Saturday , November 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 86)

செய்திகள்

All News

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!

இதுவரை ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்.! லிஸ்ட் இதோ!!

சினிமா உலகில் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது அடைவதே கனவாக கொண்டுள்ள படைப்பாளிகள் அதனை பெற பெரிதும் போராடி வருகின்றனர் அப்படிப்பட்ட ஆஸ்கர் விருதை தமிழ்நாடு திரைப்படங்கள் இதுவரை வென்றதில்லை இதற்காக ஆனால் போராடி உள்ளது. ஆஸ்கார் விருதுக்காக உலகில் உள்ள அனைத்து மொழி திரைப்படங்களும் இடம்பெறும். இந்த விருதினைப் பெற ஒவ்வொரு படைப்பாளிகளும் இதனை அடைய வாழ்நாள் கனவாகவே உள்ளது. இதனை தனது வாழ்நாள் சாதனையாக இந்த ஆர்டரை படைப்பாளிகள் பார்க்கின்றனர்.

ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஆயிரக்கணக்கான சிறந்த படங்கள் ஆஸ்கர் விருதில் அங்கம் வகிக்கும் அதில் சிறந்த படத்தை ஆஸ்கர் குழு தீர்மானிக்கும். அதுபோல தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன அதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் பின்வருவன:

ஒரு ஆண்டிற்கு உலகில் உள்ள ஆயிரக்கணக்கான சிறந்த படங்கள் ஆஸ்கர் விருதில் அங்கம் வகிக்கும் அதில் சிறந்த படத்தை ஆஸ்கர் குழு தீர்மானிக்கும். அதுபோல தமிழ்நாட்டில் ஆண்டிற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகின்றன அதில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள் பின்வருவன:

1. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1969ம் ஆண்டு நடித்த படம் தெய்வமகன். இப்படம் முதன்முதலில் இந்திய அரசால் நியமிக்கப்பட்டு ஆஸ்கர் விருதுக்கு சென்றது. இப்படத்தில் சிவாஜி கணேசன் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். நல்ல கதைக்களம் கொண்டிருக்கும் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பு இதற்கு கை கொடுத்தது.அதனாலதான் ஆஸ்கர் விருதுக்கு சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2. நடிப்பில் சிவாஜிக்கு அடுத்தபடியாக திறமையாக நடிக்க கூடியவர் கமலஹாசன் அவர் நடித்த நாயகன் படம். இந்த படம் ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களமாக கொண்டிருந்தது அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அது மட்டும் இல்லாமல் இப்படம் தேசிய விருது பெற்றது.மற்றும் பல பாராட்டுகளையும் விருதுகளையும் இப்படம் அதுமட்டுமில்லாமல் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

3. பெரிய நடிகர்கள் இல்லாமல் 1990ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சென்ற படம் அஞ்சலி இப்படம் பல விருதுகளையும் பெற்றது இதில் ஹீரோவாக ரகுவரன் மற்றும் ஹீரோயினாக ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்கி உருவாக்கிய மணிரத்தினம் அவர்கள் இந்திய அளவில் பிரபலமடைந்தார். இப்படம் குழந்தைகள் படமாக கருதப்பட்ட நிலையில் இந்த படம் ஆஸ்கருக்கு சென்றது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

4. சிவாஜி மற்றும் கமல் இவர்கள் இணைந்து நடித்த படம் தேவர்மகன் இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது ஏனெனில் இருவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள்படம் இந்திய அரசால் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது மேலும் இப்படம் தேசிய விருதுகள் மற்றும் பல விருதுகளை பெற்றது.

5.1995 ஆண்டு வெளியான படம் குருதிப்புனல் இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இவர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான தேசப்பற்றுள்ள ஒரு படமாக இது எடுக்கப்பட்டுள்ளது அதிரடி திரைப்படமாக எடுக்கப்பட்டது இப்படம் தேசிய விருதுகளையும் மற்றும் பல விருதுகளையும் பெற்று சாதனை படைத்தது

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று…

இளைஞர் குரல் இணையதள பத்திரிக்கையை வாசிப்பவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை (50000 or 50K) தாண்டியது இன்று….

வாசிப்பவர்களின் எண்ணங்களை என்றென்றும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இளைஞர் குரல் கண்டிப்பாக செய்து முடிக்கும் என்பதை இந்தச் செய்தியின் மூலம் மக்களுக்கு கூறிக்கொள்கிறோம்.

மேலும் சமூகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பித்த இந்த இளைஞர் குரல் மென்மேலும் வளர உங்களது ஆதரவை தருமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்க முனைப்புடன் செயல்படும் இளைஞர் குரல் குழுவிற்கு இந்த தருணத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது இளைஞர் குரல் இணைய பத்திரிக்கை.

www.ilangyarkural.com

9965557755 / 8189894254 / 9843454571

 

324 இந்தியர்கள் தனி விமானத்தில் நாடு திரும்பினர்: கடும் காய்ச்சல் இருப்பதால் 6 பேரை அனுப்ப சீனா மறுப்பு

புதுடெல்லி,

சீனாவில் கொரோனா வைரஸ் பீதியில் சிக்கி தவித்த 324 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். 330 பேரை அழைத்து வர சென்ற நிலையில் அவர்களில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருப்பதால் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப சீனா மறுத்துவிட்டது.

சீனாவில் கொரோனா என்ற வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நோய் பரவி வருவதால் உலக முழுவதும் பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் இதுவரை சீனாவில் 259 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனால் சீனாவில் வசிக்கும் பிறநாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உலகின் பல நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகள் அனைவரும் உச்சகட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் வசிக் கும் இந்தியர்களை மீட்பதற் காக, ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கிருந்து 330 இந்தியர்களை விமானத்தில் ஏற்றிவர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதில் 6 பேருக்கு கடும் காய்ச்சல் இருந்தது, உகான் விமான நிலைய சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்களை விமானத்தில் செல்ல சீன அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு உகான் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படும் என்று தெரிகிறது.

இதையடுத்து, 3 சிறுவர்கள், 211 மாணவ-மாணவிகள் உள்பட 324 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு உகானில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம், நேற்று காலை 7.30 மணிக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு அவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 22 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

பின்னர் அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் மூலம் டெல்லியில் உள்ள, இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை மருத்துவ முகாமுக்கும், அரியானாவின் மனேசரில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கும் கொண்டுசெல்லப்பட்டனர்.

இந்த இரு முகாம்களிலும் 324 பேரும், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்னொரு சிறப்பு விமானம் டெல்லியில் இருந்து உகான் நகருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது.

இந்த விமானத்தில் மேலும் 275-க்கும் அதிகமான இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். Couresty – daily thanthi

சீனாவுக்கு பின் கொரோனோ வைரஸால் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் இளைஞன்? வெளியான உண்மை தகவல்

சீனாவில் மட்டுமே கொரோனோ வைரஸால் இறப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த 22 வயது இளைஞன் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

திரிபுராவின் Bishalgarh-வை சேர்ந்தவர் Sahajan Mia. இவருக்கு Manir Hossain(22) என்ற மகன் உள்ளார். கிரிக்கெட் வீரரான இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் எந்த ஒரு வேலையும் கிடைக்காத காரணத்தினால், கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியாவில் இருக்கும் உணவகத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை, Manir Hossain குடும்பத்தினரை தொடர்பு கொண்ட, அங்கிருக்கும் வேலை செய்யும் நபர்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் Manir Hossain மருத்துவமனையில் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அதன் பின் மகன் இறப்பு குறித்து குடும்பத்தினரிடம் அவர்கள், மகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும், அவருக்கு கொரோனோ வைரஸின் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே இருந்ததாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் இதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, இருப்பினும் Manir Hossain-ன் தந்தை தன்னுடைய மகனின் உடலை கொண்டு வர அரசு உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அப்படி அவர் கொரோனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் என்பது உறுதியான சீனாவிற்கு பின் வெளிநாட்டில் உயிரிழந்த முதல் நபராக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால்,இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சகம் அறவே மறுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனோ கிருமித் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சகம், இந்தியர்கள் யாரும் கண்காணிப்பு வளையத்தில் இல்லை எனத் தெளிவுபடுத்தி உள்ளது.

ஜனவரி 30-ஆம் திகதி மாலை வரை இதுதான் உண்மை நிலை என்றும் மலேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பட்ஜெட் 2020… கடைக்கு போய் பர்சஸ் பண்ணபோறீங்களா.. கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய 10 விஷயங்கள்.

டெல்லி: உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல பொருட்களுக்கான சுங்க வரியை (இறக்குமதி வரி) உயர்த்தி உள்ளார்

அதாவது தட்டு சாமான்கள் மற்றும் சமையலறைப் பொருட்கள், மின் சாதனங்கள், காலணிகள், பீரோ, நாற்காலி, கட்டில் உள்பட பர்னிச்சர்கள், பேனா, பென்சில்,ஸ்கெட்ச் உள்பட எழுதுபொருள்கள் மற்றும் பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்துவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..
இதன் விளைவாக, சில தயாரிப்புகளை இனி நீங்கள் வாங்கினால் அதிக செலவு ஏற்படும். கடைக்கு போய் பொருட்களை வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே உள்ளது பாருங்கள்.

நெஸ்லே நான் ப்ரோ
1. பெற்றோர்களே இது உங்களுக்குக்கான அறிவிப்பு ! இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைளுக்கான உணவு மற்றும் டாய்ஸ்கள்(பொம்மைகளுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது இதுவரை சுமார் 1,200 ரூபாய்க்கு நீங்கள் ஒரு நெஸ்லே நான் ப்ரோவினை வாங்கியிருந்தால் இனி 1,340 ரூபாய் கொடுக்க வேண்டியதிருக்கும். அதேபோல் இப்போது 1,200 ரூபாய் விலை கொண்ட அழகான பார்பி பொம்மையை வாங்க வேண்டும் என்றால் இனி நீங்கள் கூடுதலாக ரூ.800 செலவு செய்ய வேண்டியதிருக்கும்.

நைக் காலணிகள்
2. நீங்கள் உடற்பயிற்சியில் தீவிரம் ஆர்வம் உடையவரா? மன ஆரோக்கியத்திற்கான அக்ரூட் பருப்புகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான காலணிகளை அதிக விலைக்கு வாங்க வேண்டியதிருக்கம். அதாவது . இறக்குமதி செய்யப்பட்ட கலிஃபோர்னியா அக்ரூட் பருப்புகள் சுமார் 850 ரூபாய்க்கு பதிலாக இனி ரூ .1,280 கொடுக்க வேண்டியதிருக்கும். நைக் காலணிகளுக்கு இப்போது ரூ .8,999 ஆக உள்ள நிலையில் இன ரூ .9,749 செலவாகும்.

எல்இடி விளக்குகள்
3. மெத்தை, சோபா படுக்கை, எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் பர்னிச்சர் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 51,990 ரூபாய் செலவில் IKEA’வின் இறக்குமதி செய்யப்பட்ட மெத்தை மூலம் உங்கள் கனவு இல்லத்தை அலங்கரித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் சுமார் 54,349 ரூபாயை அதற்காக கொடுக்க வேண்டியதிருக்கும்

ஷேவிங் செட்டுகள்
4. நீங்கள் விராட் கோலி மாதிரிபார்க்க அழகாக இருக்கணும் என்று விரும்பி இதுவரை நிறைய செலவு செய்திருப்பீங்க. அப்படின்னா, இனி அதற்கு கூடுதலாகவே செலவு செய்ய வேண்டும். ஏனெனில் ஹேர் ட்ரையர், ஹேர் ரிமூவர், கிளிப்பர், ஷேவிங் செட்டுகள், அயர்ன் பாக்ஸ்கள் மற்றும ப்ளோவர்(blower) போன்ற சாதனங்களின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டள்ளது. ரூ .9,000 விலை கொண்ட வால் எஸ் ஸ்டார் கார்ட்லெஸ் மேஜிக் கிளிப்பருக்கு இனி சுமார் ரூ .9,890 செலவாகும்.

சீஸ் விலை
5. நீங்கள் காலை சிற்றுண்டியுடன் சீஸ் சேர்த்து சாப்பிட விரும்பும் நபரா? ஏன் இந்த கேள்வி என்றால் இறக்குமதி செய்யப்பட்ட பால் பொருட்களான வெண்ணெய், நெய், சீஸ், சமையல் எண்ணெய்கள் மற்றும் மோர் போன்ற பொருட்களின் விலை உயருகிறது, சமையலறை உபகரணங்களான டோஸ்டர்கள், தேநீர் மற்றும் காபி தயாரிப்பாளர்கள், அடுப்புகள், குக்கர்கள் மற்றும் ரோஸ்டர்கள் இப்போது அதிக சுங்க வரி அதிகரிப்பால் விலை உயருகின்றன வதிஈர்க்கின்றன. 200 கிராம் கிராஃப்ட் சீஸ் விலை ரூ .400 லிருந்து சுமார் 21 ரூபாய் அதிகரித்து 421 ஆகிறது. இதேபோல் இறக்குமதி செய்யப்பட்ட ரஸ்ஸல் ஹோப்ஸ் டோஸ்டரின் விலை ரூ .6,499 ஆக உள்ளது இனி அதற்கு கூடுதலாக ரூ..649 செலுத்த வேண்டும்.

நாணய வரி அதிகரிப்பு
6. திருமண விழாவில் பரிசாக வழங்குவதற்காக ரூ .44,000 மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட 10 கிராம் சுவிஸ் தங்க நாணயங்களை வாங்க திட்டமிட்டால், மேலும் 1,000 ரூபாயை கொடுக்க தயாராக இருங்கள் . ஏனெனில் விலை உயர்ந்த உலோக நாணயங்களுக்கான இறக்குமதி வரி 10% முதல் 12.5% ​​வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை உயரும்
7. நீண்ட பயணத்தை விரும்பும் நபரா? சுற்றுச்சூழலை விரும்பும் வகையில் மினசார வாகனங்களை சொந்தமாக்க விரும்புகிறீர்களா? ஏனெனில் இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீது சுங்க வரி 5% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் விலை குறையும். புதிய ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மூலம் ரூ .37.72 லட்சத்தில் இருந்து ரூ .1.2 லட்சம் திரும்ப கிடைக்கும்.

இறக்குமதி செய்தால்
8. இந்திய மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறைக்கு இறக்குமதி வரி வசூலிப்பதன் மூலம் அரசு ஊக்கமளிக்கிறது. உங்கள் வயதான பெற்றோருக்கு ரூ .40,000 செலவில் சீமென்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காது கேட்கும் கருவி வாங்கினால் இப்போது உங்களுக்கு சுமார் 41,190 ரூபாய் செலவாகும்.

சிகரெட் விலை
9. புகைபிடித்தல் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உங்கள் செல்வத்தையும் வரிகளாக அழித்துவிடும் . அனைத்து சிகரெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. 190 ரூபாய் விலை கொண்ட 20 கோல்ட் ஃப்ளேக் பிரீமியம் சிகரெட்டுகளின் ஒரு பாக்கெட் உங்களுக்கு ரூ .10 செலவாகும்.

இறக்குமதி வரி உயர்வு
10. பீங்கான் சமையலறைப் பொருட்களின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ .5,000 மதிப்புள்ள ஒரு கோரெல் டின்னர் செட் உங்களுக்கு சுமார் 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பட்ஜெட்டில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஏற்படும் தாக்கத்தை சொல்லவே மேலே சொன்ன அனைத்திலும் சில முன்னணி நிறுவன பிராண்டுகளின் பெயரை குறிப்பிட்டு அதன் பொருட்களின் விலை உயரப்போவதாக சொல்லி இருக்கிறோம். இதில்வேறு எந்த நோக்கமும் இல்லை.

சாலை ஓரத்தில் குவிந்த கிடக்கும் சடலங்கள்… வெளிச்சத்திற்கு வந்த கொரோனா கோரம்! பதபதைக்க வைக்கும் காட்சி

கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலர் சாலை ஓரத்தில் இறந்து கிடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 31ம் திகதி வரை சீனாவில் மொத்தம் 11,791 பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில், 259 உயிரிழந்துள்ளனர் மற்றும் 243 மீட்கப்பட்டுள்ளனர்.

ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் இன்று அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா உட்பட 22 நாடுகளுக்கு பரவியுள்ளது.

சீனா முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.

அதேசமயம், கொரோனா வைரஸால் சீனாவில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், அந்நாட்டு அரசு அதை வெளி உலகத்திடமிருந்து மறைக்கிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹூ மாகாணத்தில் சாலை ஓரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலர் உயிரிழந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த வைரஸால் சுமார் மில்லயன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மனிதர்களை மட்டுமல்ல ஸ்மார்ட் போன்களையும் அடித்து தூக்கும் கொரோனா.. எப்படி.?

 

 

சீனாவிலிருந்து கிளம்பி மின்னல் வேகத்தில் பரவி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கணினிகளை கூட பதம் பார்க்கும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அட என்ன.. உயிரை கொல்லும் வைரஸ் பா அது.. போன்கள், கம்ப்யூட்டர்களை எப்படி பாதிக்கும் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இதற்கான பதிலை தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.

உயிர்கொல்லி:

கொரோனா வைரஸ்.. இந்த வார்த்தையை இன்று உச்சரிக்காதவர்களே இல்லை. அந்த அளவிற்கு மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது மேற்கண்ட வைரஸ். கொரோனா இதுவரை சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரை குடித்துள்ளது.

அறிவுறுத்தல்கள்:

வேக வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் பல்வேறு நாட்டின் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த உயிர்கொல்லி பற்றியும், வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.

அதிகரிக்கும் ஷேரிங்:

உலக மக்களும் கொரோனா தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், அதை பற்றிய விழிப்புணர்வுக்காகவும், அதன் அறிகுறிகளை பற்றியும் பல்வேறு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இவை அடங்கிய தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

நம்பகமற்ற தகவல்கள்:

அதேவேளையில் கொரோனா தடுப்பு மற்றும் அறிகுறிகள் தொடர்பான பல தவறான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களும் பரவி வருகின்றன. எனவே எல்லா தகவல்களையும் பரப்பாமல் சரியான தகவல்களை மட்டுமே பிறருக்கு தெரிவிக்க வேண்டும் என உலக நாடுகள் பலவும் கேட்டுக்கொண்டுள்ளன.

வினையாகும் மக்களின் ஆர்வம்:

எல்லாம் சரி கொரோனா தொடர்பான தகவல்களுக்கும், நீங்கள் மேற்சொன்ன போன்கள் பாதிக்கும் தகவலுக்கும் என்ன சம்பந்தம் என்கீறீர்களா.? சம்பந்தம் இருக்கிறது. உலக மக்களின் கொரோனா ஆர்வத்தை பயன்படுத்தி புகுந்து விளையாடுகிறார்களாம் சைபர் கிரிமினல்கள்.

வலையில் விழுவோம்:

கொரோனா வைரஸ் பற்றிய PDF, MP4 மற்றும் DOCX ஃபைல்கள் போர்வையில் தான் தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர் சைபர் கிரிமினல்களான ஹேக்கர்கள். ஆம் நம்முடைய நன்மைக்கு தான் கொரோனா பற்றிய தகவலை யாரோ நமக்கு அனுப்பியுள்ளார்கள் என்ற எண்ணத்தில், போன்களில் இருந்தோ கணினியில் இருந்தோ கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்தால், ஹேக்கர்களின் வலையில் விழும் வாய்ப்பு உள்ளதை நினைவு கொள்ள வேண்டும்.

என்ன பெயரில் வரும்..?

சைபர் கிரிமினல்கள் அனுப்பும் ஃபைல்கள், கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வீடியோ வழிமுறைகள் , அச்சுறுத்தல் குறித்த அப்டேட்கள், கொரோனாவை கண்டறிவதற்கான நடைமுறைகள் என்பன போன்ற தலைப்பில் அனுப்பப்படுவதாக கூறியுள்ளது பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky.

பாதிப்பு என்ன?

சைபர் கிரிமினல்களால் உருவாக்கப்படும் ஃபைல்கள் நம்முடைய சாதனங்களில் உள்ள டேட்டாக்களை அழிக்க, மாற்றியமைக்க அல்லது பிரதி (xerox) எடுக்கும் திறன் கொண்டவை. மேலும் கணினி அல்லது கணினி நெட்வொர்க்குகளின் செயல்பாட்டில் குறுக்கிடும் என Kaspersky நிறுவனம் எச்சரித்துள்ளது.

இத உன்னிப்பா பாருங்க:

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க கொரோனா தொடர்பான ஃபைல்களை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் Extension-களை கவனமாக பாருங்கள். டாக்குமெண்ட்கள் மற்றும் வீடியோ ஃபைல்கள் .exe அல்லது .lnk என்று குறிப்பிடப்பட்டிருக்க கூடாது. அப்படி இருந்தால் அதை டவுன்லோட் செய்வதை தவிர்த்து விடுங்கள் என Kaspersky கூறியுள்ளது.

 

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES