Friday , July 4 2025
Breaking News
Home / செய்திகள் / முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் : மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனு
MyHoster

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் : மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனு

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை குழுவின் மதுரை மண்டல பொதுமக்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள், மீனவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஜெயக்குமார், செம்மலை,வளர்மதி, பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி கௌரவிக்க வேண்டும் என தேர்தல் அறிக்கை குழுவினரிடம் மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கோரிக்கை மனுவை வழங்கினார்.

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES