Friday , August 1 2025
Breaking News
Home / தமிழகம் (page 18)

தமிழகம்

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், …

Read More »

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும் காந்தியின் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள் எனவும் தியாகிகளை சாதி தலைவர்களாக அடைய படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் எனவும் பகிரங்கமாக …

Read More »

ரூ.7,500,00,00,00,000 காணவில்லை.! மோடியோ, BJPயோ.. ஒரு வார்த்தை சொல்லல. பரபரப்பு குண்டை போட்ட உதயநிதி.!!

சென்னை: திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஹிண்டர்பெர்க் என்கின்ற ஆய்வு செய்கின்ற அமெரிக்க நிறுவனம் அவர்கள், ஆய்வு அறிக்கை வெளியிட்டார்கள். ஒரு தனியார் நிறுவனம் ஒன்பது வருஷத்துல எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது ? அதானி அவர்கள் இப்போது உலக பணக்காரர் பட்டியல்ல இரண்டாவது இடம். இதெல்லாம் ஹிண்டர்பெர்க் நிறுவனம் அந்த ஆய்வில் கேள்வியாக கேட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் திரு மோடி …

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனர் தங்கவேல் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதம் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு SPயாக நியமிக்கபடுகிறார். கரூர் மாவட்டத்திற்கு நீலகிரி மாவட்ட எஸ்பி பிரபாகர்.

Read More »

கரூர் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்தில் பலி-விபத்தில் சிக்கிய உடலை தீயணைக்கத் துறையினர் போராடி மீட்டனர்

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற டாடா ஏசி வேன் மீது மோதிய விபத்தில் வேன் டிரைவர் சரவணன் உயிழந்துள்ளார். காரில் சென்ற மூன்று பேர்கள் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.உயிர் இழந்த சரவணனின் உடலை கரூர் அரசு …

Read More »

கரூரில்,முதலமைச்சர் உத்தரவை நிறைவேற்றிய மாவட்ட ஆட்சியர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அரசு அலுவலகங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களின் மனுக்களை மனுக்களாக பார்க்காமல், அவர்களது பிரச்சனைகளாக அரசு அதிகாரிகள் அணுக வேண்டும். மனு அளிக்க அரசு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை, இருக்கை அளித்து அமர வைத்து அவரிடம் மனுக்களை பெற்று, மனுக்களை ஆராய்ந்து, அவர்கள் குறைகள் குறித்து கனிவுடன் கேட்டு, சட்டப்படி வாய்ப்பு உள்ள அனைத்து கடமைகளையும் நிறைவேற்றி …

Read More »

100 நாள் வேலைத் திட்டம் | “தமிழகத்தில் 9 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை” – ஜோதிமணி எம்.பி காட்டம்

கரூர்: காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்தில் கடந்த 9 வாரங்களாக, 2 மாதத்துக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை. இதனால், கடுமையான பொருளாதார நெருடிக்கடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தில் 1.31 கோடி பயனாளிகள் உள்ளனர். இதில் …

Read More »

ஊடகங்கள் மீதான பாஜக அரசின் புதிய தாக்குதல் குறித்து இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியின் (இந்தியா) அறிக்கை

ஊடகங்கள் மீதான பாரதிய ஜனதா கட்சியின் (BJP) அரசாங்கத்தின் புதிய தாக்குதலை இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) கட்சிகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. ஊடகங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்துக்காக நாங்கள் உறுதியாக நிற்கிறோம். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம், நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார், காஷ்மீர் வாலா, தி வயர் போன்றவற்றை ஒடுக்க புலனாய்வு அமைப்புகளை …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES