Inauguration of the Accenture Entrepreneurship Development Institute of India (EDII) MSDP018 Dehydration of Fruits and Vegetables Training Program for Women in Thiruparankundram, Thirunagar, Madurai
The Entrepreneurship Development Institute of India (EDII), in collaboration with Accenture and the implementing partner Fedcrot Vocational Training School, organized a 26-day free training program. The program was inaugurated under the leadership of Executive Director M.A. Subbraman, Treasurer Krishnaveni, and Secretary Saralruby. General Secretary Anguswamy delivered a welcome address, and the program was officially opened by Swetha Sathyan, a member of the 94th Ward, who lit the ceremonial lamp.
During the event, Kavitha Balaraman, the Senior Project Coordinator at EDII, delivered a felicitation speech, and Mrs. Meenakshi Sundari, an officer from South Indian Bank, participated. Govindaraj, the Managing Director of Sweedu Trust, gave a congratulatory speech. At the conclusion of the program, Martin Luther King, Vice President of Fedcrot, extended a vote of thanks.
மதுரையில் தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழா மற்றும் டாக்டர் பி.எஸ்.நாதன் 101 வது பிறந்தநாள் விழா, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநிலத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பொன்ராஜ், இணைச்செயலாளர் சங்கரன், இணை பொதுச்செயலாளர் பேச்சியப்பன் மற்றும் பொள்ளாச்சி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ விஸ்வகர்ம ஜகத்குரு ஸ்ரீ லஸ்ரீ பாபுஜி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் திருமாறன்ஜி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பொருளாளர் எஸ்.வி.கே.ஆறுமுகம் மற்றும் கந்தசாமி, லட்சுமி காந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை மலையாளி சமாஜம் சார்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் புத்தாடைகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் மதுரை திருநகர் சுவீடு டிரஸ்ட்டில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுரை மலையாளி சமாஜம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெற்றதோடு இன்று முதல் அனைவரும் பணிக்கு செல்ல உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க டாக்பியா மாநில கௌரவ செயலாளர் சி.குப்புசாமி,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் கூறுகையில்:-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நட்டம் ஏற்படும் என்று தெரிந்தே கரும்பு வெட்டும் இயந்திரம்,கதிர் அறுக்கும் இயந்திரம்,லாரி, பவர் டில்லர் போன்ற கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் கடனுக்கு வாங்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்துவது கூடாது, அவைகள் எங்கு தேவையோ அங்கு மட்டும் கொள்முதல் செய்ய உரிய அனுமதி வேண்டும்,
பணியாளர்கள் புதிய ஊதியம் உடன் அறிவிக்க வேண்டும், நகைக்கடன் நகைகள் ஏலத்தில் ஏற்பட்ட நட்டத் தொகை வியாபார நட்டம் என்பதால் அதனை நட்ட கணக்கிற்கு கொணடு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 03.10.2023 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 09.10.2023 தமிழக்தில் ஏழு மண்டலங்களில் மாபெரும் கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி மதுரை மண்டலம் சார்பில் மதுரையில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 3000 பணியாளர்களுக்கு மேல் கலந்து கொண்ட மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் எதிரொலியாக டாக்பியா சங்க நிர்வாகிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கனரக வாகனங்கள், இயந்திரங்கள் வாங்குவது உறுதியாக கட்டாயப்படுத்த மாட்டாது,
ஊதிய உயர்வு விரைந்து அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது,
போராட்டத்தில் உறுதியுடன் இறுதி வரை போராடிய அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான அன்றாட செய்திகளை உடனுக்குடன் உள்ளது உள்ளபடியே பொதுமக்களுக்கும், அரசு அறியும் வகையில் செய்திகள் பிரசுரித்த ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான உண்மை செய்திகளை களத்தில் இருந்து நிலைமைகளை அன்றாடம் உண்மையான அறிக்கைகளாகவும், நிகழ்வுகளாகவும் அரசுக்கு அளித்தும் போராட்ட களங்களில் பாதுகாப்பும், ஒத்துழைப்பும் அளித்த காவல் துறையினருக்கும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவாளர் அவர்களுக்கும், பேச்சுவார்த்தைக்கு உரிய அனுமதி வழங்கிய மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.என கூறினர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பாக நாளை 12ஆம் தேதி நடைபெற இருந்த சிறை நிரப்பும் போராட்டம் வாபஸ்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெற்றதோடு இன்று முதல் அனைவரும் பணிக்கு செல்ல உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க டாக்பியா மாநில கௌரவ செயலாளர் சி.குப்புசாமி,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் கூட்டாக கூறுகையில்:-
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் நட்டம் ஏற்படும் என்று தெரிந்தே கரும்பு வெட்டும் இயந்திரம்,கதிர் அறுக்கும் இயந்திரம்,லாரி, பவர் டில்லர் போன்ற கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் கடனுக்கு வாங்க வேண்டும் என அரசு கட்டாயப்படுத்துவது கூடாது, அவைகள் எங்கு தேவையோ அங்கு மட்டும் கொள்முதல் செய்ய உரிய அனுமதி வேண்டும், பணியாளர்கள் புதிய ஊதியம் உடன் அறிவிக்க வேண்டும்,
நகைக்கடன் நகைகள் ஏலத்தில் ஏற்பட்ட நட்டத் தொகை வியாபார நட்டம் என்பதால் அதனை நட்ட கணக்கிற்கு கொணடு செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 03.10.2023 முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் பணியாளர்கள் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த 09.10.2023 தமிழக்தில் ஏழு மண்டலங்களில் மாபெரும் கண்டன கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி மதுரை மண்டலம் சார்பில் மதுரையில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சார்ந்த 3000 பணியாளர்களுக்கு மேல் கலந்து கொண்ட மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் எதிரொலியாக டாக்பியா சங்க நிர்வாகிகளுடன் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் கனரக வாகனங்கள், இயந்திரங்கள் வாங்குவது உறுதியாக கட்டாயப்படுத்த மாட்டாது,
ஊதிய உயர்வு விரைந்து அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது,
போராட்டத்தில் உறுதியுடன் இறுதி வரை போராடிய அனைத்து நிலை பணியாளர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான அன்றாட செய்திகளை உடனுக்குடன் உள்ளது உள்ளபடியே பொதுமக்களுக்கும், அரசு அறியும் வகையில் செய்திகள் பிரசுரித்த ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் மற்றும் போராட்டம் தொடர்பான உண்மை செய்திகளை களத்தில் இருந்து நிலைமைகளை அன்றாடம் உண்மையான அறிக்கைகளாகவும், நிகழ்வுகளாகவும் அரசுக்கு அளித்தும் போராட்ட களங்களில் பாதுகாப்பும், ஒத்துழைப்பும் அளித்த காவல் துறையினருக்கும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொண்ட பதிவாளர் அவர்களுக்கும், பேச்சுவார்த்தைக்கு உரிய அனுமதி வழங்கிய மாண்புமிகு கூட்டுறவு துறை அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.என கூறினர்.
மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 2.500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கை இணை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
சங்கங்களின் தவணைத் தவறிய நகைகளை ஏலமிட்ட வகையில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி புதிய உத்தரவு பிறபிக்கப்பட வேண்டும்.
சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும்.
பயிர் கடன் தள்ளுபடியில் விதிமீறல் எனக்கூறி செயலாளர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
25/2/2001க்கு பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
பணியாளருக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை நீக்கி அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 12/10/2023 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.என நிர்வாகிகள் கூறினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன், தேனி மாவட்ட தலைவர் அருணகிரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகசரவணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திருச்சிற்றம்பலம், சிவகங்கை பிரிட்டோ, ராமநாதபுரம் முத்துராமலிங்கம், புதுக்கோட்டை நெடுமாறன், திண்டுக்கல் சுப்பையா, தேனி முருகன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மதுரை மாவட்ட பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும்.
மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி தர வேண்டும் என தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களை வரிசையாக இருக்கை அமைத்து, அதில் அவர்களை அமர வைத்து மனுக்களை பெற்று அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் நேர்காணல் செய்து சட்டப்படி வாய்ப்பு உள்ளவர்களுக்கு அதனை நிறைவேற்றி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் முதன்முதலாக இத்தகைய செயல்பாடு நடந்ததை கண்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு, தங்களது குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.
The certificate awarding ceremony was held at FEDCROT office, Madurai
Fedcrot conducted certificate distribution program. sponsored by national jute board.
24 women trained for 50 days to produce free jute bags was held at Fedcrot Office in S.S Colony, Madurai under the leadership of Managing Director M.A Subburaman.
General Secretary Angusamy gave the welcome speech. Ayyappan, Chief Marketing Officer, National Jute Board, Calcutta, who was the chief guest, inaugurated the function by lighting the lamp.
In this, KVIC Assistant Director Anbuchezhiyan, Union Bank of India Senior Manager Amesh Kumar was present.
end of the program, Fedcrot Treasurer Krishnaveni gave vote of thanks. Arrangements for the program were made by secretary Saralruby, vice president Martin Luther King, coaches Vijayavalli and Kannan.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள வி.ஐ.பி சிட்டியில்,தி இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் ரமேஷ் சிமெண்ட் ஏஜென்சி இணைந்து நடத்திய கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் இடத்தை பிடித்த மதர்லேண்ட் சி.சி அணிக்கும்,2 ஆம் இடத்தை பிடித்த ஸ்மார்ட் சி.சி அணிக்கும் வெற்றி கோப்பையை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் வழங்கி பாராட்டினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று சிறப்பித்தார்
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செப்.28.மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
செப்.28-ந் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனார் அரங்கில் நடைபெற்ற முதல்நாள் நிகழ்ச்சிக்கு ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி சாரதா தலைமை தங்கினார். கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர், முத்தாரம் வரவேற்புரை ஆற்றினார். மேட்டுப்பாளையம் நகரமன்ற துணைத்தலைவர் அருள்வடிவு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாநிலத் துணைத் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் சரவணா செல்வி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியில் தொகுப்புரை ஆற்றினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ‘நிகழ்ச்சியில் சங்கத்தின் எதிர்கால திட்டமிடுதல் குறித்து சங்கத்தின் மாநில மகளிரணி செயலாளர் முத்துச்செல்வி, மாணவர்களிடத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, சங்கத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆதவன், சமூகத்தில் மகளிரின் செயல்பாடு குறித்து கோவை மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் செல்வி. பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியில் மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தி நன்றி உரையுடன் முதல் நாள் நிகழ்வு பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வு செப்.29-ந் தேதியன்று காலை 9.30 மணியளவில் தந்தை ஈ.வெ.ர. பெரியார் அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட செயலாளர் கருப்பையா தொகுப்புரை வழங்கினார்.
தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநில இணைய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உரையாற்றினார். மாநில பொதுக்குழு தீர்மானங்களை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை வாசிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாநில பொருளாளர் முருகன் சங்கத்தின் வரவு – செலவு அறிக்கையினை வாசித்தார். இதனை தொடர்ந்து மாநில மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறிது நேரம் தேநீர் இடைவேளைக்கு பிறகு மாநில பொதுக்குழுவின் அடுத்த நிகழ்ச்சி நண்பகல் 11.15 மணியளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அரங்கில் மாநில தலைவர் பூவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தி கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றதலைவர் மெகரிபா பர்வீன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி , மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உத்திராபதி மற்றும் தமிழக அரசின் முதன்மை கணக்கு அலுவலர் முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.ம்ம்ஞ்மம்ம்பள
தொடர்ந்து, சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன் மொழிந்தார். திருச்சி மாவட்ட தலைவர் செந்தில், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் சங்கத்தின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், சங்கத்தின் முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மற்றும் தோழமை சங்கத்தலைவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தோழமை சங்க நிர்வாகிகள் விவேக், சுதாகர், திருக்குமரன், துரை கருணாநிதி, தாமஸ், நிர்வாக சங்கத்தின் மாநில தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் அருண், டேனியல், ராஜன்சிங் , நிர்வாக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜசேகரன், SC மற்றும் ST வருவாய் துறை சங்க நிர்வாகி தனலட்சுமி, கோவை தனி வட்டாட்சியர் மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் மாநில செய்தி ஊடக பிரிவு செயலாளர் சிங்கபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கும் அறைகள் மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்னெடுத்து சென்ற கோவை மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயசந்திரன், மாநில நிர்வாகிகள் அன்பழகன் மகேந்திரன் உள்ளிட்ட கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியும், பாராட்டுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்…