Breaking News
Home / கரூர் / தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்
MyHoster

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமைக்கு சொந்த காரர் – பாவலர் இறையரசன்

ஆசை டிவியின் சிங்கப்பூர் அடையாளமாக இருக்கின்ற நண்பர் இறைமதி தமிழ்நாடு வந்திருந்தார்.

அவரை சின்ன தாராபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நானும் ஆசை டிவி கனகராஜும் சந்தித்தோம்.அவரது தந்தை பாவலர் இறையரசன் ஒரு மரபுக் கவிஞர். திருக்குறளுக்கு பொருளுரையை அந்த காலத்திலேயே படைத்தவர் அவர்.

தமிழ் கூறும் நல்லுலகில் திருக்குறளுக்கு கவிதையாக பொருளுரை எழுதிய இரண்டாமவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.”குறளும் பொருளும்’ என்ற அந்நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் வெளியிட பேராசிரியர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார்.

அந்நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய பாராட்டுரை முரசொலியில் முழு பக்க அளவு வந்திருக்கிறது.

பாவலர் இறையரசன், அவருடைய துணைவியார் அன்பு அம்மா, நண்பர் இறைமதி ஆகியோரைரைச் சந்தித்து உரையாடி உறவாடி உணவருந்தி மகிழ்வோடு திரும்பினோம்.

இது ஓர் இனிய நினைவு.

சிவராமன், நெறியாளர், ஆசை டிவி

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES