இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் – பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை – பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன?
வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்!
இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?
அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?
பெருமை கொள்ள ஏதும் இல்லை… 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்.
நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்நன்னாளில் அனைவர் வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, கல்வி, செல்வம் , சகோதரத்துவம் மற்றும் மேன்மையான நற்குணங்கள் ஆகியவை மேலோங்கி தழைத்திட எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட களக்காடில் நடைப்பெற்ற தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் செயலாளர் திரு.சாமுவேல் பிரேம் குமார் ஏற்பாடில் இந்திய ஒற்றுமை மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
சுமார் 2000 பேர் கலந்துக் கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் Dr.A.செல்லக்குமார்., M.B.B.S., M.P அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மத்திய அமைச்சர் திரு R. தனுஷ்கோடிஆதித்தன் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி R மனோகரன், மாவட்ட தலைவர் திரு.K.P.K ஜெயகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது. மோடி, பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் - ஜோதிமணி, கரூர், எம்.பி.
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் (வேடசந்தூர் – எரியோடு பகுதியில்) இந்திய ஒற்றுமை பயண விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்க விழா கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
வாகனத்தை துவக்கி வைத்து பின்னர் தாம் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்திய ஒற்றுமை பயணம் காஷ்மீர் அருகே சென்றவுடன் மிகப்பெரிய மாற்றம் இந்திய நாட்டில் நடக்கும் என்று சூருரைத்தார்.
வருங்கால இந்திய பிரதமர் திரு. ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை பயணத்தில் இணையத்தின் வழியாக கலந்து கொள்ளுமாறு கூடியிருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இளைஞர் குரல் சார்பாக இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர்.
இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை ஒருங்கிணைந்து கேட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெளிவாகிறது.
இந்த கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலான கிராம மக்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.
கோடந்தூர் ஊராட்சியின் சாதனைகள்:
போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…
வரவு செலவு கணக்கு இல்லாமல் கிராம சபை கூட்டம்…
கடந்த ஆண்டு வரவு செலவு பழைய பிளக்ஸ் பேனருடன் கோடந்தூர் கிராம சபை கூட்டம்…
ஒரு கையெழுத்துக்காக 80 வயது முதியவரை இருபது முறை அலைய வைத்த கோடந்தூர் பஞ்சாயத்து…
தெருவிளக்கு இல்லாமல் கிராமங்களை இருளில் மூழ்கடித்து திருட்டுக்கு வழிவகுக்கும் கோடந்தூர் பஞ்சாயத்து…
ஒவ்வொரு செயலும் உள்நோக்கம் கருதி செயல்படுவதால் கோடந்தூர் ஊராட்சியில் சலசலப்பு…
தகவல் ஆணையமே! உத்தரவிட்டும் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை கொடுக்க மறுக்கும் கோடந்தூர் ஊராட்சி…
வெட்டுக்காட்டு வலசு இளைஞர் மோகன்ராஜ் என்பவர் கோடந்தூர் ஊராட்சியில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டார்.
கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் கலந்துகொண்டு கிராம முன்னேற்றத்திற்காக என்னென்ன வேண்டும் என்று கேட்டு அறிந்தால் கிராமம் முன்னேறும்…
கிராமங்கள் முன்னேறும் போது தான்… நாடும் முன்னேறும்…
சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்.
திரு ராகுல் காந்தி அவர்களின் சொந்த சகோதரி மகளுடன் தனிப்பட்ட குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்து அதற்கு கொச்சையான வசனங்களை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாஜக வினர் பரப்பி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்து அத்தகைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.
இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது.
நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு வாட்ஸ் அப் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்…. அதற்கு எனது நண்பன் முஸ்தாக், மீண்டும் தனது நண்பர்களுடன் மாணவனாக வேண்டும் என்று அவரது ஆசையை சொல்லி இருக்கிறார்… பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது நண்பர்களிடம் பேசி ஒரு நண்பனை வரவழைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து மற்ற பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்தனர்…
இது போன்ற வித்தியாசமான மகிழ்ச்சியான செய்திகளை பார்க்கும்பொழுது நாம் அனைவரும் பின்னோக்கி சென்று நமது படிக்கும் காலங்களை நினைக்க வைக்கிறது….
இளைஞர் குரல் சார்பாக பி எஸ் பி பள்ளியின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.
சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது. மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.
பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன். -தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்