மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகரில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி யில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிக்கும் ஏழை எளிய முதியோர்களுக்கு நாள்தோறும் உணவு இலவசமாக வழங்கி வரும் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மாலை நேர பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் தின விழா நிகழ்வுகள் திருமங்கலம் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அன்னை வசந்தா டிரஸ்ட் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன் தலைமை வகித்தார். செயலாளர் சித்ரா ரகுபதி,பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் உறுப்பினர் ரோகுபாண்டி அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவில் மாலை நேர பயற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.ருக்மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிர் தின சிறப்பு கள் குறித்தும், சாதனை பெண்மணிகள் குறித்தும் பேசினார். இதனையடுத்து பள்ளி மாணவிகள் அனுஷ்கா மற்றும் தர்ஷினி ஆகியோர் மகளிர் தினம் குறித்தும், விண்வெளி சாதனை பெண்மணி கல்பனா சாவ்லா குறித்தும் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 648வது நாளாக 100க்கும் மேற்பட்ட வயதான ஏழை எளிய முதியோர்க்கு நாள்தோறும் நல்லுணவு திட்டத்தின் கீழ் இலவச உணவும், சாதனை படைத்த பெண்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவின் நிறைவில் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியின் ஆசிரியை சிவஜோதிகா அனைவருக்கும் நன்றி கூறினார்.