Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டிக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருது வழங்கி கௌரவிப்பு.!
MyHoster

அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டிக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருது வழங்கி கௌரவிப்பு.!

ரஷியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் குளோபல் பீஸ் பில்டிங் நெட்வொர்க் மற்றும் பெடரேஷன் ஆப் இன்டியன் என்ஜிஓ’ஸ் மற்றும் ஹ்யூமன் சர்விசஸ் இணைந்து சிறந்த சமூக சேவைகள் செய்தோர்களுக்கு உலக அமைதிக்கான அம்பாசிட்டர் விருதை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மதுரை திருமங்கலம் அருகே கரிசல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியர் அன்னதான அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பாண்டி அவர்களுக்கு அவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி விதமாக நீதியரசர் வைத்தியநாதன், என்ஜிஓ’ ஸ் தலைவர் டாக்டர் விஜயகுமார்,குட் ஒர்க் பள்ளி தாளாளர் ஜலாலூதீன் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய தலைவரின் தனிச்செயலாளர் சக்திவேல்,மாநில தலைவர் ஆனந்தகுமார், மாநில செயலாளர் டேனியல் சக்கரவர்த்தி, மாநில பொருளாளர் சுகுமாரி, மதுரை மாவட்ட தலைவர் எஸ்.எம்.ரகுபதி, மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் ரகுநாத், தினவிடியல் லாரன்ஸ், நாராயணன், ஆனந்தன், ஆறுமுகம், வழக்கறிஞர் பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

About Kanagaraj Madurai

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES