தேனி மாவட்டம் திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா திம்மராசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை, அறநல்லுலகம் பொதுநல அறக்கட்டளை தெப்பம்பட்டி இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு & சான்றிதழ் வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் ரவிச்சந்திரன், அழகர்சாமி,சர்க்கரை பாண்டி, ஈஸ்வரன் ஆகியோர் தலைமையிலும், பள்ளி தலைமை ஆசிரியர் சத்திய சீலா மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பரமன், வார்டு உறுப்பினர் ஆதிலட்சுமி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
ஆசிரியர் சக்திவேல் வரவேற்று பேசினார். வனச்சரகர் அருள், உத்தமபாளையம் நன்செய் அறக்கட்டளை அமைப்பாளர் பசுமை செந்தில், முன்னாள் மாணவர்கள் கண்ணன்,அழகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் தோழர் ராமசாமி, முருக்கு பாண்டி, வெள்ளைச்சாமி, அழகர்ராஜா மற்றும் ஊர் பொதுமக்கள், மாணவ,மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.