Thursday , November 20 2025
Breaking News
Home / செய்திகள் / தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரை அண்ணாநகர் முத்துராமன்.!
MyHoster

தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி பல்வேறு உதவிகளை செய்து வரும் மதுரை அண்ணாநகர் முத்துராமன்.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியை சேர்ந்தவர் சமூகசேவகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மையம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியாகவும் உள்ளார்.

பழைய வீடுகளை இடித்து டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியில் உள்ள இவர் தனது வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைக்காகவே ஒதுக்கி வருகிறார்.மிகவும் கஷ்டப்படும் நிலையில் உள்ள 13 பேருக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார்.

கல்லூரியில் சேர வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் 10 க்கும் மேற்பட்டோரை கல்லூரியில் சேர்ந்து படிக்க வைத்துள்ளார்.

தொழில் செய்ய வழியில்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஐந்து பேருக்கு அயர்ன் வண்டி அயர்ன் பெட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நகரும் வண்டி, மேலும் தொழில் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நபர்களுக்கு நிதி உதவிகள் போன்ற பல்வேறு உதவிகளை செய்து வரும் இவர் ஒவ்வொரு தீபாவளி அன்றும் ஏழை எளியவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் மற்றும் நிதிஉதவிகளை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மேலும் பொங்கல் பண்டிகையை ஏழைகள் கொண்டாடும் விதமாக பொங்கல் வைக்க தேவையான அரிசி மண்டவெல்லம் கரும்பு மற்றும் நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியம் பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் அவர்கள் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இதில் செந்தில், அஸ்பயர் சீனிவாசன், நாகேந்திரன், குணாஅலி, பூமிராஜா, அழகர்,மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் நம்மிடம் கூறுகையில் :- எனக்கு சிறுவயதிலிருந்தே யாருக்காகவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து இருந்தது.எனவே எனது சிறு வயதில் இருந்தே என்னால் முடிந்த அளவு சிறு சிறு உதவிகளை செய்து வருகிறேன். நான் பழைய கட்டிடங்களை இடித்து கட்டிட கழிவுகளை டிராக்டர் மூலமாக அப்புறப்படுத்தி தரும் பணியை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறேன். எனது ஒவ்வொரு பணியின் போதும் எனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை இது போன்ற சமூக சேவைகள் செய்வதற்காகவே ஒதுக்கி விடுவேன். அந்த பணத்தை சமூக சேவைக்காக ஒதுக்கி அதில் ஒரு பைசா கூட எடுக்காமல் இதுபோன்று ஏழை எளியவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறேன்.

என்னால் முடிந்த அளவு பத்துக்கும் மேற்பட்ட மேற்பட்டோரை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளேன். எனது சொந்த செலவில் 13 திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். மேலும் 5 பேருக்கு அவர்கள் சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்பதற்காக அயர்ன் வண்டிகள் வாங்கிக் கொடுத்துள்ளேன்.

மேலும் ஒவ்வொரு தீபாவளி பண்டிகை அன்று ஏழை எளியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கி வருகிறேன். இதுபோன்று ஏழை எளியவர்களுக்கு சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனவே எனது உயிர் உள்ளவரை இதுபோன்று தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது என முடிவெடுத்துள்ளேன் என கூறினார்.

கோடிக்கணக்கில் ரூபாய் வைத்திருக்கும் பெரிய பணக்காரர்கள் இதுபோன்று ஏழைகளுக்கு உதவி செய்யும் மனமில்லாமல் இருக்கும்போது நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இவர் ஏழை எளியவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்…

About Kanagaraj Madurai

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES