Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 28)

செய்திகள்

All News

“2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்” : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!

"2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை நிச்சயம் ஒழிக்கப்படும்" : அமைச்சர் சி.வி.கணேசன் உறுதி!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான நேற்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை தொடங்கியது. பின்னர் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், ” குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்க அலுவலர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 65 குழந்தை தொழிலாளர்களும், 274 வளரிளம் பருவத் தொழிலாளர்களும், 196 கொத்தடிமைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் குழந்தை தொழிலாளர் முறை தமிழ்நாட்டில் அகற்றப்படும்” என தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சட்டசபையில் இன்று விஸ்வரூபமாகும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள்- அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் இதர கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளனர்.

முன்னதாக கள்ளக்குறிச்சி சென்ற தமிழக அமைச்சர்கள் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டையே பதறவைத்துள்ளது கள்ளக்குறிச்சியின் மரண ஓலம். தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ரூ10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளது. இதற்கு தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவும் ரூ1 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை பல்வேறு தரப்பினர் மீது தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யபட்டு விவாதம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளன. இது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விரிவான பதிலைத் தரக் கூடும். முன்னதாக கள்ளக்குறிச்சி சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் விரிவான பதிலைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று தமிழக சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா..!

மதுரை மாவட்டம் ஆலாத்தூரில் நேயா டிரஸ்ட் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. மடீட்சியா செயலாளர் கோடீஸ்வரன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா ராஜவேல் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நேயா டிரஸ்ட் நிறுவனர் அமுதா சதீஸ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மடீட்சியா துணைத் தலைவர் அசோக் மரக்கன்றுகளை வழங்கினார்.தமிழ்நாடு மெர்க்ககன்டைல் வங்கியின் ஓய்வு பெற்ற மதுரை முதுநிலை மேலாளர் அய்யம்பெருமாள், ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பழனிக்குமார் ஆகியோர் பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்புக்,பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர்.

ஓய்வு பெற்ற டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி ஏஜென்ட் பரமசிவம், டி.எம். புட்ஸ் நிறுவனர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் சுபம் கோல்டு பைனான்ஸ் ஹேமா முத்துப்பாண்டி நன்றி கூறினார்.

பாரத் ஜோடோ நாயகன் திரு. ராகுல் காந்தி (எம்.பி – ரேபரேலி, உத்தரபிரதேசம்) அவர்களின் 54 வது பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடும் விழா…19.6.2024

திட்ட அமலாக்கம்: கிரீனரா; கரூர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம்; அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி

திட்டத் தலைமை: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம், இந்திய கூட்டணி

திட்ட ஆதரவாளர்: பாலா டிரஸ்ட், பசுமைக்குடி

திட்ட வழிகாட்டுதல்: செல்வி ஜோதிமணி (எம்.பி – கரூர் தொகுதி)

திட்ட கட்டமைப்பு: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG)

திட்ட இலக்கு: அரவக்குறிச்சியை பசுமையான மற்றும் நிலையான அரவக்குறிச்சியை உருவாக்கி, நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு பழங்கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் விதமாக விழா நடைபெற்றது.

விழாவில் வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு கந்தசாமி அவர்களும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் திரு கருப்பையா, திரு காளிமுத்து, திரு பாலசுப்ரமணியம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் திரு ஆனந்தன், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன், அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர்கள். திருமதி பஜிலா பானு, திரு ரவி, திரு மைக்கேல், அரவக்குறிச்சி காங்கிரஸ் வட்டார தலைவர் திரு காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் செயலாளர் திரு முகமது அலி மற்றும் அரவக்குறிச்சி பாவா நகர், கரடிப்பட்டி, சேவியர் தெரு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திட்ட அமலாக்கம்: கிரீனரா; கரூர் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம்; அரவக்குறிச்சி சிறப்பு நிலை பேரூராட்சி

திட்டத் தலைமை: காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவு & சமூக ஊடகம், இந்திய கூட்டணி

திட்ட ஆதரவாளர்: பாலா டிரஸ்ட், பசுமைக்குடி

திட்ட வழிகாட்டுதல்: செல்வி ஜோதிமணி (எம்.பி – கரூர் தொகுதி)

திட்ட கட்டமைப்பு: சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG)

திட்ட இலக்கு: அரவக்குறிச்சியை பசுமையான மற்றும் நிலையான அரவக்குறிச்சியை உருவாக்கி, நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பல்வேறு பழங்கள் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் விதமாக விழா நடைபெற்றது.

விழாவில் வரவனை ஊராட்சி மன்ற தலைவர் திரு கந்தசாமி அவர்களும் மற்றும் பசுமைக்குடி தன்னார்வலர்கள் திரு கருப்பையா, திரு காளிமுத்து, திரு பாலசுப்ரமணியம், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் திருமதி ஜெயந்தி மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் தலைவர் திரு ஆனந்தன், அரவக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு, கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பாலமுருகன், அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர்கள். திருமதி பஜிலா பானு, திரு ரவி, திரு மைக்கேல், அரவக்குறிச்சி காங்கிரஸ் வட்டார தலைவர் திரு காந்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநிலத் செயலாளர் திரு முகமது அலி மற்றும் அரவக்குறிச்சி பாவா நகர், கரடிப்பட்டி, சேவியர் தெரு பொதுமக்கள், தூய்மை காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஆறுமுகம் அகடாமி பள்ளியின் பசுமை அரசி செல்வி நிரஞ்சனா அவர்கள் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தார்.

மதுரையில் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தங்க தேர் இழுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

ராகுல் காந்தி எம்.பி யின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் அய்யனார் கோயில் அருகில் உள்ள வி.என்.ஆர் நீதிராஜாராம் கொடிக்கம்பத்தில் கொடியேற்றி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் துவா செய்யப்பட்டு ஏழைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மீர்பாஷா தலைமை வகித்தார்.

பின்னர் காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் ராகுல் காந்தி நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கே.ஆர்.சுரேஷ் பாபு எஸ் என் பாலாஜி தலைமை வகித்தார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் அதனைத் தொடர்ந்து மேல ஆவணி மூல வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு நாஞ்சில் பால் ஜோசப்,
பூக்கடை கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் மூவேந்திரன், எம்.போஸ், தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.என் பாலாஜி இப்படை ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழா..!

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பகுதியில் ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் முரளி பாஸ்கர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் தலைமை வகித்தார். டிரஸ்ட் பொருளாளர் திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.

இதில் சக்திவேல், கே.ஆர்.கே ராதாகிருஷ்ணன், பாண்டி, சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற மதுரை நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!

மதுரையில் ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!

மதுரை,ஜூன்.17-

மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர ரசிகரின் மகள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் கல்வி பயில முடியாமல் இருந்ததை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் அழகர்சாமி தனது சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாயை வழங்க முன் வந்தார். நிதி உதவி வழங்கிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை 59-வது வார்டு கிளை ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகன்.இவரின் மகள் ரம்யா,
இவர் டி.பி ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்றுள்ளார். நன்றாக மதிப்பெண் எடுத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரியில் சேர முடியாமல் இருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி மாணவி ரம்யா கல்லூரி மேற்படிப்பு பயில தனது சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க முன்வந்தார்.

இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவி ரம்யாவுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா எல்லீஸ் ரஜினி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன் மற்றும் அவனியாபுரம் நகரச் செயலாளர் இன்ஜினியர் அவனி பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகர் தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் பி.அழகர்சாமி தனது சொந்த செலவில் கல்வி உதவி தொகையை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி குமரவேல் மற்றும் பாலநமச்சிவாயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்வி உதவித் தொகையை வழங்கிய ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் :-
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தலைவர் ரஜினிகாந்த் பெயரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் 59- வது வார்டு ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகனின் மூத்த மகள் ரம்யா டி.பி ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரின் தந்தையான ரஜினி முருகன் பெயிண்டிங் கூலி வேலை பார்த்து வருகிறார்.

எனவே மாணவி ரம்யா அடுத்த கட்ட கல்லூரி மேற்படிப்பு தொடர்வதற்காக தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வி பயில்வதற்காக கல்லூரி கட்டணத் தொகை ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் விதம் 3 வருடங்களுக்கும் சேர்த்து 75 ஆயிரம் ரூபாய் கட்டணத் தொகை மற்றும் யூனிபார்ம், கல்வி உபகரணங்கள் வாங்கும் செலவு உள்பட 1 லட்சம் ரூபாய் எனது சொந்த செலவில் வழங்கினேன். மேலும் மகபூப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம் என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதயகுமார், ஹரிஷ், அஜித், சந்திரன், ரமேஷ், மலைகார்த்திக், மாதவன், ஜெயமணி, முருகவேல்,சரவணன், அவனி கார்த்திக், விக்கி, ரீகன், ராகுல் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் தீவிர ரசிகரின் மகள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததை கேள்விப்பட்டு உடனடியாக உதவி செய்த ரஜினி ரசிகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மதுரை மருத்துவக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி..!

உலக இரத்த கொடையாளர் தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரத்த கொடை பற்றிய விழிப்புணர்வு தகவல் கல்வி தொடர்பு பதாகைகளை திறந்து வைத்தபின் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

ஆட்சியரக வளாகத்தில் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகளின் இரத்த தான விழிப்புணர்வு நடைபேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.நடை பேரணி பனகல் சாலை வழியாக அரசு இராசாசி மருத்துவமனை கூட்ட அரங்கை அடைந்தது. அதன்பின் கருத்தரங்கம் நடைபெற்றது. இரத்த கொடையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் செல்வராஜ், மாவட்ட இரத்த பரிமாற்று அலுவலர் டாக்டர் சிந்தா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி உட்பட டான்சாக்ஸ் பணியாளர்கள் இரத்த வங்கி அலுவலர்கள், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், 153 முறை இரத்த தானம் செய்த ஜோஸ், 114 முறை இரத்த தானம் செய்த வரதராஜன் மற்றும் பாம்பே குரூப் போன்ற அரிய வகை இரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா..!

மதுரை மாவட்ட நபார்டு வங்கி நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு விழா

மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகளுக்கு சிறுதானிய மதிப்பு கூட்டு உணவு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் நிறைவு நாள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆண் மற்றும் பெண் தண்டனை சிறைவாசிகள் 50 நபர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிக்கு நபார்டு தேசிய வங்கியின் நிதி உதவி பெற்று சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆனது பயிற்சியினை 30 தினங்களில் 32 வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் பேக்கரி பொருட்கள் தயாரிக்க சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தியது.

அதன் நிறைவு நாளில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி தலைமையில், மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் மதுரை நபார்டு வங்கியின் பொது மேலாளர் சக்திபாலன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன் மற்றும் சாஜர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஜாஸ்மின் ராஜ்குமார் மற்றும் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியில் பங்கேற்ற சிறைவாசிகளுக்கு சான்றிதழும் தொடர்ந்து தொழில் புரியும் விதமாக தொழில் கருவிகளும் வழங்கினார்கள்.

இப்பயிற்சியில் ஹெல்த் மிக்ஸ், கவுனி கஞ்சி மிக்ஸ், பல தானிய அடை மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், ராகி இட்லி மிக்ஸ், வரகரசி முறுக்கு, குதிரைவாலி ரிப்பன் பக்கோடா, கம்பு மிளகு சேவு, கம்பு ஓமப்பொடி, வரகரிசி பட்டர் சேவு, கம்பு லட்டு, கருப்பு கவுனி மிக்ஸ், வரகு களி மிக்ஸ், சோளபணியாரம், சோளபக்கோடா, சிவப்பரிசி இடியாப்ப மாவு மிக்ஸ், ராகி புட்டு மிக்ஸ், சாமை தட்டை ராகி அல்வா, ராகு சாக்கோ கேக் உள்ளிட்ட 32 வகையான இனிப்பு கார வகைகள் தயாரிக்கும் முறை கற்றுக் கொடுக்கப்பட்டது.

பயிற்சியின் இறுதியில் பேக்கிங் மிஷின், சீலிங் மெஷின், தராசுகள், பேக்கிங் ஸ்டிக்கர், பாட்டில் வகைகள், பேக்கிங் கவர் மெட்டீரியல்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இவர்கள் மூலம் தயார் செய்யப்படும் சிறுதானிய பொருட்கள் சிறை சந்தையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் முடிவில் சாஜர் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி நசீம்பானு நன்றி கூறினார்.

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்னாள், இந்நாள் மாணவர்கள்..!

தேனி மாவட்டம் திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆலமரம், அரசமரம், வில்வமரம், அத்தி மரம், நாவல் மரம் உள்ளிட்ட மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தன்னார்வலர் த. ராம்குமார் மரம் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக நன்செய் தன்னார்வ அமைப்பு நிறுவனர் பசுமை செந்தில், அற நல்லுலகம் பொதுநல அறக்கட்டளை நிறுவனர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ் அழகர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் முறுக்கு பாண்டி கார்த்தி மணியன், ஆட்டோ ரெங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சக்திவேல் ஒருங்கிணைத்தார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES