Friday , November 22 2024
Breaking News
Home / இந்தியா / தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியீடு
MyHoster

தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியீடு

டெல்லி: தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது.

மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை பொழிவை உருவாக்கவும் மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கிடையில், டெல்லியில் இயற்கை மழை பொழிந்து ‘மிகமோசமான’ எனும் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் தரத்திற்கு வந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின் படி, நச்சு நிறைந்த மூடுபனி டெல்லியை சூழ்ந்து மற்றும் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான அளவீட்டை பெற்றது.

இன்று காலை 6 மணி நிலவரத்தின் படி, டெல்லி பவானாவில் 434ஆகவும், துவாரகா பகுதியில் 404ஆகவும், ITO பகுதியில் 430ஆகவும், முண்ட்காவில் 418ஆகவும், நரேலாவில் 418ஆகவும், ஓக்லாவில் 402ஆகவும், ரோகினி மற்றும் ஆர்கே புரம் இரண்டிலும் 417ஆகவும் இருக்கிறது. இந்த அளவீட்டின்படி தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் பிரிவில் இருந்ததை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.

டெல்லியில் தீபாவளி அன்று மாசு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் வேறு மாசு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏற்றத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்கள் அதனை மீறி செயல்பட்டதால் இதுபோன்று காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றின் தரம் 0 முதல் 50க்கும் இடைப்பட்ட அளவீடு நல்லது, 51 மற்றும் 100 திருப்திகரமானது, 101 மற்றும் 200 மிதமானது, 201 மற்றும் 300 ஏழைகள், 301 மற்றும் 400 மிக மோசமானது, 401 மற்றும் 450 கடுமையானது.

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES