சென்னை: ‘வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.’
என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார்.
அப்போது, ‘வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். ‘இன்னும் கணக்கு எடுக்க முடியவில்லை. மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார். கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன். இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மருத்துவக் குழுவும், நிவாரண நிதியாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. இன்னும் தேவை என்றால் உதவி வழங்கப்படும்’ என்றார்.
தொடர்ந்து ராகுல் காந்தி மீது சாதிய ரீதியிலான தாக்குதல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘அதுதொடர்பாக இப்போது கருத்துக்கூற முடியாது’ என்றார்.
ஆளுநர் பதவி நீட்டிப்பு குறித்து கேள்விக்கு, ‘நான் ஜனாதிபதியோ, பிரதமரோ இல்லை’ என்று கூறிவிட்டு முதல்வர் ஸ்டாலின் கிளம்பினார்.
மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நான்கு மாநில சட்டசபை தேர்தலில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், பேசிய அவர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்றும் பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் அவதிப்படும் நிலையில், மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது என்று அவர் வேதனை தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து மோடி அரசு சரியான பாடம் கற்கும் என நினைதோம், மாறாக, சமூகங்களை பிரித்து அச்சம் மற்றும் விரோத போக்கு கொள்கையை தொடர்ந்து பின்பற்றுகின்றனர் என்று அவர்
ஜம்முவில் மட்டும் கடந்த சில வாரங்களில் 11 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் பாதுகாப்பு படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் சோனியா குறிப்பிட்டார். உலகின் பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று, இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த மறுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இன்னும் சில மாதங்களில் நான்கு மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது என்றும் மக்களவை தேர்தலில் நமக்காக ஏற்படுத்தப்பட்ட வேகத்தையும் , நல்லெண்ணத்தையும் தக்க வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டால், தேசிய அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று சோனியா காந்தி தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழப்பு எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ள நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க மாநிலங்களவையில் கேரள எம்பிக்கள் இன்று வலியுறுத்தினர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
நேற்று காலை முதலே கனமழை பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில், முண்டகையில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலையில் பெரிய அளவிலான 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 51-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலச்சரிவில் 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மீட்புக் குழுவினர் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடுகின்றனர். முண்டகை மற்றும் அட்டமலை செல்ல வடம் பயன்படுத்தி தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, பெங்களூர் உட்பட பிற பகுதிகளில் இருந்து நான்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வயநாடு விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவு விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. வயநாடு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கேரள எம்பிக்கள் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதற்கு துறைரீதியான அமைச்சர்கள் பதிலளித்தனர். இதனைத் தொடர்ந்து கேரள எம்பிக்கள் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலம் ஏற்பட்ட ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேநேரம் நமது நாட்டில் ரயில் விபத்துகள் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் ஏற்படும் ஏழாவது ரயில் விபத்து இதுவாகும். இதனால் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய தினம் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிர தலைநகர் மும்பைக்குச் சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன.
ரயில் விபத்து: இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனர்.. மேலும் 40 பயணிகள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்தில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விபத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு ரயில் பாதைகளில் மீண்டும் ரயில் போக்குவரத்தைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் நமது நமது நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நமது நாட்டில் ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மேற்கு வங்க ரயில் விபத்து: கடந்த மாதம் 17ம் தேதி மேற்கு வங்கத்தில் மிக மோசமான ரயில் விபத்து ஏற்பட்டது. அன்றைய தினம் காலை 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது என்ற மீது சரக்கு ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.. மேலும், சுமார் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அடுத்த ஒரே மாதத்தில் உத்தரப் பிரதேசத்தில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூலை 18ம் தேதி திப்ருகர் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் திப்ருகர் எக்ஸ்பிரஸின் பல பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது.. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர். விபத்துக்கு முன்பு மிகப் பெரிய ரத்தம் கேட்டதாக ரயில் டிரைவர் கூறியிருந்தார். அது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தொடரும் விபத்துகள்: அதற்கு மறுநாள் ஜூலை 19ம் தேதி குஜராத் மாநிலம் வல்சாத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. மறுநாள் ஜூலை 20ம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹாவில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. மேலும், ஜூலை 21ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கின. அதேநாளில் மேற்கு வங்க மாநிலம் ரணகாட்டில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டது.
ஜூலை 26ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், ஜூலை 29ம் தேதி பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் பீகாரின் சமஸ்திபூரில் சில பெட்டிகள் ரயில் என்ஜினில் இருந்து தனியாக பிரிந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்துகளில் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
என்ன காரணம்: இருப்பினும், நமது நாட்டில் இதுபோல ரயில் விபத்துகள் தொடர்கதையாகி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. விபத்துகளைத் தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியது. இந்த கவாச் தொழில்நுட்பம் ஒரே ரயில் பாதையில் இரண்டு ரயில்கள் வருவதைத் தடுக்கும்.. இருப்பினும், நாடு முழுக்க அதைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதே விபத்து தொடர்கதையாகக் காரணமாக இருக்கிறது.
கல்வராயன் மலை வனப்பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்கள் இன்னும் தேசிய அரங்கில் புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்றனர். அவர்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்கேற்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியாவின் சமூக மற்றும் கலாச்சார பன்முக இதயத்துடன் இப்பகுதியை வளப்படுத்த வேண்டும். இதனைபுரிந்துகொள்வதற்கான ஒரு சாளரமாக இந்தப் பகுதி செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கோமுகி அணை, கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை வட்டத்தில், கச்சிராபாளையம் என்னும் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். தமிழ்நாட்டின் ஆதாரமாகப் புகழ் பெற்ற இந்தப் பகுதிக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
மலைவாழ் சொந்தங்கள் அனைவரும் நம்மை அன்புடன் அழைக்கிறார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், தமது பாரம்பரிய மரபுகளாலான பழங்குடி சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள அரசியலையும் பழங்குடியினரின் குரல்களின் முக்கியத்துவத்தையும், அடிப்படை உரிமைகளுக்கான அவர்களின் போராட்டத்தையும், அவர்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் முயற்சிகளின் விளைவுகளையும் காண எங்களுடன் சேருங்கள்.
அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஹெலிகாப்டர் சென்று கொண்டிருக்கும் போது, இந்தப் பழங்குடியின மக்கள் நிர்வாணமாக இயற்கையாக சுற்றித் திரிவதைப் பார்த்து, உடனடியாக அந்தப் பகுதிக்கு கலெக்டரை வரவழைத்து, உடனடியாக அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை சரி செய்திடவும் அவர்களும் சகஜமாக வாழ்வதற்கு ஒரு நல்வழியினை ஏற்பாடு செய்தார். இது சுதந்திர இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாகும்.
இப்போது அங்கே என்ன நடக்கிறது என்பதனை நீங்கள் மேராகர் சங்கத்தின் மூலம் அங்குள்ள மக்களுடன் சென்று, இரண்டு நாள்கள் தங்கி பழகும்போது நேரிலே உணருங்கள்!
வாய்ப்பிற்கு முன்பதிவு செய்யுங்கள் நிகழ்ச்சித் தேதிகள்: 2024 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ( இரண்டு நாள்கள் அதிகபட்சம்: 50 நபர்கள் + 50 நபர்கள் தமிழ்நாடு + புதுச்சேரி (மொத்தம் 100 நபர்கள் மட்டும்)
தொடர்புக்கு அழைக்கவும்: திரு S. சசிகுமார் – மாநில தலைவர், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – தமிழ்நாடு 9025282669
திரு.S.அமுதரசன் – மாநில தலைவர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் – புதுச்சேரி 9894744615
மேலும் தகவலுக்கு கடலூர் க. ரமேஷ் – தேசிய ஒருங்கிணைப்பாளர் RGPRS 9443136862
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் அவரது ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் என்கவுன்டரில் இறந்தவர் திருவேங்கடம் மட்டுமே. அருள், மலர்க்கொடி, வரறிவரரன், ஹரிதரன், சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை. கைது செய்ய போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் திரைமறைவில் செயல்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு கொடுக்கப்பட்ட பணம், அதன் மூலம் வாங்கிய சொத்து அளவு குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக மீது சரமாரி விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்தியாவை அபிமன்யு உடன் ஒப்பிட்டு பேசிய அவர், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குருக்ஷேத்திரத்தில் ஆறு பேர் சேர்ந்து அபிமன்யுவை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து கொன்றனர்.
நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டிய ராகுல் காந்தி: கொஞ்சம் ஆராய்ச்சி செய்தேன். அப்போதுதான், சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்று பெயர் இருப்பது தெரிய வந்தது. அதாவது, தாமரை வடிவிலானது என்பது தெரிந்தது. சக்கர வியூகம் என்பது தாமரை வடிவில் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், ஒரு புதிய ‘சக்கரவியூகம்’ உருவாகி இருக்கிறது.
அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அந்த சின்னத்தை பிரதமர் மார்பில் அணிந்துள்ளார். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ, அதேதான் இந்தியாவுக்கும் நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சிக்கியுள்ளனர்.
இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு பேர் உள்ளனர். இன்றும் ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி மற்றும் அதானி கட்டுப்படுத்தி வருகிறார்கள்” என்றார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவைக் கைப்பற்றியுள்ள சக்கர வியூகத்திற்கு பின்னால் 3 படைகள் உள்ளன. 1) ஏகபோக முதலாளித்துவம். இந்தியச் செல்வம் முழுவதையும் 2 பேர் சொந்தமாக்க அனுமதிக்கிறது.
எனவே, சக்கர வியூகத்தின் ஒரு அம்சம் நிதி அதிகார குவியலால் வருகிறது. 2) இந்த நாட்டின் நிறுவனங்கள், ஏஜென்சிகள், CBI, ED, IT, 3) அரசியல் நிர்வாகிகள். இந்த மூன்றும் சேர்ந்து, சக்கர வியூகத்தின் மையமாக உள்ளனர். அவை இந்த நாட்டை சீரழித்துவிட்டன” என்றார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொறுப்பாளரும், தேசிய செயலாளர் திரு வைசாக், திருமதி சாகரிக்கா ராவ், துணைத் தலைவர் திரு சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் திரு அஸ்வத்தாமன், மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர்.
இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்ட நிலையில் வெளிநடப்பு செய்துவிட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் மம்தா; “கூட்டத்தில் எனக்கு பேசுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழக முதல்வர் x பதிவில்; கூட்டத்தில் ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் கூட்டாட்சியா?? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக நினைத்து ஒடுக்க நினைக்கக் கூடாது எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சியின் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பது கூட்டாட்சிகளில் தத்துவம் என்று அவர் தனது x தளத்தில் கேள்விகளுடன் பதிவிட்டுள்ளார்.