மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த சலூன் கடை தொழிலாளி சூரியமூர்த்தி என்பவர் ஏழை எளிய முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இளைஞர் சூர்யமூர்த்தி மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
அவர்களை ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்றார்.
ஐதராபாத்: காங்.,முன்னாள் தலைவர் சோனியா தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். இவரது மகன் ராகுல் கேரள மாநிலம் வயனாட்டின் எம்.பி.,யாக உள்ளார். வரும் பார்லி., தேர்தலில் தெலுங்கானா மாநிலம் ஹம்மம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியாவை நேரில் சென்று வலியுறுத்தி கேட்டு கொண்டார். இது தொடர்பாக காங்., கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவரிடம் வழங்கினார்.
” இது குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும் என சோனியா பதில் அளித்துள்ளார். நிச்சயம் வெற்றிசமீபத்திய சட்டசபை தேர்தலில் காங்., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் ரேவந்த் ரெட்டி , மக்களை கவரும் பெண்கள் இலவச பஸ், ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூ. 10 லட்சம் என்ற அறிவிப்பு நல்ல பெயரை தந்துள்ளது. இதனால் வரும் பார்லி., தேர்தலில் மாநிலத்தில் 17 தொகுதிகளையும் காங்., வெல்லும் என்ற நம்பிக்கையில் முதல்வர் உள்ளார். தெலுங்கானா உருவாக காரணமாக இருந்த சோனியாவை மாநில மக்கள் தாயாக கருதுகின்றனர், இங்கு சோனியா போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றார் முதல்வர் ரெட்டி.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் சார்பாக அவசர பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தலைவராக வளசை முத்துராமன் .ஜி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக பொதுச்செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி.முரளி கிருஷ்ணா, தொழில்நுட்பக்குழு தலைவர் சிலம்ப இமயம் ராஜமகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன், முதன்மை போட்டிகள் இயக்குனர் மகா குருவிக்டர் குழந்தைராஜ், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் லட்சுமணன், தஞ்சாவூர் சேலம் மாவட்ட செயலாளர் சலேந்திரன் மாவட்ட செயலாளர் மா குரு ரத்னகுமார் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சென்னை கேசவலு, சென்னை மாவட்ட செயலாளர் சுப்பையா, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஹரிதாஸ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட சிலம்பாட்டக்கழக செயலாளர் சரவணசுப்பையா, தமிழ்ச்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பணி நிரந்தரம் உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இன்று வியாழக்கிழமை இரண்டாம் நாளாக கோரிக்கை அட்டை அணிந்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் மதுரையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட செவிலியர்களின் போராட்டம் வெல்வதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் க.நீதிராஜா மற்றும் தோழர்கள் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன், நாகராஜன் ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், சமூகப் பணித்துறை சார்பாக அனைத்து கல்லூரிகளுக்கு இடையே கலைப்போட்டி (டோட்டம் 2024) நடைபெற்றது.
இதில் 35-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனி திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் அதிக புள்ளிகள் பெற்று அனுப்பானடி ரோட்டில் உள்ள மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் இடத்தை பெற்று கோப்பையை தட்டி சென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற வீராங்கனைகளை மதுரை காந்தி என்.எம்.ஆர் கல்லூரியின் தலைவர் M.K.ஜவஹர்பாபு, காரியதரிசி M.V.ஜனரஞ்சனி பாய், செயலாளர் N.M.H.கலைவாணி, முதல்வர் முனைவர் K.S.கோமதி,துணை முதல்வர் மஹிமா ஆகியோர் பாராட்டினர்.
மதுரை துரைசாமி நகரில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில ரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர்கள் போஸ், குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் ரவி, மோகன், பெருமாள், அப்பாஸ், செயற்குழு உறுப்பினர்கள் குத்புதீன், ரமேஷ், மாவட்டத் தலைவர்கள் பாலாஜி, அய்யனார், தாமரைக்கண்ணன், சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் சி.க.சுஜாதா கூறுகையில் :-
இன்று மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள எம் ஆர் பி செவிலியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கை அட்டை அணிந்து பணிகளில் ஈடுபட்டோம்..
8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி மற்றும் ஐ.பி.ஹெச்.எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தின் போது இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.
போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏராளமான செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.
மேலும் 03/02/2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், 21/02/2024 அன்று சென்னையில் முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையாளர் முனைவர் லோகநாதன் தொடங்கி வைத்தார்
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தல்லாகுளம் தமுக்கம் சந்திப்பில் சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு மாத தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை துண்டு பிரச்சார நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பைகளை வழங்கியும் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் போக்குவரத்து துணை ஆணையர் குமார், பொறுப்பு காவல் கூடுதல் காவல் ஆணையர் திருமலைகுமார் மற்றும் உதவி ஆணையாளர்கள் செல்வம்,மாரியப்பன் மற்றும் போக்குவரத்து கழக கூடுதல் ஆணையர் சத்யநாராயணன் மற்றும் மதுரை வடக்கு ஆர்.டி.ஓ சித்ரா, தெற்கு ஆர்டிஓ சிங்காரவேலு, மதுரை வாடிப்பட்டி மேலூர் வடக்கு தெற்கு மத்திய பகுதி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாநகர போக்குவரத்து காவல் நிலைய காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை காவலர்கள் 100 க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட வாகன விற்பனை பிரதிநிதிகள் மற்றும் டூவீலர் மெக்கானிக் அசோசியேசன் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 400 பேர் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
பீகாரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது அவரது வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ நடந்து வரும் நிலையில் வாகனம் (கான்வாய்) மீது நடத்தப்பட்ட தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், மால்டா என்ற இடத்தில் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திராய் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் யார் கைது செய்யப்பட்டுள்ளார்கள்? யார் தாக்குதலுக்கு பின்னால் இருக்கிறார்கள்? என்று தெரிவிக்கப்படவில்லை.
இந்த தாக்குதலில் அந்த காரின் பின் கண்ணாடி உள்ளிட்டவை உடைந்துள்ளது. யார் இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த தாக்குதல் நடந்த இடம் பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் எல்லை பகுதியில் தான் நடந்துள்ளது. மால்டா என்ற பகுதியில் நடந்தது. இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எந்த ஒரு காவல்துறையும் இதுவரை பதில் அளிக்கவில்லை. தற்போது அவருக்கான பாதுகாப்பு வாகனத்தில் ராகுல் காந்தி ஓய்வெடுத்து வருகிறார். ராகுல் காந்திக்கு எந்த பாதிப்பும் இல்லை..
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்த (TNRERA AGENTS MSTAR RERA AGENTS WELFARE ASSOCIATION- பொதுக்குழு கூட்டம் மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தோடு, ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்கத்தின் தலைவர் காரைக்காலை சேர்ந்த டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் தலைமையில் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் விருதுநகர் காளீஸ்வரி, பொருளாளர் தேனி சீனிவாசன், துணைத்தலைவர்கள் திருச்சி சண்முகம், காரைக்குடி அலிஅக்பர், திருநெல்வேலி அப்துல்அஜீஸ், இணை செயலாளர்கள் மதுரை கண்ணன் பாபு, பரமக்குடி சரவணன், சென்னை சாதிக்பாஷா, துணை பொருளாளர் பிரபு மற்றும் ஒருங்கிணைப்பாளர் தஞ்சாவூர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில TNRERA பதிவு பெற்ற ரியல் எஸ்டேட் முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் டாக்டர் எல்.எஸ்.பி சோழசிங்கராயர் பேசுகையில்,
தமிழக அரசு ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்காகவும், முகவர் நலன்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வந்தாலும், வாடிக்கையாளருக்கும். முகவர்களுக்கும் போதுமான தகவல்கள் கிடைக்கப் பெருவதில்லை. தொழில் விழிப்புணர்வுக்காக எங்கள் அமைப்பு தமிழ்நாட்டிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து ரியல் எஸ்டேட் முகவர்களையும் எங்கள் அமைப்பில் சேர்த்து வருகின்றோம்.
இதுவரை சுமார் 600 TNRERA AGENTS இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
முக்கிய தீர்மானமாக ரியல் எஸ்டேட் முகவர்கள் தனி மனிதராலோ, நிறுவனங்களாலோ ரியல் எஸ்டேட் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்த சங்கத்தில் முறையிடும் பட்சத்தில் தீர்வு காண முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என பேசினார்.