Wednesday , November 19 2025
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்
MyHoster

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம்

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை,செப்.22

மதுரை புதூர் பஸ் நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பாக உள்ளூர் குளிர்பானங்களை ஆதரித்தும், வெளிநாட்டு குளிர்பானங்களை எதிர்த்தும், விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வின் போது வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியும், உள்ளூர் குளிர்பானங்களை தாங்கள் அருந்தியதோடு பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் சாமுவேல் என்ற சரவணன் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநில செயலாளர்கள் சபரி செல்வம்,குட்டி (எ) அந்தோணி ராஜ், மாநில அமைப்புச் செயலாளர் தங்கராசு, மண்டல நிர்வாகிகள் ஜெயக்குமார் தேனப்பன் கரண்சிங், வாசுதேவன், மரியசுவிட்ராஜன், பிரபாகரன், மண்டல வழக்கறிஞர் அணி கண்ணன், இளைஞர் அணி ஆதிபிரகாஷ், மகளிரணி பாக்கியலட்சுமி ராஜம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் கார்மேகம், மாவட்ட பொருளாளர் கணேசன் ஆகியோர் நன்றியுரை கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES