Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 51)

செய்திகள்

All News

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…

திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது.

இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவன தலைவரும் ஃபெட்காட் சவுத் இந்தியாவின் தலைவருமான மனித விடியல் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரசாத், ஹர்ஷவர்தன், தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் மாநில தலைவர் புருஷோத்தமன், மாமாகா மாநில அமைப்பு செயலாளர் பாரூக் அப்துல்லா இவ்விழாவில் பஜூலுல் ஹக் யூசப், அன்சாரி, துரை மாணிக்கம், மைதீன், பாபா அன்சாரி, முகமது ஜமால், ரியாஜ் அஹமத், ஷேக் பரீத், அம்ஜா சர்புதீன், இலியாஸ், அன்சர், மைதீன், பக்ருதீன், பாலமுருகன், அமீர், கனவா பீர் பாலன், ராயல் காஜாமைதீன், முகமது இப்ராஹிம், முஸ்தாக் ஹபீப், சந்திரன், இஸ்மாயில், ஈசா, ஹாஜி நசுருதீன், ஹாஜி அப்துல் கரீம், பிலால் உசேன், ஜமாலுதீன்.

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா..!

மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு சங்கத்தலைவர் சுப்புராஜ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மதுரை கனகு முன்னிலை வகித்தார். பொருளாளர் பி.டி.ஆர் பழனி முருகன் வரவேற்று பேசினார்.
வல்லரசு பார்வர்ட் பிளாக் நிறுவனர் தலைவர் அம்மாவாசி வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்டம் குரண்டி ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.ஜி சிவசக்தி கலந்து கொண்டு பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நிதி உதவியை வழங்கினார்.

இதில் நிர்வாக குழு தலைவர் கே.வி.ஆர் காமராஜ், தலைமை ஆலோசகர் திரைப்பட இயக்குனர் ரே, தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு,ரங்கராஜன், சட்ட ஆலோசகர் பிரேம்குமார், துணைத்தலைவர் ஜெரோம், தலைமை மாவட்ட பொறுப்பாளர்கள் சிலம்பம் சாந்தி, மீனா, கோவை மாவட்ட பொறுப்பாளர் மகா.ரம்யா, மகளிரணி பொறுப்பாளர் இயக்குனர் இளையகுமார், வழக்கறிஞர் செந்தில்குமார், செய்தி தொடர்பாளர் மீடியா இபு, அலங்கை ராஜேந்திரன், அழகுபாண்டி, ஒளிப்பதிவாளர்கள் மதுரை பாண்டி, ராஜ்குமார் மற்றும் மூத்த நடிகர்கள் மீசை.அழகப்பன், மீசை.மனோகரன், அலங்கை பிரபு, மோகன், வேல்முருகன், மகளிரணி ரீனா, ஜோதிமீனா, தனலட்சுமி, ஜோதிசங்கர், ஜெனிபர் நிஷா உள்பட மற்றும் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், துணை நடிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tirumangalam, Madurai district, on behalf of FNI and GPBNET, Annai Vasantha Trust, a Pongal gift giving ceremony and 600th consecutive day food distribution ceremony

In Tirumangalam, Madurai district, Tamilnadu on behalf of FNI and GPBNET, Annai Vasantha Trust, a Pongal gift giving ceremony and 600th consecutive day food distribution ceremony was held under the chairmanship of trust president amudhavalli Palanimurugan.

Secretary Chitra Raghupathi presided over the event. Tirumangalam Nagar People’s Council President Ira Chakaiah and Tolkappiyar Council President Irulappan presented Pongal packages as special invitees.

Trust Honorary Advisor Alagarsamy, Vice President Arumugam, Coordinator Ganesanmurthy delivered the greetings.

At the end of the program Founder of the Trust s.m. Raghupati and Treasurer Aruljyothi Arumugam gave vote of thanks.

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது..!

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ் ராம்பாபு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் படத்திற்கு மகன் ஏ.ஜி.எஸ்.ஆர்.சச்சின் ஹரேஷ்பாபு, மகள் சுப்ரியா, மற்றும் மருமகன் அச்சுதானந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏ.ஜி.எஸ் கோபிபாபு, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.கே. ராஜேந்திரன், தமாகா மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்ட தலைவர் ராஜாங்கம், காங்கிரஸ் பிரமுகர் ஐ.சிலுவை, அயல், ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெகநாதன் மற்றும் சங்கர்,குமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக நடந்த போட்டியை மூ.மு.க மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி தொடங்கி வைத்தார்..!

மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஜெயசந்திரன், சேர்மன் தனசேகரன் செயலாளர் பிரவீன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் காசிவிஸ்வம், ரமேஷ் உள்பட பங்கேற்றனர்

அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு..!

மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு பத்திரிகை துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறை முழுவதும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மட்டும் போதுமானதாக உள்ளது.

அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு இடவசதி குறைவால் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் உள்ள மரத்தடியில் நின்று செய்தி சேகரித்து வருகின்றனர்.

மேலும் மழைக்காலங்களில் செய்தியாளர்கள் இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. எனவே அச்சு ஊடக செய்தியாளர்கள் பயன்படுத்துகின்ற வகையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அல்லது புவியியல் கனிம வளத்துறை அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனி அறை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதில் துணைச் செயலாளர்கள் சுரேஷ், முருகேசன், புஷ்பராஜ், இணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திக், நாகேந்திரன், ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் மாயகிருஷ்ணன், அல்லா பக்ஸ்,, ராமர், மூர்த்தி, சண்முகவேல், உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

குடிசையில் வாழும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் நிர்வாகிகள்

எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் இணைந்து குடிசையில் வாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது

மதுரை, ஜனவரி.10-

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் தொடர்ந்து 600 வது நாள் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு செயலாளர் சித்ரா ரகுபதி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருமங்கலம் நகர் மக்கள் மன்ற தலைவர் இரா.சக்கையா, தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன் ஆகியோர் பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.

டிரஸ்ட் கவுரவ ஆலோசகர் அழகர்சாமி, துணைத்தலைவர் ஆறுமுகம், ஒருங்கிணைப்பாளர் கணேசன்மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் நன்றி கூறினார்.

மதுரை கான்பாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கிய பாஜக நிர்வாகிகள்..!

உ.பி.மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த கேத்ர டிரஸ்ட் சார்பாக மதுரை காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து கிருஷ்ணாபுரம், கான்பாளையம், பூந்தோட்டம், காமராஜர்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்,ஸ்ரீராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தின் புகைப்படம் மற்றும் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கிய நிர்வாகிகள், பொதுமக்களாகிய நீங்களும் கும்பாபிஷேகத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்வில் பாலரெங்காபுரம் பாஜக மண்டல் தலைவர் மணிமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி, துணைத்தலைவர்கள் பர்பத்சிங் & தினேஷ், கிளை தலைவர்கள் கோபால், குப்புசாமி, காசி விஸ்வநாதன், பிரபாவதி,மகளிரணி அமுதா,சாந்தி,மைதிலி, மற்றும் குமார் திருநாவுக்கரசு, சரவணகுமார், விஷ்ணுவர்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பாலம் கட்ட அனுமதி வழங்க கோரி மனு…!

மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களது செலவில் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மனு வழங்கினார்

மதுரை, ஜனவரி.09-

மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கே.புளியங்குளம் வீரதண்ட கோயில் உள்ளது. இந்த கோயிலில் 800-க்கும்  மேற்பட்டோர் தங்களது குலதெய்வமாக சுவாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.

அந்தப் பள்ளம் அரசாங்க புறம்போக்கு இடத்தில் வருகிறது. இந்த கோவில் செக்கானூரணியில் உள்ள கேரன் பள்ளியை ஒட்டி உள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும்  இந்த பாதையில் பெரிய மெகா பள்ளம் உள்ளதால் தங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்ய போக முடியவில்லை.

எனவே பொதுமக்கள் தங்கள் செலவில் சிறு பாலம் கட்ட விரும்புகிறார்கள். எனவே இந்த பாலம்  கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட மாநாடு..!

தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட மாநாடு ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஒத்தக்கடை திருமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மதுரை மாவட்ட செயல் தலைவர் பி.எம்.ராஜாமாறன், ஐ.டி விங் மாநில தலைவர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பேசியதாவது :-

இந்திய நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களே வருவார்கள் என கருத்து கணிப்பு சொல்கிறது. எனவே மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் செயல்பட்டு வருகிறார். எனவே தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

எனவே பாஜக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு நம் அனைவரும் பாடுபட்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES