பெட்கிராட் அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கும் விழா
தேசிய சணல் வாரியம் பெட்கிராட் இணைந்து இலவச ஜூட் பேக் தயாரிப்பதற்கு 50 நாட்கள் பயிற்சி பெற்ற 25 பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில், நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். கல்கத்தா தேசிய சணல் வாரிய தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அய்யப்பன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில் :-
பயிற்சிக்கு பின் சுய தொழில் துவங்க அனைத்து முயற்சிகளையும் செய்து வெற்றி பெற வேண்டும்.என பேசினார்.
கே.வி.ஐ.சி உதவி இயக்குனர் அன்புச்செழியன் பேசும்போது :- மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று தொழிலை திறம்பட செய்ய வேண்டும் என கூறினார்.
யூனியன் பாங்க் ஆப் இந்தியா முதுநிலை மேலாளர் அமேஷ்குமார் பேசும்போது :- பெண்கள் சுயதொழில் துவங்க மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கடன் வழங்க பரிந்துரை செய்யும் போது அதை பெண்கள் பயன்பெறும் வகையில் முத்ரா லோன் தர தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் பொருளாளர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் சாராள்ரூபி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங், பயிற்சியாளர்கள் விஜயவள்ளி, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….