Friday , November 22 2024
Breaking News
Home / இந்தியா / அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!
MyHoster

அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்படும் கேண்டீனில் செய்யப்படும் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை எலி உண்ணும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

தலைநகரில் உள்ள முக்கியமான மருத்துமனையில் அதுவும், தனியார் மருத்துவமனைகளில் இல்லாத சிகிச்சைகள் கூட அளிக்கப்படும் சிறந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கேண்டீனில், எலிகள் பலகாரங்களை சாப்பிடும் அளவுக்கா பராமரிப்பது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

நோயாளிகள் வரும் இடமான மருத்துவமனையில், எலிகள் உண்ட திண்பண்டங்களை விற்றால் அது மேலும் அவர்களுக்கு புதுப்புது ஆபத்தான நோய்களை உருவாக்கிவிடும் என்றும், எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேண்டின்களையும் சுகாதாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டின் தின்பண்டங்களில் எலி.. டீன் போட்ட அதிரடி உத்தரவு

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்டுள்ள கேண்டீன்களை உடனே ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் சமையற்கூடம், விற்பனையகத்தில் ஆய்வு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடைகள் கால்வாய்கள் ஆகியவற்றை முழுமையாக மூடி, பூச்சிகள், உயிரினங்கள் உள்ளே வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதி காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், உணவுப் பொருட்களை கையாள்பவர்கள் கையுறை, தலையுறை அணிந்திருப்பது அவசியம், உணவுப் பொருட்களை பூச்சிகள் நெருங்காத இடங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கல்லூரி முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES