Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 58)

செய்திகள்

All News

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி
நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம், திருமதி. காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரி
அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் திரு பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார்.

மேலும் மதுரா மில் தலைவர் தாமோதரக்கண்ணன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் செயலாளர் விஜயராகவன் மற்றும் மதுரை மாவட்டம் கைத்தறி தொழிற்சாலை செயலாளர் எஸ்.பி.சர்வேஸ்வரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

பின்னர் சிறப்பு
விருந்தினர்கள் அறிவியல் மற்றும் கலை நுட்பத்தின் முக்கியத்துவத்தை
குறித்து விவரித்தனர். இந்தக் கண்காட்சியில் இயற்பியல் வேதியியல்,
தாவரவியல் விலங்கியல் மற்றும் கலை சார்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ
மாணவியர்களின் படைப்புகள் இடம் பெற்று இருந்தன. கண்காட்சியில்
1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கண்காட்சியை சிறப்பு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை
பள்ளியின் முதல்வர் திருமதி.அனிதா தலைமையில் ஒருங்கிணைப்பாளர்
திருமதி.சிந்துஜா மக்கள் தொடர்பு மேலாளர் திரு.ரகுராம் செல்வகுமார்
விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன், சுரேஷ் மற்றும்
ஆசிரிய ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

மதுரையில் இ.டி.ஐ.ஐ, அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து சுயதொழில் பயிற்சி துவக்க விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசுகையில் :- பயிற்சி பெற்ற பின்பு நல்ல தொழில் முனைவோராக மாறுவதற்கான தகுதிகள் செயல்பாடுகள் சந்தைப்படுத்துதல் அதைத்தொடர்ந்து ஆன்லைன் வியாபாரம் வரை திறமையுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என பேசினார்.

மதுரை மாவட்ட தொழில் மைய அலுவலர் சாமுவேல் ராஜா பேசுகையில், மானியத்துடன் சுய தொழில் துவங்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் சிறந்த தொழில் முனைவோராக மாறுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பேசினார்.

சௌத் இந்தியன் வங்கி மேலாளர் மீனாட்சி சுந்தரி பேசுகையில், தொழில் துவங்க அதிக அளவில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகள் தயாராக இருப்பதாகவும் வாய்ப்பை பெண்கள் முறையாக பயன்படுத்தி தொழில் முனைவராக மாற வேண்டும் எனவும் முத்ரா லோன் வாங்குவதற்கான தகுதியை பெண்கள் பெற வேண்டும் என பேசினார்.

பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் பேசுகையில், பகுதியில் உள்ள அனைத்து பெண்களும் தங்களது தேவைக்கான பொருட்களை சொந்தமாக உற்பத்தி செய்து வாழ்க்கையில் உயர வேண்டும் என கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் திவ்யா மற்றும் கார்த்தியாயினி ஆகியோர் நன்றி கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் அவர்கள் ஒரு மனதாக ஏற்கப்பட்டார்.

கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்தெழு குழுக்களின் ஆலோசகராக ஏற்கப்பட்டார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக தி. ரமேஷ் ஆசிரியர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆதித்தமிழர் பேரவை சா .சுப்பிரமணி மாவட்ட நிதி செயலாளர் ஆதித்தமிழர் பேரவை மற்றும் துணை அமைப்பாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர்.

கூட்டத்தில் இணைந்து எழு தமிழ்நாடு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மேரி லில்லி ஆகியோர் சென்னையில் இருந்து வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த அன்பர்கள் பங்கேற்றனர்.

மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.

மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது.

நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.சந்திரன் மற்றும் இயக்குனர் எம்.சி. அபிலாஷ், பொருளாளர் திருமதி நிக்கி புளோரா, முதல்வர் திருமதி ஞானசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.
பள்ளியின் இயக்குநர் எம்.சி.அபிலாஷ் வரவேற்புரையாற்றி பேசுகையில் :-மதுரையில் இவ்வளவு உயரமான கொடிக்கம்பத்தை நிறுவிய முதல் நிறுவனம் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் முன்னோடி எங்கள் பள்ளி என்று பேசினார்.

இதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் ஆர்.சிவபிரசாத், ஐ.பி.எஸ் மாணவர்களிடையே பேசுகையில்:-

ஹைதராபாத் போலீஸ் பயிற்சியில் தான் பெற்ற அனுபவங்களிலிருந்து, இந்தியக் கொடியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூகங்கள் மற்றும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளில் இந்தியக் கொடி வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக நின்றது. மூவர்ணக் கொடியானது பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள், சமூகங்கள் மற்றும் மாநிலங்களை ஒன்றிணைக்கிறது என்றும், தேசியக் கொடியின் உணர்வால் பாகுபாடு மற்றும் வேறுபாட்டைத் களைந்திட முடியும். இந்த தொலைநோக்கு பார்வையை இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக பெருமையுடன் உழைக்க வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியின் முடிவில் முதல்வர் திருமதி. ஞானசுந்தரி நன்றியுரை கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்த பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.!

மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

அவர்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்த ஆணையாளர் இணையதளம் மூலமாக பணம் செலுத்தும் முறையை மட்டுமே தனியார் மூலம் கையாளுவதாகவும் வரி வசூல் செய்யும் பணியை தனியாருக்கு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் பல்வேறு நிலுவைக் கோரிக்கைகளை குறித்தும் பேசப்பட்டது. இதுகுறித்து விரைவில்
நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.நீதிராஜா, மாவட்ட இணைச்செயலாளர் ஆ.பரமசிவன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தமிழ், ஜெ.சிவகுரும்பன் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில தலைவர் முருகானந்தம், மாநில துணைப் பொதுச்செயலாளர் சி.மகுடீஸ்வரன், மாநிலத்துணைத் தலைவர் எம்.பஞ்சவர்ணம், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் கே.டி.துரைக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் மண்டல நிர்வாகிகள் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி நகர சுகாதார செவிலியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

திருமங்கலம், மேலூர் பாசன கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 21/04/2010 அன்று அன்று திருமங்கலம் கால்வாய், கள்ளந்திரி கால்வாய், மேலூர் கால்வாய் மூன்றுக்கும் ஒன்றாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசு கெஜட் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ளது.

ஆனால் கள்ளந்திரி கால்வாயில் மட்டும் இருபோகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு திருமங்கலம் கால்வாய் மேலூர் கால்வாயில் 10 நாள் மட்டும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டு உள்ளனர். விவசாயத்திற்காக திறந்து விடவில்லை.

ஏற்கனவே வெளியிட்ட ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கத்தில் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். நாளை 25ஆம் தேதி தண்ணீரை நிறுத்த உள்ளனர்

இதை நம்பி அனேக விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர். நாளை ஷட்டரை அடைக்கும் நிலையில் பயிர்கள் கருக தொடங்கிவிடும்.

ஏற்கனவே வெளியிட்ட கெஜட் படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசுவதற்காக விவசாயிகள் சென்றிருந்தோம். ஆனால் மாவட்ட ஆட்சியாளர் எங்களை சந்தித்து குறைகளை கேட்க வரவில்லை.

இதனால் திருமங்கலம் பகுதி அனைத்து சங்க விவசாயிகள் அனைவரும் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் வெளிநடப்பு செய்து வெளியே வந்த பிறகு மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடந்த அரங்கிற்கு வந்து அங்கிருந்து விவசாயிகளிடம் நான் ஒன்றும் செய்ய முடியாது அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் இந்த நேரத்தில் அந்த தண்ணீரை திருமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு கால்வாயில் தொடர்ந்து திறந்து விட்டால் விவசாயமாவது செழிக்கும்.

எனவே திருமங்கலம் பகுதி பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டு விவசாயிகளை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம். என கூறினார்.

சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!

சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற 19-வது ஏசியன் ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஹர்ஷினி,3-வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

சாதனை படைத்த அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் ஜெகன், நிர்வாகிகள் உமாமகேஸ்வரி, சங்கரேஸ்வரி, பழனிவேல், பொன்.முருகன், முருகேசபாண்டி, முன்னாள் ராணுவ வீரர் ராமன், ஆறுமுகம், சாய்.கிருஷ்ணமூர்த்தி, மீடியா மாநில செயலாளர் கனகராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டி தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து உசிலை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கௌரவ தலைவர் எம்.பி.ராமன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.


இவ்விழாவில் சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி, பொருளாளர் சின்னமணி, இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, செயற்குழு உறுப்பினர் டாக்டர் சின்னச்சாமி, இணைத்தலைவர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர் முருகேசன்,செல்வம், ஜெயந்தி, மங்கையர்திலகம், மலர்விழி மற்றும்

இளமி நாச்சியம்மாள், அனிதா ரூபி, சுமதி,திவ்யபாரதி, முருகேசன்,செல்வம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அஜீத் – மோனிகா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன் நிர்வாகிகள் போஸ், சரவணராஜ், கந்தராஜ், பன்னீர்செல்வம், முருகேசன்,பாஸ்கர், ஆகியோர் உள்ளனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES