ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததான குழுவின் துவக்க விழா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இரத்த தானம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார்.
நிறைய தடவை இரத்ததானம் செய்தவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன், டிஆர்ஓ லியாகத், எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஆர்எம்ஓ குமார்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார்.
குறுகிய காலத்தில் அமைப்பின் மூலம் இதுவரை 650 பேருக்கு இரத்ததானம் செய்திருப்பதாகவும்,
துவக்க தினத்தன்று அமைச்சர் உள்ளிட்ட 6 பேர் ரத்த தானம் செய்திருப்பதாகவும் சிவராமன் கூறினார்.
விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, மகேஸ்வரி, ரவிசங்கர், ஸ்காட் தங்கவேல் சிவராஜ், பாலமுருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
கரூர் அரசு மருத்துவமனைகளில் இரத்தம் தேவைப்படும் ஏழை எளிய பயனாளிகளுக்கு மட்டும் தன்னார்வலர்கள் மூலம் இரத்த தானம் செய்வதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.