Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 7)

செய்திகள்

All News

திண்டுக்கல்லில் இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு…

இந்தியன் பத்திரிக்கையாளர்கள் சங்கம் தென் மண்டல மாநாடு திண்டுக்கல்லில் இன்று காலை 10 மணிக்கு பிச்சாண்டி பில்டிங் வருவாய் துறை அலுவலர் சங்கத்தில் திரு பி.பி நடராஜன் மாநில துணை அமைப்பாளர், ஐபிசி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வரவேற்புரை திண்டுக்கல் மாவட்ட தலைவர் திரு. சந்திரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட செயலாளர், பி.ஆர்.டி ராஜா அவர்கள் வரவேற்புடன் இனிதே நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முகமது மைதீன் மாநில செயலாளர் அவர்கள் சிறப்புரை மற்றும் பின்னர் விழா பேருரை ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்கள் ஆற்றினார்கள். திரு. பிரபு மாநில துணைத்தலைவர், திரு. செல்லப்பாண்டி மாநில துணைத்தலைவர், திரு. அன்பரசு மாநில அமைப்பாளர், திரு. துரைப்பாண்டி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. சந்திரசேகர பெருமாள் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. பாலமுருகன் ஐடி விங் மாநில செயலாளர், திரு. போஸ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அலெக்சாண்டர் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஜெயபிரகாஷ் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. மலர் சின்னத்தம்பி மாநில செயற்குழு உறுப்பினர், திரு. அருண்குமார் மாநில செயற்குழு உறுப்பினர், திரு. ஸ்டாலின் மேற்கு மாநில துணை செயலாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழா சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் ஐபிசி மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

திரு. காதர் சுல்தான் கரூர் மாவட்ட துணைத் தலைவராக இம்மாநாட்டில் ஐபிசி மாநில தலைவர் திரு. சாம் திவாகர் அவர்களால்அறிவிக்கப்பட்டார்.

டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்…

Image

இன்று (17.08.2024) தமிழ்நாடு தேசிய மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு, மாநில மாநாடு மற்றும் ஐ.என்.டி.யு.சி (INTUC) யின் அகில இந்திய தலைவர் டாக்டர் ஜி.சஞ்சீவ ரெட்டி Ex. MP அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் முப்பெரும் விழாவில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சசிகாந்த் செந்தில் (Retd. IAS) அவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.

காமராஜர் அறக்கட்டளை மூலமாக மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Image

சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் வரும் (20.08.2024) செவ்வாய் கிழமை அன்று காமராஜர் அறக்கட்டளை மூலமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு ‘கல்வி உதவித் தொகை’ வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேற்கண்ட நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து மூன்று மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் இன்று (17.08.2024) சென்னை, சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடைபெற்றது.

காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை

Image

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது, தமிழகத்தில் கல்விப் புரட்சி, அதிகப்படியான அணைக்கட்டுகள், மக்களுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி மக்களின் நலனுக்காக மட்டுமே வாழ்ந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்தைப் பார்வையிட்டார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார் .

இன்று (17.08.2024) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களது இல்லத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன் அவர்களுடன் கலந்து கொண்டார்.

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம்

Image

விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் திரு.ஸ்ரீராஜா சொக்கர், விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. A ரங்கசாமி ஆகியோர் தலைமையில் V V V அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம் தாகூர் MP, திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் திரு ராபர்ட் ப்ரூஸ், மூத்த தலைவர் திரு திருச்சி வேலுசாமி, துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு லெனின் பிரசாத், பொது செயலாளர் திரு D செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் அவர்களின் வழித் தோன்றல்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

கல்வராயன் மலைவாழ் மக்களுடன்RGPRS அமைப்புகலாச்சார கலந்தாய்வு முகாம்

ராஜீவ்காந்தி பஞ்சாயத்ராஜ் சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இரண்டு மாநிலங்களும் இணைந்து ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் (இரண்டுநாள் முகாம்) கல்வராயன்மலை மக்களின் வாழ்வாதாரம் குறித்த ஆய்வு முகாம் நடைபெற்றது.

மலைவாழ் மக்களின் இல்லங்களில் உண்டு, உரையாடி, தங்கி அவர்களின் நிலை அறிந்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து வெள்ளிமலையில் நடைபெற்ற சுதந்திரதின கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகள் தீர்மானமாக வைக்கப்பட்டது.
முன்னதாக சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டும், மரக்கன்று நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.S.சசிகுமார், புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr.சு.அமுதரசன்,

YouTube player

பஞ்சாயத்துராஜ் தேசிய செயலாளர் கடலூர் க.ரமேஷ், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் N.சுகுமார், திரு.அண்ணாதுரை, ST பிரிவு மாநில பொது செயலாளர் திரு.சரவணன், வாழப்பாடி மணிமாறன், புதுச்சேரி மாநில பஞ்சாயத்து ராஜ் பொதுச்செயலாளர்கள் அரங்க.முருகையன், கோவிந்தன், புஷ்பராஜ் இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பஞ்சாயத்து ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு பணியை
கள்ளக்குறிச்சி மாவட்ட பஞ்சாயத்து ராஜ் ஒருங்கிணைப்பாளர் N.செந்தில்குமார் செய்திருந்தார்.

மக்கள் பார்க்க விரும்புவது நாட்டின் நம்பிக்கை திரு.ராகுல்காந்தி அவர்களைத்தான்.

Image

தேசத்தின் பார்வை இப்போது திரு ராகுல்காந்தி அவர்களின் மீதுள்ளது. பெரும்பான்மை மீடியாக்களை குத்தகையெடுத்திருந்தும் நரேந்திர மோடி அவர்களால் ராகுல்காந்தியை மறைக்க முடியவில்லை. மக்கள் பார்க்க விரும்புவது நாட்டின் நம்பிக்கை திரு.ராகுல்காந்தி அவர்களைத்தான்.

மோடி : 647 பார்வையாளர்கள்

ராகுல் காந்தி : 4,00,000  பார்வையாளர்கள்

பொது சிவில் சட்டம் குறித்து மோடியின் பேச்சு ஆபத்தானது

Image

நேற்று சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசிய பேச்சு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போதுள்ள சிவில் சட்டம் ஒரு வகுப்புவாத சிவில் சட்டம் என்று கூறி நாட்டுக்கு தேவை மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற விஷமத்தனமான கருத்தை கூறியிருக்கிறார். இதை நிறைவேற்றினால் தான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அரசமைப்புச்சட்டம் தயாரித்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கருத்தியலை தொடர்ந்து புறக்கணிப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் – அரசியல் பயிற்சி பட்டறை

காங்கிரசின் சார்பில் சர்வோதயா சங்கம் என்ற அமைப்பு அரசியல் தொடர்புள்ள பல பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.

இந்தப் பயிற்சி பட்டறையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டும் அல்லாது பொது மக்களின் மீது அக்கறை கொண்ட எவரும் கலந்து கொள்ளலாம்.அரசியல் அமைப்பின்பால் மிகுந்த நம்பிக்கையும், மக்களின் மீது அளவற்ற அன்பும் கொண்ட எந்த நபரும், சங்கம் நடத்தும் பயிற்சி பட்டறைகளில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள்.பெரும்பாலும் சங்கத்தின் பயிற்சி பட்டறைகள் மகாராஷ்டிராவில், வர்தா, சேவாகிராமில் உள்ள காந்தி ஆசிரமத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்கு ஹிந்தி மொழி சிறிது கடினமாக இருப்பதன் காரணமாக சர்வோதயா சங்கம் அவ்வப்போது தமிழ்நாட்டிலும் இந்த பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.போன வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு பயிற்சி பட்டறை தமிழகத்தில் நடந்தது.

தற்போது மீண்டும் “அஹிம்சையின் பாதையில்” என்ற நான்கு நாள் உள்ளரங்கு பயிற்சி பட்டறை திண்டுக்கல்லுக்கு அருகில் நடக்க உள்ளது.காந்திய கொள்கைகள் மீது மதிப்பு உள்ளவர்கள், அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், சிறந்த மாற்று அரசியலை, மக்களுக்கான நல்ல அரசியலை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள அனைவரையும் இந்த பயிலரங்கத்திற்கு வரவேற்கிறோம்.

அகிம்சா கே ராஸ்தே அஹிம்சையின் பாதையில் சமூகம், அரசியல் மற்றும் குடிமக்களாக நமது பங்கு குறித்த சிந்தனைப் பகிர்தல்கள். அகிம்சா கே ராஸ்தே நமது சமூகம், அரசியல் மற்றும் அனைவருக்குமான ஒன்றிணைந்த எதிர்காலத்தை குறித்த நமது சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு பயிலரங்கம்.

YouTube player

பங்கேற்பாளர்கள் தமது சம காலத்தை உணர்வதற்கும், நமது நாட்டையும், நமது அரசியலையும் அரசியல் அமைப்பின் பாதையில், கருணையுடன் வைத்திருக்க நம்மால் என்ன செய்ய இயலும் என்பதை உணர்வதற்கும் உதவுவதே இந்த பயிலரங்கத்தின் நோக்கம்.

நான்கு நாட்கள் நடக்கும் உள்ளரங்கு பயிற்சியின் உள்ளடக்கம்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, அகிம்சையின் முக்கியத்துவம், மகாத்மா காந்தியின் சுயராஜ்யத்தை குறித்த சிந்தனை, அரசியல் அமைப்பு எவ்வாறு நமது தேசத்தை கட்டமைக்கிறது.

உண்மையான பன்முகத்தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தாக்கங்கள், அரசியல் சாசனத்தை அரசியல் ரீதியாக எப்படி நிலை நிறுத்துவது, அரசியல் செய்தல் என்பது என்ன மற்றும் ஒரு சிறந்த தொண்டராக இருப்பது எப்படி, இன்றைய அரசியல் அமைப்பின் நிலை மற்றும் தற்போதைய பிரச்சனைகள் குறித்த வெளிப்படையான விவாதம், தனிநபர், நிறுவனம் மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கான புதிய நடவடிக்கைகள்.

முகாம் நாட்கள்: 2024 செப்டம்பர் 9 முதல் 12 வரை

இடம் : லைஃப் சென்டர், நொச்சியோடைப் பட்டி, கூவந்து, திண்டுக்கல், தமிழ் நாடு.

உங்கள் பெயரை வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய எண் 91521 11152

சங்கம் குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள, மின்னஞ்சல்: HELLO@SARVODAYASANGAM.COM

இணையதளம்:
https://sarvodayasangam.com

இது அருமையான மற்றும் அரிதான வாய்ப்பும் கூட. மூன்று இரவுகள் நான்கு நாட்கள் உணவு மற்றும் இருப்பிடத்திற்கான குறைந்தபட்ச பங்களிப்பு ₹2500.

காங்கிரஸ் கட்சியின் பயிற்சி பிரிவின் தலைவர் திரு சச்சின் ராவ் அவர்களின் பயிற்சி முகாம்.

அவசியம் கலந்து கொள்ளுங்கள். ஜெய் ஜெகத்…

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES