Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 16)

செய்திகள்

All News

ஐசியு தீவிர பிரிவில் செந்தில் பாலாஜி… இன்று முக்கிய டெஸ்ட்..!

ஐசியு தீவிர பிரிவில் செந்தில் பாலாஜி... இன்று முக்கிய டெஸ்ட்..!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்தது. சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி எடுத்தார்.

இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.

சென்னை புழல் சிறையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட பிறகு திடீரென நெஞ்சு வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஓமந்தூரர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸில் ஏற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி அழைத்துவரப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூத்த மருத்துவர்கள் முன்னிலையில் இன்று காலை செந்தில் பாலாஜிக்கு இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது எனவும், பரிசோதனை முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2026 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 100 MLA இருக்க வேண்டும் – ரூபி மனோகரன்

தமிழ்நாட்டில் 2026 ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 100 MLA இருக்க வேண்டும் -  ரூபி மனோகரன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி , செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், திருச்சி வேலுசாமி, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ், தமிழ்நாடு இளைஞர் அணி காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் விச்சு. லெனின் பிரசாத் மற்றும் மாவட்ட தலைவர்கள், நகர, பேரூராட்சி, வட்டம், பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை கட்டத்தில் கலந்துக்கொண்டனர்

சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மேடை பேச்சு..

திருச்சியில் ரொம்ப காலத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது. எப்போதுமே உண்மையாக உழைத்தால், உழைப்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சியில் இடம் உண்டு.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 100 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும்

தற்போது காங்கிரஸ் கட்சியில் 18 எம்.எல்.ஏ உள்ளனர். ஆனால் வரும் 2026 ஆம் ஆண்டு 100 எம்.எல்.ஏக்கள் இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். கட்சியில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் நிலவுவது வழக்கம்தான். ஆனால் அவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மாபெரும் எழுச்சி பெறும். அண்ணாமலை IPS படிப்பிற்கும், அவருக்கும் தகுதி இல்லாத போன்று நடந்து கொள்கிறார். தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் பாஜக கால் ஊன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களிடையே மோடியின் வித்தைகள் செல்லாது. தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல, எதையும் சிந்தித்து செயல்படுபவர்கள். ஒருபோதும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உண்மையாக உழைக்க வேண்டும். நமது கட்சியினை பலப்படுத்த அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நமது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை உதறிவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி மாபெரும் முதன்மை இயக்கமாக திகழ அனைவரும் பாடுபட வேண்டும். தமிழ்நாட்டில் காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் பல்வேறு திட்ட பணிகள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டது. அதுபோன்று மீண்டும் காமராஜர் ஆட்சி அமைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை தீவிரப்படுத்தி செயலாற்ற வேண்டும்.

இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பல்வேறு பதவிகளில் பொறுப்பேற்க வேண்டும் அதற்கு ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும் என்பது முக்கியம் ஆகும் என்றார்.

45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: 45ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திமுக இளைஞரணி. இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

கழக கொள்கைகளையும் வரலாற்றையும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் எடுத்துச்சென்று, அவர்களை அரசியல் விழிப்புணர்வும் கொள்கைத் தெளிவும் பெற்றவர்களாக வார்த்தெடுப்பீர்கள் எனக் கழகத் தலைவராக நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிலவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை தபால் தலைகளை வெளியிடுகிறது

சர்வதேச நிலவு தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை தபால் தலைகளை வெளியிடுகிறது

ஜூலை 20, ஜூலை 20 அன்று சர்வதேச நிலவு தினத்தைக் கொண்டாடுவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அஞ்சல் நிர்வாகம், சீனாவின் Chang’e திட்டம் உட்பட, சந்திர பயணங்களின் படங்களைக் கொண்ட ஆறு அஞ்சல் தலைகள் மற்றும் மூன்று நினைவுத் தாள்களை வெளியிட்டுள்ளது.

முத்திரைகள் மற்றும் நினைவுப் பரிசுத் தாள்கள் சீனாவின் Chang’e 4 மற்றும் Chang’e 5 பயணங்களையும், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் சந்திர ஆய்வுப் பயணங்களையும் காட்சிப்படுத்துகின்றன.

வியன்னாவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் விண்வெளி விவகாரங்களுக்கான அலுவலகத்தின் இயக்குனர் ஆர்த்தி ஹோல்லா-மைனி, சந்திர ஆய்வில் சர்வதேச ஆர்வம் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டார். புதிய முத்திரைகள் சந்திர பயணங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் என்று கூறிய அவர், எதிர்கால முயற்சிகள் குறித்த அத்தியாவசிய உரையாடலை மேம்படுத்த ஐ.நா. தனது தனித்துவமான கூட்டிணைக்கும் சக்தியைப் பயன்படுத்தும் என்றும் வலியுறுத்தினார்.

முத்திரைகள் மற்றும் நினைவுப் பரிசுத் தாள்கள் நியூயார்க், ஜெனிவா மற்றும் வியன்னாவில் உள்ள ஐநா தலைமையகத்திலும், ஐநா இணையதளத்திலும் வாங்குவதற்குக் கிடைக்கும்.

2021 ஆம் ஆண்டில், ஐநா பொதுச் சபை, அப்பல்லோ 11 பயணத்தின் போது நிலவில் முதல் மனிதன் தரையிறங்கியதன் நினைவாக ஜூலை 20 ஆம் தேதியை சர்வதேச நிலவு தினமாக நியமித்தது.

மறுப்பு: இந்த இடுகை உரையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு ஏஜென்சி ஊட்டத்திலிருந்து தானாக வெளியிடப்பட்டது மற்றும் எடிட்டரால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை

நேற்று (19.07.2024) புதுக்கோட்டை ஐயா திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.

விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், AICC செயலாளர் திரு.கிறிஸ்டோபர் திலக், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் திரு.ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., அவர்கள், அமைப்பு செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் எம்.பி., அவர்கள், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., அவர்கள், கும்பகோணம் மேயர் திரு.சரவணன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் திரு.டி.பென்னட் அந்தோனிராஜ் அவர்கள், புதுக்கோட்டை காங்கிரஸ் மாவட்டத்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றார்கள்.

ஆலோசனைக்கூட்டத்தில் நமது நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டார்கள். இளைஞர்கள் பலர் எனது முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

அஞ்சலை அடங்கல.. அப்பவே தலை தலையா அடிச்சிக்கிட்டாரே கி.வீரமணி.. இப்ப பாஜகவுக்கு சிக்கல்? யாரந்த விஐபி

அஞ்சலை அடங்கல.. அப்பவே தலை தலையா அடிச்சிக்கிட்டாரே கி.வீரமணி.. இப்ப பாஜகவுக்கு சிக்கல்? யாரந்த விஐபி

சென்னை: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதாகியிருக்கிறார் பெண் தாதா அஞ்சலை.. இதுகுறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்… ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் சொல்லப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கஞ்சா விற்பனை: இதில் தொடர்புடைய மேலும் பலர் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள்.. அதில் ஒருவர்தான் பாஜக நிர்வாகி புளியந்தோப்பு அஞ்சலை.. வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் இந்த அஞ்சலை. ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்தவர்.. பிறகு அவரையே கல்யாணமும் செய்து கொண்டவர்.

கடந்த 2019-ல் அஞ்சலையை சந்திப்பதற்காக ரகசியமாக வந்தபோதுதான், ஆற்காடு சுரேஷ் சுரேஷ் ஒருமுறை போலீசில் வசமாக சிக்கினார்… அஞ்சலை வீட்டுக்கு நடுராத்திரி வந்திருந்தார் ஆற்காடு சுரேஷ்..

அப்போது, போலீசார் நள்ளிரவிலேயே அஞ்சலை வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் ஆற்காடு சுரேஷை கைது செய்திருந்தனர். அப்போதே அஞ்சலையின் பெயர் மீடியாவில் பலமாக அடிபட்டது.

இதற்கு பிறகு, திடீரென பாஜகவில் இணைந்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியும் ஒதுக்கப்பட்டது.. இந்த நிகழ்வும் அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.மூத்த தலைவர் வீரமணி: அந்த சமயத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.. அதாவது, 2021, ஜனவரி மாதம் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார் மூத்த தலைவர் வீரமணி.

தமிழக பாஜகவில் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தொடர்ந்து இணைந்து வருவதாக கூறி, அவர்களின் பட்டியலையும் அந்த வெளியிட்டிருந்தார்.. அதில் அஞ்சலை பற்றியும் வீரமணி குறிப்பிட்டிருந்தார்.”பல கொலை வழக்குகளில் சிக்கியவர்களும், கேடிகளும் பாஜகவில் சேர்வது ஓர் ஆபத்தான போக்காகும்.. வடசென்னை கஞ்சா வியாபாரியாக வலம் வந்த புளியந்தோப்பு அஞ்சலைக்கும் பாஜக அடைக்கலம் கொடுத்தது. அவர் வடசென்னை மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளராகி விட்டார். புளியந்தோப்பு அஞ்சலைமீது கொலை உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரவுடிகள்: மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக் கூடிய பா.ஜ.க.வில் கொலைகாரர்களும், ரவுடிகளும் சேர்வது

எந்த நோக்கத்தில் என்பது எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்கதே.. தார்மீகம் பேசும் பாஜகவின் தரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் மிகமிக முக்கியமான எடுத்துக்காட்டுகளேயாகும்.

கொலைகாரர்களையும், ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் கட்சியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலை என்ன? நினைக்கவே பதறும் நிலைதான்.. எல்லா வகைகளிலும் பா.ஜ.க. ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கான பெருந்தீங்காகும்” என்று மூத்த தலைவர் கி.வீரமணி தெரிவித்திருந்தது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.

Tamil News Live Updates: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Tamil News Live Updates: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 61,000 கனஅடியாக அதிகரிப்பு

தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 50,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூலை 20) காலை வினாடிக்கு 61,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை, நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் 5வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது! பதிலடி கொடுத்த முதல்வர்

அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் என ஒரு கூட்டம் புரளியை கிளப்பியது! பதிலடி கொடுத்த முதல்வர்

அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது.

இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதையொட்டி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் வாங்கவும் – அம்மா உணவகங்களைப் புனரமைத்திட 14 கோடி ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
#DravidianModel #அனைவருக்குமான_ஆட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

May be an image of 2 people, dais and text

நேற்று உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு மூன்று பேர் இறந்தும், 60-க்கும் மேற்பட்;ட பயணிகள் பலத்த காயமடைந்த செய்தி வெளிவந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளை போல, சுதந்திர இந்தியா இதுவரை கண்டதில்லை. 2015 மார்ச் 20 அன்று டெராடூன் – வாரணாசி செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 34 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 2016 நவம்பர் 20 இல் கான்பூருக்கு அருகில் புக்ராயனில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் 150 பேர் பலியாகி இருக்கிறார்கள். 2017 ஜனவரி 22 இல் ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம், ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 2017 ஆகஸ்ட் 19 இல் உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்த ரயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தார்கள். ஜூன் 2023 இல் பாலசோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இது நம்மை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இத்தகைய ரயில் விபத்துகள் நிகழ என்ன காரணம் ? யார் பொறுப்பு ? ரயில் விபத்துகள் தொடர்ந்து நிகழாமல் இருக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? இதற்குரிய நடவடிக்கை எடுக்காத அலட்சிய போக்கினால் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை.

உலகின் மிகப்பெரிய கட்டமைப்பான இந்திய ரயில்வே துறை கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் எப்படி படுகுழியில் தள்ளப்பட்டது என்பதற்கு நிறைய காரணங்களை கூறலாம். வந்தே பாரத் போன்ற ஆடம்பர ரயில்களை அறிவித்து பெரிய பாய்ச்சல் நிகழ்வது போல பாவலா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் என்பது ஒரு மோசடி. ஒருமணி நேரம் மிச்சமாகும் பயணத்திற்கு 20 சதவிகிதம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மிக மோசமாக தயாரிக்கப்பட்டவை. இதற்குள் பல பெட்டிகள் பழுதாகியுள்ளன. இதுகுறித்து எந்த புகாருக்கும் ரயில்வே துறை பதிலளிப்பதில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை தொடங்கப்பட்டாலும் நவீன இந்தியாவின் சிற்பி பண்டித நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சி நிகழ்ந்த 55 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ரயில்வே துறை கண்டது. இந்தியாவின் பெருமையாகவும், இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகவும் ரயில்வே துறை திகழ்ந்தது. ஆனால், வந்தே பாரத் போன்ற மோசடி ரயில்களை விட்டு மோடி அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, சாதாரண ஏழை, எளிய மக்கள் பயணம் செய்யும் ரயில்களுக்கு தேவையான எந்த வசதிகளும் செய்யப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களில் தமிழகம் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு வந்தன. எந்த புதிய ரயில்களும் தமிழகத்திற்கு விடப்படவில்லை. வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்களால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆன்மீகம், சுற்றுலா பற்றி பிரதமர் மோடி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், செயலில் எதையும் செய்யவில்லை. இந்தியாவின் மிக முக்கியமான கடற்கரை சுற்றுலாத் தலமான கோவாவுக்கு சென்னையிலிருந்து நேரடி ரயில் இல்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலமான திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லை. இப்போது பயணிகள் ரயில் விட்டிருக்கிறார்கள். அது எப்போது போய்ச் சேரும் என்று தெரியாது. திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த வகையிலும் அந்த ரயில் உதவுவதாக இல்லை. தமிழகத்தை வஞ்சிக்கிற நோக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலும், நிதி ஒதுக்காமலும் வெளிநாடுகளில் கடன் பெற முடியாமல் முட்டுக்கட்டைகளை மோடி அரசு போட்டு வருகிறது.

தற்போது பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாவது ரயில்வே துறையை சீரமைத்து ரயில் விபத்துகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வந்தே பாரத், தேஜஸ் போன்ற அதிவேக சொகுசு ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும். ஏழைகளும், நடுத்தர மக்களும் வசதிபடைத்தவர்களுக்கு இணையாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகரங்களுக்கு குறைந்த மணி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் அதிவேக ரயில்களை அதிகமாக இயக்க வேண்டும். சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். அதற்கேற்ப ரயில் பாதைகளை மேம்படுத்த வேண்டும். கிடப்பில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். விரைவில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைப் போல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடுவார்களேயானால் தமிழகம் – புதுச்சேரியை சேர்ந்த 40 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிப்பார்கள்.

இன்றைய கால சூழலில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் மிகமிக அத்தியாவசியப் பயணமாக ரயில் பயணம் அமைந்திருக்கிறது. அத்தகைய பயணங்களில் எந்தவித விபத்தும் ஏற்படாது என்கிற முழு நம்பிக்கையோடு மக்கள் பயணிக்கிற வகையில் விபத்துகளை முற்றிலும் தடுத்து ரயில் பெட்டிகளில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை பெருக்கி பொது மக்கள் பயணிக்கிற வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்களை எடுக்கவில்லை என்றுச் சொன்னால் மக்களின் கோபத்திற்கு மோடி அரசு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ

18.07.2024 அன்று கரூர் மாவட்ட வட்டார நகர பேரூர் கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில் V N C மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி MP சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ் குமார் MLA, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. லெனின் பிரசாத், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், AIUWC தலைவர் திரு V. மகேஸ்வரன் கரூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு RM பழனிச்சாமி Ex MLA பொதுசெயலாளர் திரு செல்வம் கரூர் மாவட்ட தலைவர் திரு.ஆர்.சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES