Thursday , November 27 2025
Breaking News
Home / செய்திகள் (page 9)

செய்திகள்

All News

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆயத்தத்திற்காகவும், அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

May be an image of 3 people and dais

1⃣ செபி மற்றும் அதானி இடையேயான தொடர்பின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை. பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்படக் கூடாது. மோடி அரசு உடனடியாக செபி (SEBI) தலைவரை பதவியில் இருந்து நீக்கி மற்றும் இது தொடர்பாக விசாரிக்க, பாராளுமன்றக் கூட்டுக்குழுவை (JPC) அமைக்க வேண்டும்.

2⃣ கட்டுப்படுத்தப்படாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் குடும்பச் சேமிப்புகள் குறைதல் ஆகிய அழுத்தமான பிரச்சனைகள் குறித்து எங்களுடைய கவனம் இருக்கவேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. ஏழை, நடுத்தர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

3⃣ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் தடையின்றி தொடர்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

4⃣ நமது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

தேசபக்தியுள்ள நமது இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

5⃣ கோடிக்கணக்கான பயணிகள் அவதிப்படும் நிலையில், ரயில் தடம் புரள்வது வாடிக்கையாகி விட்டது. காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் சரிந்து வரும் உள்கட்டமைப்பு ஆகியவையும் கவலைப்படவைக்கும் விஷயமாக உள்ளது.

இந்தப் பிரச்னைகளைச் குறித்து விரிவாக தேசிய அளவில் பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

– காங்கிரஸ் தலைவர் திரு Mallikarjun Kharge

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் எழுந்த சர்ச்சைகளை போல இதற்கு முன்பு எந்த ஆளுநர் மீதும் எழுந்ததில்லை. அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் உதவியுடனும், அறிவுரையின்படியும் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்துகிற போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி ஒன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது அவரது கருத்தை கூறி சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன்படி திரும்பவும் அந்த மசோதாவை திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலே நிறைவேற்றி திரும்ப ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளித்த தீர்ப்பில் ஆளுநருக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் தெளிவான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? அரசமைப்பு சட்டப்படி செயல்படாமல் இருப்பதற்கு அவருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் ? இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறார். அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு தெரியுமா ? தெரியாதா ? உச்சநீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல, அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்தார். இதற்கு பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெறப்பட்ட ஆணையின்படி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது. இதற்கு பிறகும் அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழக ஆளுநர் தாம் வகிக்கிற பதவியின் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், விரோத போக்கோடும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா கிராமப்புற மக்களுக்கு எதிரானது என மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் பொருள் என்று புதிய வியாக்யானம் கூறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளாத மும்மொழி திட்டம், புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் தான் நம்; பாரதத்தை உருவாக்கியது மற்றும் ஜியூ போப்பின் திருக்குறள் மொழி பெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது என்றும், திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி என்று மதச்சாயம் பூசுவது என்று தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஆணவத்தோடும், அதிகார மமதையோடும் கருத்து கூறியவர் ஆளுநர் ஆர்.என். ரவி.

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக, எந்தவொரு நாடும் ஒரு மதத்தை சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கல்ல என்று பேசியதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எழுச்சியினால் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசியது, நாடு முழுவதும் இளைஞர்களால் எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட அக்னிபாத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்று கூறியது அனைத்துமே மக்கள் விரோத கருத்துகளாகும்.

தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பதில் தமிழக அரசின் பரிந்துரையை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் பல மாதங்களாக காலியாக இருக்கிறது. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் உயர்கல்வித்துறையை சீரழித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையை தயாரிப்பது மாநில அரசு. அதை முழுமையாக படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அந்த உரையை முழுமையாக வாசிக்காமல் திரித்து, மாற்றி, விட்டு விட்டு வாசித்து புதிதாக சேர்த்து அவர் ஒரு உரையை வாசித்தது அப்பட்டமான சட்டப்பேரவை விதிமீறலாகும். இதன்மூலம் சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்த ஆளுநருக்கு பாடம் கற்பிக்கிற வகையில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன்மூலம் தமிழக அரசின் உரையை அவைக் குறிப்பில் முழுமையாக இடம் பெறச் செய்து பேரவையின் மாண்பு காப்பாற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது. அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இந்நிலையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அடையார் துரை அவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோல்டன் பீச் பன்னீர் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் துணை தலைவர்கள் திரு பொன் கிருஷ்ணமூர்த்தி திரு கீழானூர் ராஜேந்திரன் திரு சொர்ண சேதுராமன் திருமதி இமயா கக்கன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு S A வாசு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் திருமிகு அமிர்தவர்ஷினி, திருமிகு சுபாஷினி AICC உறுப்பினர் திரு ரவீந்திரதாஸ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ” பெருந்தலைவர் காமராஜர்” தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்று மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

எமனாக வந்த நிலச்சரிவு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நடந்த சோகம்!! |  வவுனியா நெற்

வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி”.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்.!!!

"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி".? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்.!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் என்பது வந்து கொண்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள் சிலர் கூட மறைமுகமாக கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 11:00 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்கும் நிலையில் முதல்வரின் அமெரிக்கா பயணம் குறித்த ஆலோசனை முக்கியமான நிகழ்வாக இருக்கும்.

முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறதே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கோரிக்கை வலுத்துள்ளதே தவிர இன்னும் பழுக்கவில்லை என்றார். குறிப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பன் வருகிற 19ஆம் தேதிக்கு மேல் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும் இதனால் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது துணை முதல்வர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

வினேஷ் போகத்துக்கு அநீதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வினேஷ் போகத்துக்கு அநீதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம், செய்து அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டு துறையின் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மோகன காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மறைந்த முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நினைவு நாணயம்’ வெளியிட ஒன்றிய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ம் தேதி கடிதம் எழுதினார். இந்த நாணயத்தை, கடந்த ஜூன் 3ம் தேதி கலைஞரின் நூறாவது பிறந்தநாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் இருந்தது. நாணயத்திற்கான நடைமுறைகள் பணிகள் முடிவடையாததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

தற்போது இவை அனைத்தும் முடிந்து கடந்த மாதம் நாணயம் வெளியிடுவதற்கான அனுமதி கடிதத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கையெழுத்திட்டுள்ளார். கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் ரூ.100 நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது. இதன்படி இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கலைஞரின் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது. இதை வடிவமைக்கும் பணியை ஒன்றிய நிதியமைச்சகம் செய்து வந்தது. நாணயத்தை, ஒன்றிய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன், ‘தமிழ் வெல்லும்’ என்ற தமிழ் வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற உள்ளது. கலைஞரின் நூற்றாண்டு நாணயம் வெளியிடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற 18ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெறுகிறது. ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் நாணயத்தை பெற்றுக் கொள்கிறார். விழாவில், திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியினர் மட்டுமல்லாது கூட்டணி கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* நாணயத்தின் விலை ரூ.2,500?

இந்த நாணயத்தின் ஒரு பக்கம் சிங்கத்தின் தலையுடன் கூடிய அசோக தூண், ‘சத்யமேவ ஜெயதே’, ‘பாரத்’ ஆகிய வார்த்தைகள் தேவநாகரி எழுத்திலும் ‘இந்தியா’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் நாணயத்தின் மையத்தில் ‘கலைஞர் எம்.கருணாநிதி’ உருவப்படமும், கீழே அவர் பயன்படுத்திய ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகமும் இடம் பெறுகிறது. ‘கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு’ (1924-2024) என தேவநாகரி எழுத்திலும், ஆங்கிலத்திலும் இடம்பெறும்.

சுமார் 35 கிராம் எடை கொண்ட இந்த ரூ.100 நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் தாமிரமும், நிக்கல் மற்றும் துத்தநாகம் முறையே தலா 5 சதவீதமும் கலந்திருக்கும் என ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்விலை ரூ.2,500 என ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நாணயம் காசாலைகளில் அச்சிடப்பட்டு வந்தவுடன் ரிசர்வ் வங்கி விற்பனையகங்கள் மற்றும் தபால் நிலையங்களில் விற்பனைக்கு வரும் என ஒன்றிய நிதித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி மதிப்பில் பணப்பலனை தமிழக அரசு விடுவித்துள்ளது.

மேலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 9% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படியை கணக்கீடு செய்ய ஏஐசிபிஐ குறியீடு இதன் மூலகாரணமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கான இந்த அகவிலைப்படி ஆண்டிற்கு இரு முறை உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி கடந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 46 சதவிகிதம் அகவிலைப்படி வழங்கப்பட்டுவரும் நிலையில் தற்போது 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

புள்ளிகளின் சராசரியை வைத்து அகவிலைப்படி கணக்கீடு செய்யப்பட்டுவரும் நிலையில் தற்போது அப்புள்ளிகள் வேகமாக உயர்ந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண் இணைத்தல், ஓய்வூதிய ஆவணங்கள் மற்றும் இது தொடர்பான அறிக்கைகள், மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்தல், வாழ்நாள் சான்றிதழ் பெறுதல், வருமான வரி தாக்கல் செய்தல், படிவங்கள் பெறுதல்,இது தொடர்பான படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற இணையவழி சேவைகளை மின்வாரிய ஊழியர்கள் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கைபேசி செயலி ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி. செல்வப்பெருந்தகை ஆதரவு.!!!

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி. செல்வப்பெருந்தகை ஆதரவு.!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விவகாரம் தற்போதைய தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மக்களவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் உதயநிதி. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதல்வர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியது மீண்டும் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது.

மற்ற அமைச்சர்களும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பற்றி அடிக்கடி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறுகையில், துணை முதல்வராக பதவி வகிக்க அவருக்கு அனைத்து விதமான தகுதியும் உள்ளது என்று கூறியுள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை முதலமைச்சர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். போதைப் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES