இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனத்தின் சமூக நிதி பங்களிப்புடன் பெட்கிராட் நிறுவனத்துடன் இணைந்து மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள பெட்கிராட் கூட்டரங்கில் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி கடந்த (25/09/2023) முதல் ஒரு மாத காலமாக நடைபெற்றது.
இந்த பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு 17 வகையான சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் சொந்தமாக தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை அன்று பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பெட்கிராட் தலைவர் எஸ்.கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜி.சாராள்ரூபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் இ.டிஐ.ஐ உதவி மேலாளர் திருமதி எம்.சுனிதா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடினார்.
மேலும் அவர்கள் பயிற்சி கற்ற விதம். பொருட்களை சந்தைப்படுத்தும் அனுபவம், சணல் பொருட்கள் உற்பத்தி செய்யும் விதம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்