
இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

புதுடெல்லி: ‘எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்.’
என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சபாநாயகர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்தால் தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரை தேர்வு செய்தது.
ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன.
இந்த நிலையில் புதிய சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜ்ஜு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரிடம் மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை மட்டுமே உள்ளது. இன்று மனுதாக்கல் செய்யப்பட்டால் நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுவரை அனைத்து சபாநாயகர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் சபாநாயகர் தேர்தல் கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஒருவரை துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மிகத் தெளிவாக ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி கூறுவது என்ன?: மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, ‘எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.’ என்று தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக பாஜக எம்.பி., ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ தனது வேட்பாளராக ஓம் பிர்லாவை நிறுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்து ஏற்பட ஆலோசனை நடத்தினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்துகிறது.
ஒம் பிர்லா பிரதமர் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில்,துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்கினால் பாஜக கூட்டணியின் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்கத் தயார் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நிபந்தனை விதித்துள்ளார். சபாநாயகர் பதவிக்கு கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கொடிக்குன்னேல் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். துணை சபாநாயகர் பதவி வழங்கினால் ஒருமித்த கருத்துக்கு பங்களிப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. மறுபுறம், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஓம் பிர்லாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
அதோடு நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அது வதந்தி என்பது தெரியவந்தது.
இதனிடையே மீண்டும் மின்னஞ்சல் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி என்.ஜி.ஓ நகரில், ஜோதி மாணிக்கம் பெருமாள் கோவில் பங்காளி அக்ரி ரகுவரன்-அனிதா இல்ல புதுமனை புகுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.டி.கே ஜக்கையன், ஒன்றிய சேர்மன் லோகிராஜன், ஒன்றிய பொருளாளர் லோகநாதன் உள்பட மாவட்ட, ஒன்றிய, வார்டு நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக மலரஞ்சலி
மதுரை ஜூன் 23
“பாரதிய ஜனசங்கம் ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ படத்திற்கு மதுரை காளவாசல் மண்டல் சார்பாக பாஜக நிர்வாகிகள் மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர்
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷியாம் பிரசாத் முகர்ஜி “பாரதிய ஜனசங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். மேலும் ஜவர்ஹலால் நேரு மந்திரி சபையில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1980 ஆம் வருடம் பாரதிய ஜன சங்கம் பாரதிய ஜனதா கட்சியாக பெயர் உருவெடுத்தது. இன்று இந்தியாவில் மாபெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உருவாகி அதன் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை தலைமையில் வலுவான எதிர்க்கட்சியாக பாஜக மாறி வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனசங்கம்
ஸ்தாபகர் “ஷ்யாம்பிரசாத் முகர்ஜியின்” 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை காளவாசல் மண்டலில், மாவட்ட துணைத் தலைவர் ராஜ்குமார் தலைமையிலும், காளவாசல் மண்டல் தலைவர் முனைவர் பிச்சைவேல் முன்னிலையில் பிரசாத் முகர்ஜியின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பாலமுருகன், பொருளாதார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்டச் செயலாளர் சாய் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட பொதுச்செயலாளர் ஸ்ரீ ராம், மண்டல் செயலாளர் அ.கண்ணன், கிளைத்தலைவர் பொன்முருகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் கரீம்பாய், கலை கலாச்சார பிரிவு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், திருக்கோவில் பிரிவு கண்ணன்சாமி, மகளிரணி மாவட்ட செயலாளர் உமாராணி மற்றும் வல்லத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியம் வீராணம்பட்டி திரு ஏழுமலை அவர்கள் எனது மகளின் பூப்பூ நீராட்டு விழாவிற்கு, வருகை தரும் உறவினர்களும், நண்பர்களும் மரக் கன்றுகள் வழங்க வேண்டும் என திரு நரேந்திரன் கந்தசாமி கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, திரு நரேந்திரன் கந்தசாமி அவர்களின் அறிவித்தலின்படி ஐயா திரு மு கந்தசாமி வரவனை ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் மூலமாக 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளும், பழக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேலும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் கருப்பையா, காளிமுத்து, கவிநேசன், செந்தமிழ்செல்வன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள். பசுமைக்குடி தன்னார்வலர்கள் போட்டோவுடன் பேனர் வைத்து வரவேற்ற குடும்பத்திற்கு பசுமைக்குடி தன்னார்வலர்கள் சார்பில் நன்றி தெரிவித்தார் கருப்பையா அவர்கள்.



தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை தீக்கதிர் அலுவலகம் எதிரே உள்ள திருவள்ளுவர் நகரில் இரத்த தானம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த பரிசோதனை முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு மாபெரும் அன்னதானம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் எல்லீஸ் பிரபு, எல்லீஸ் சரவணன், கணபதி, ஆதிகேசவன், பிரபா, சக்திமுருகன், தங்கப்பாண்டி, பால்பாண்டி, வெற்றி, ரோம்லஸ், பிரசன்னா, சிவா, தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

3 உண்மைகள் மற்றும் 3 கேள்விகளுக்கு – மோடி அரசு பதில் சொல்ல வேண்டும்!
1.
உண்மை – தாள் கசிவுக்கு எதிரான சட்டம் அறிவிக்கப்படவில்லை, இது குறித்து கல்வி அமைச்சரிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது, இந்த சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்த சட்டத்திற்கு 13 பிப்ரவரி 2024 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது, ஆனால் நேற்று இரவுதான் சட்டம் அறிவிக்கப்பட்டது.
கேள்வி – மோடி அரசின் கல்வி அமைச்சர், சட்டம் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அதன் விதிகளை உருவாக்குவதாகவும் மீண்டும் பொய் சொன்னது ஏன்?
2.
உண்மை – முதலில் தாள் கசிவை மறுத்த கல்வி அமைச்சர், பின்னர் குஜராத், பீகார், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கைது செய்யப்பட்ட போது, சில இடங்களில் உள்நாட்டில் தாள்கள் கசிந்ததால், மீண்டும் தேர்வை நடத்த முடியாது என்று கூறுகிறார். . கடந்த 2015-ம் ஆண்டு 44 மாணவர்கள் மட்டுமே முன் மருத்துவத் தேர்வில் ஈடுபட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 6 லட்சம் பேருக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
கேள்வி – நீட் தேர்வில் கூட, 0.001 முறைகேடு நடந்திருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு உச்ச நீதிமன்றம் கூறியும், “முறைகேடு” என்ற விஷயத்தை ஏற்றுக் கொண்ட மோடி அரசு ஏன் தேர்வை மீண்டும் நடத்தவில்லை? “?
3.
உண்மை – NTA 9 நாட்களில் 3 முக்கிய தேர்வுகளை ரத்து செய்துள்ளது அல்லது ஒத்திவைத்துள்ளது. சட்டம் இயற்றப்பட்ட பிறகும், UP போலீஸ் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு வாரியத்தின் (UPPRPB) தாள் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் கசிந்தது, அதன் இணைப்புகள் குஜராத்தில் உள்ள ஒரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
கேள்வி – காகிதக் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றிய பின்னரும் ஏன் தாள்கள் கசிகின்றன? கடந்த 7 ஆண்டுகளில் 70 ஆவணங்கள் கசிந்தபோது, மோடி அரசு அதன் மீது ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை?
பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் குறுக்கீடுகள் மற்றும் பக்கவிளைவுகளில் இருந்து கல்வி அமைப்பும், தன்னாட்சி அமைப்புகளும் விடுபடாத வரை…
புதிய சட்டம் கொண்டு வருவது பாஜகவின் வெள்ளையடிப்பு
…அதுவரை இந்த மோசடி, திருட்டு, ஊழல் தொடரும்!

கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் செயலுக்கு அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநிலத் தலைவர் ஆபேல்மூர்த்தி எதிர்ப்பு தெரிவித்து பேசினார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி மற்றும்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன் மற்றும் வட்டாட்சியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில்,
கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களை நீக்கி பள்ளிக்கல்வி துறையோடு இணைக்க கூடாது.
ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த சட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். அந்த சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் கட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடத்தை பயன்படுத்தும் நாம் அவர்களின் சட்டத்தை நீக்குவதற்கு முயற்சி எடுப்பது மிகவும் கண்டனத்திற்கு உரியது. கள்ளர் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்தால் மாணவர்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டு அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வரும்போது திருநீறு கயிறு உள்ளிட்ட மத அடையாளங்களை மாணவர்கள் அணியக்கூடாது என்ற அறிக்கையை செயல்படுத்த கூடாது.
அவரவர்கள் மத அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே மாணவர்கள் எப்போதும் போல் கயிறு,திருநீறு அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். என பேசினார்.
இந்நிகழ்வில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் செக்கானூரணி பகுதி தலைவர் செல்லப்பாண்டி மற்றும் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.