

சில நிமிடங்களில் கார் ஓடத் தொடங்கியது.

நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வீடு வந்து சேர்ந்தோம்.

‘அந்த வனாந்திரக் காட்டில் இரவைக் கழிக்க வேண்டும்’
என்ற எண்ணமே எங்களுக்குக் குமுறலை ஏற்படுத்தியதால், எல்லாம் வல்ல இறைவன் உன்னை எங்களிடம் அனுப்பியது போல் உணர்ந்தோம்.

நீங்கள் ஒரு கேரேஜ் நடத்துகிறீர்கள் என்று சொன்னீர்கள்.

அத்தகைய கடினமான சூழ்நிலையில் உங்கள் உதவிக்கு விலை இல்லை,
அது விலைமதிப்பற்றது.

ஆனாலும்,
நான் உங்களிடம், “எவ்வளவு பணம் வேண்டும்?” என்று கேட்டேன்.

அந்த நேரத்தில், நீங்கள் கூப்பிய கைகளுடன் பேசிய வார்த்தைகள்,

“எனது விதியும் கொள்கையும் என்னவெனில்…

பிரச்சனையில் இருப்பவரின் உதவிக்காக நான் எதையும் திரும்பப் பெறுவதில்லை.

இந்த வேலையின் கணக்கை என் கடவுள் வைத்திருப்பார்.”
என்றீர்கள்.

அந்த வார்த்தைகள் என் வாழ்க்கைக்கு உத்வேகம் அளித்தன.

‘பெயரளவிலான வருமானம் உள்ள ஒருவரால் இவ்வளவு உயர்ந்த எண்ணங்களும், மதிப்புகளும் இருக்க முடியும் என்றால்…,

அவற்றை நாமும் பின்பற்றினால் என்ன?’
என்று அன்று நினைத்தேன்.

அன்றிலிருந்து, இன்று வரை அதை கடைபிடித்து வருகிறேன்.

நான்கு வருடங்கள் ஆகியும், எனக்கு எந்தக் குறையும் இல்லை.

உண்மையில், நான் முன்பை விட ஒப்பீட்டளவில் அதிகமாகப் பெறுகிறேன்.

இன்று, இந்த மருத்துவமனை என்னுடையது.

நீங்கள் இங்கே என் விருந்தாளி.

உங்கள் சொந்த விதியின்படி…
என்னால் உங்களிடமிருந்து எதையும் வாங்க முடியாது.

இது போன்ற சேவைகள் கடவுளின் அருளாகும்.

“நீங்கள் இப்போது சந்தோஷமாக வீட்டிற்குச் செல்லுங்கள், உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், நீங்கள் தயங்காமல் என்னிடம் வரலாம்.”
மருத்துவர் கூறிவிட்டு
கேபினை விட்டு வெளியே சென்றார்.

​​அந்த நபர் அறையில் வைக்கப்பட்டிருந்த இறைவனின் படத்தைப் பார்த்ததும், அவன் கைகள் தானாக உயர்ந்து, தானாக இணைந்தன…

அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவனது இதயம் அளவற்ற ஆனந்ததால் நிறைந்தது!

நாம் செய்யும் செயல்கள் நமக்கே திரும்பி வருகின்றன…

அதுவும் ஆர்வத்துடன்.

அனைத்து பாவ, புண்ணிய கணக்குகளும் சரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதுதான் பிரபஞ்ச விதி!

தீபாவளிக்காக, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இருப்பு வைத்து, விற்பதற்காக 24 மணி நேரமும் பார்களை நடத்தும் தமிழ்நாடு அரசு

தீபாவளிக்காக, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, இருப்பு வைத்து, விற்பதற்காக 24 மணி நேரமும் பார்களை நடத்தும் தமிழ்நாடு அரசு

நெல் கொள்முதலை திட்டமிடாமல் விவசாயிகளை வஞ்சிப்பது ஏன்…?

இது டாஸ்மாக் அரசா ? அல்லது திராவிட மாடல் அரசா ? என விவசாயிகள் கேள்வி

நெல் விவசாயிகளை வஞ்சிப்பதில் தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டை விட நெல் உற்பத்தி செலவு 50 சதவீதம் குறைவாக உள்ள சட்டீஸ்கர் – ஒரிசா போன்ற மாநிலங்கள் மத்திய அரசு வழங்கக்கூடிய குவிண்டாலுக்கு ரூ. 2,369 உடன் ரூ. 731 கூடுதலாக வழங்கி விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 3,100 வழங்கும்போது, தமிழ்நாடு அரசு வெறும் 131 ரூபாய் மட்டும் கூடுதலாக வழங்கி 2500 ரூபாய் மட்டுமே வழங்கி வருகிறது. அதுவும் 2021ல் வழங்குவதாக விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு 2025-ல் நான்கரை ஆண்டுகள் தாமதமாக வழங்கி இருக்கிறது.

சராசரியாக ஆண்டுதோறும் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் தமிழ்நாட்டில், இந்த ஆண்டில் கூடுதலாக 2 லட்சம் மெட்ரிக் டன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கும்போது, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கடந்த செப்டம்பர் 17 அன்று தமிழ்நாட்டில் 10 சதவீதம் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட உரங்களை உடனடியாக வழங்குமாறு கடிதம் எழுதியுள்ள சூழ்நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தமிழக சட்டசபையில் 13 மடங்கு அதிகமாக நெல் வந்ததாக தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்.

1960-களில் இருந்து நெல் கொள்முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் சூழ்நிலையில், இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதன் மீது உரிய கவனம் செலுத்தாதன் விளைவுதான் தற்போது வரை விவசாயிகள் சிரமப்பட்டு வருவதற்கு காரணமாகும்.

சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்பவர்கள், ஆளுங்கட்சியான பின்பு அதே நிலையை தொடர்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 45 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படும் தமிழ்நாட்டில், 7 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதுதான் தற்போதைய அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகும். குறைந்தபட்சம் மொத்த நெல் கொள்முதலில் 50% அளவிற்கு நெல்லை பாதுகாப்பாக வைக்க சேமிப்பு மையங்களை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு தொடர்ச்சியாக நிதி ஒதுக்காததன் விளைவுதான் தற்போது விவசாயிகளின் இந்த அவல நிலைக்கு காரணமாகும்.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் நெல் சாகுபடி பரப்பளவு 5.13 லட்சம் ஹெக்டேர் ஆகும் . தற்போதைய நடப்பு ஆண்டின் நெல் சாகுபடி பரப்பளவு 5.66 லட்சம் ஹெக்டேர் ஆகும் . வெறும் பத்து சதவீதம் மட்டுமே நெல் சாகுபடி கூடுதலாக இருக்கும்போது, இது குறித்து எவ்வித திட்டமிடலும் இல்லாமல், தற்போது பிரச்சனை வந்த பின்பு சமாளிப்பதற்காக தவறான தகவல்களை சட்டசபையில் பதிவு செய்த அமைச்சர் சக்கரபாணி மீது தமிழக முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இன்னும் புயல் மழை தொடங்கவில்லை. சாதாரண மழைக்கு நெல் கொள்முதல் நிலையங்களை நீர் சூழ்ந்து நிற்கிறது. விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை நனையாமல் வைப்பதற்காக தார்பாய்கள் இல்லை. கொள்முதல் செய்வதற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. ஈரப்பதமான நெல்லை உலர வைப்பதற்கு டிரையர் இயந்திரங்கள் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் அரும்பாடுபட்டு கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்வதற்கு முன்பே முளைத்து வீணாகி வருகிறது. இதுவரை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் மூட்டைகள் முளைத்து வீணாகி உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 840 கோடி ரூபாய் மதிப்புள்ள கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாக்கப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த 840 கோடி ரூபாயும் பொதுமக்கள் வரிப்பணம் என்பதை அதிகாரிகளும் அமைச்சரும் மறந்து விட்டார்கள் போலும்.

தமிழக முதல்வர் அவர்கள் நெல் கொள்முதல் குறித்து உரிய ஆய்வுக் கூட்டம் நடத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்ட பின்பும், இந்த அவல நிலை நிலவி வருவது விவசாயிகள் மீது இவர்கள் காட்டும் அக்கறையின்மையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தீபாவளி அன்று அதிகம் விற்பனையாகும் என்பதை முன்கூட்டியே கணித்து டாஸ்மாக்கில் அனைத்து வகை மதுபானங்களையும் போதுமான அளவு இருப்பு வைத்து, மது அருந்தக் கூடியவர்களுக்கு உரிய தின்பண்டங்களை வாங்கி வைக்கவும், வாகனங்களை நிறுத்தவும் உரிய ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்திய தமிழ்நாடு அரசு, நெல் கொள்முதலில் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதை பார்க்கும் போது இந்த அரசு திராவிட மாடல் அரசா ? அல்லது டாஸ்மாக் மாடல் அரசா ? என்கிற சந்தேகம் சாதாரண பாமரனுக்கும் கூட ஏற்படுகிறது என்பதுதான் தற்போதைய ஹைலைட்.

நெல் கொள்முதலை தாமதப்படுத்தி, விவசாயிகளை அலைய வைத்து வேறு வழி இன்றி மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கு விற்கக்கூடிய சூழ்நிலைக்கு தமிழக அரசு விவசாயிகளை தள்ளி உள்ளது.

நெல் கொள்முதல், சாக்கு கொள்முதல், தார்ப்பாய் கொள்முதல், வாகனப் போக்குவரத்து என அனைத்திலுமே மிகக் கடுமையாக ஊழல் நிலவி வருவதால் இது போன்ற தாமதங்கள் ஏற்பட்டு வருகிறது என்பதுதான் தற்போதைய குற்றச்சாட்டாக உள்ளது.

மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக வாங்க தெரிந்தவர்கள், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை பாதுகாப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.

எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நிதிகளை ஒதுக்கி, குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் அளவிற்கு சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்தியும், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அதிக ஆட்களை பணியமர்த்தி ஒரு நாளைக்கு 2,000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யும் அளவுக்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்கள் தினசரி வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியும், நெல் கொள்முதலில் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி லஞ்சமாக பெறப்படும் ரூபாய் நாற்பதையும் நிறுத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியும். விவசாயத்தையும் பாதுகாக்க முடியும் விவசாயிகளையும் காக்க முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை,முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்.

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரியும், அனைத்து முக்குலத்தோர் நலக் கூட்டமைப்பு தலைவருமான எம்.சம்பத் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

திருப்பரங்குன்றத்தில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்..

மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.

மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கான தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.பூபேஷ்குமார் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் ஹார்விப்பட்டி குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம்..!

NSS சிறப்பு முகாம் நிறைவு விழா
பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் என் எஸ் எஸ் மாணவர்களின் சிறப்பு முகாம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30/09/2024 முதல் 06/10/2024 முடிய நடைபெற்றது.

பள்ளி வளாக தூய்மை, மருவத்தூர் முனியப்பா கோவில், அய்யனார் கோவில் உழவாரப்பணி 50 மரக்கன்றுகள் மற்றும் விதைகள் நடுதல் , போதைப்பொருள் விழிப்புணர்வு
பேரணி , முழு சுகாதாரம் கழிப்பறை பயன்படுத்துதல் விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் பிளாஸ்டிக் ஒழிப்பு மஞ்சப் பையின் பயன்பாடு ,மழைநீர் சேகரிப்பு பேரணி, நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ,உயர்க் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் சிறப்பாக நடத்திய முதுகலை ஆசிரியர் மற்றும் NSS திட்ட அலுவலர் ப.பஞ்சாபகேசன் அவர்களை NSS மாவட்ட தொடர்பு அலுவலர் K.செல்ல பாண்டியன் ,மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சத்யா முருகன், தொழிற்கல்வி ஆசிரியர் பு.செங்குட்டுவன் ,முதுகலை ஆசிரியர் க. ஜெயராமன் வாழ்த்து தெரிவித்தனர்.என்எஸ்எஸ் திட்ட உதவி அலுவலர் ப.வேல்முருகன் நன்றி தெரிவித்தார் .

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை கவனித்து வந்தார்.

திடீரென ஜோர்ஜ் டோமினிக் மாரடைப்பால் மரணமடைந்த காரணத்தினால், அவருடைய மூத்த மகனான அலோசியஸ் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

இதை அறிந்த சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள், சிங்கப்பூரில் செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர் முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் அவர்களிடம் இந்த மாணவனின் நிலையைப் பற்றித் தகவல் தெரிவித்தார்.

மாணவனின் குடும்ப நிலையைக் கேட்டறிந்த முனைவர் மணிவண்ணன் நாச்சியப்பன் மாணவனின் கல்விக் கட்டணம் முழுவதையும் பொறுப்பேற்று ஒரு இலட்சம் ரூபாயை நன்கொடையாக அனுப்பி வைத்தார்.

இப்பணத் தொகையினை கடந்த ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள் அந்த மாணவனின் தாயார் செல்வியிடம் வழங்கினார். நிதியுதவியை பெற்றுக் கொண்ட அவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், நிகழ்வில் பங்கு கொண்ட 600 ற்கும் மேற்பட்டவர்களிடம் பேசிய முனைவர் நீலமேகம் நிமலன் மாரடைப்பு வராமல் தடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இளைஞர் குரல் செய்தியாளர் மதுரை கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES