
தமுமுக மதுரை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை நிர்வாக குழு உறுப்பினர் முகமது கௌஸ், தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மாநில மருத்துவ சேவை அணி பொருளாளர் அப்துல் ரஃபி, மண்டல செயலாளர் பக்ருதீன் அலி, தமுமுக மாவட்ட செயலாளர் ஷேக், மமக மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன், மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரியாஜ் நன்றி கூறினார்.
மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1) தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக பேராடும் பாலஸ்தீன மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் பத்திரிக்கை ஊடக துறையினரையும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய அரசுக்கு துணை போகும் ஒன்றிய அரசையும் வன்மையாக இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

2.) 49 சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசின் பரிந்துரையினை கையெழுத்து இடாமல் கால தாமதப்படுத்தும் தமிழக ஆளுநரை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அக்டோபர் 28 அன்று சென்னையில் நடைபெறும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அனைத்து கிளைகளிருந்தும் வாகனங்கள் அமர்த்தி திரளான மக்களை அழைத்து செல்வதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
3) 84 வது வார்டு வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர், சாலை வசதி செய்து தரக்கோரி பலமுறை மனு அளித்தும் மாநகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக தென்றல் நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இல்லையெனில் மக்களை திரட்டி மாநகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.

4)அனைத்து கிளைகளிலும் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவைக்கு அதிகமான பெண் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.
5)மதுரை மாநகராட்சி பகுதியில் மஞ்சள் காமாலை, டெங்கு நோய்கள் தீவிரமாக பரவி வருகின்றது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
6) முஸ்லீம் இளைஞர்களை அச்சுறுத்தும் முகமாக NIA சோதனை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் வீடுகளில் சோதனை செய்கிறது. குறிப்பாக மதுரையில் தொடர்ந்து சோதனை என்ற பெயரில் ஈடுபட்டு பதட்டத்தை உருவாக்குவதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. என தீர்மானங்கள் நிறைவேற்றினர்.