Breaking News
Home / செய்திகள் / பேங்க் அக்கவுண்ட் இருக்கா? வரும் 31ம் தேதி வங்கியில் பணம் எடுக்கணுமா? வங்கி அதிகாரிகள் சொல்வது என்ன?
MyHoster

பேங்க் அக்கவுண்ட் இருக்கா? வரும் 31ம் தேதி வங்கியில் பணம் எடுக்கணுமா? வங்கி அதிகாரிகள் சொல்வது என்ன?

பேங்க் அக்கவுண்ட் இருக்கா? வரும் 31ம் தேதி வங்கியில் பணம் எடுக்கணுமா? வங்கி அதிகாரிகள் சொல்வது என்ன?

டெல்லி: வருகிற மார்ச் 31ம்தேதி, வங்கிகள் செயல்படுமா? செயல்படாதா? என்ற பெருத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த குழப்பத்தை ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெளிவுபடுத்திய நிலையில், வங்கி அதிகாரிகளும் இதுகுறித்து விளக்கம் தந்துள்ளனர்.

வருடா வருடம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை வங்கிகளுக்கு பொருளாதார ஆண்டாக கணக்கிடப்படுகிறது… அதன்படி, முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் அனைத்துமே கட்டாயம் இயங்கும்.

கடைசி நாள்: வரும் மார்ச் 31-ம் தேதி, இந்த வருடத்தின் கடைசி நாளாகும்… ஆனால், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது.. எனவே, வங்கிகள் அன்றைய தினம் செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால், 2 நாட்களுக்கு முன்பு, அரசின் செயல்பாடுகளுக்காகவும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும் மார்ச் 31-ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்திருந்தன.

ரசீதுகள்: அனைத்து வங்கிகளுக்கும் இது தொடர்பான கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.. அதில், “2023 நிதியாண்டில் ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் கணக்கு காட்டுவதற்காக, மார்ச் 31, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனைகளுக்கு அரசாங்க ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறக்க வேண்டும்.

இந்த விதிவிலக்கான நாளில் வங்கிச் சேவைகள் கிடைப்பதை விளம்பரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான 2023-24 அன்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

வதந்திகள்: இந்நிலையில், ஞாயிறு விடுமுறை என்று வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பரவிவரும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து, வங்கி அதிகாரிகள் தற்போது விளக்கம் தந்துள்ளனர்..

அதிகாரிகள் சொல்லும்போது, “வங்கிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும். இந்நிலையில், இந்த நிதியாண்டு வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், அரசு கணக்குகளில் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதியாகவும், வருமானவரி உள்ளிட்ட வரிகளை செலுத்துவதற்கு வசதியாகவும் அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிக் கிளைகள் மட்டும் வரும் 31-ம் தேதியன்று செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

பரிவர்த்தனைகள்: மற்ற கிளைகள் அன்றைய தினம் செயல்படாது. மேலும், அன்றைய தினம் பொதுமக்களின் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளும் நடைபெறாது. இது தொடர்பாக, சமூகவலை தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது” என்று மீண்டும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த திடீர் குழப்பத்துக்கு காரணம், இந்த மார்ச் மாதத்தில் மட்டுமே மொத்தம் 18 நாட்கள் வங்கிகள் விடுமுறையாகும்.. இதுகுறித்து ஏற்கனவே ரிசர்வ் வங்கி, மாதாந்திர லிஸ்ட் வெளியிட்டிருந்தது. எனவேதான், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை இருக்கலாம் என்ற தகவல் பரவியது.,. தற்போது, இந்த அறிக்கை வெளியிட்டு, இந்த குழப்பத்தை ரிசர்வ் வங்கியும், வங்கி அதிகாரிகளும் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES