Wednesday , November 19 2025
Breaking News
Home / செய்திகள் / திடீரென மின்சார தேவையில் ஏற்பட்ட மாற்றம்.. உடனே இபி போட்ட உத்தரவு.. முக்கியம்.. இதை கவனிங்க
MyHoster

திடீரென மின்சார தேவையில் ஏற்பட்ட மாற்றம்.. உடனே இபி போட்ட உத்தரவு.. முக்கியம்.. இதை கவனிங்க

திடீரென மின்சார தேவையில் ஏற்பட்ட மாற்றம்.. உடனே இபி போட்ட உத்தரவு.. முக்கியம்.. இதை கவனிங்க

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று 19800 மெகாவாட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது .

தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்சார தடை நடக்காமல் இருப்பதாற்கான ஏற்பாடுகளை மின்வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றன.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் தமிழகத்தில் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்து, முந்தைய ஆண்டின் அதிகபட்ச தேவையை விட அதிகமாக இருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு, தமிழ்நாடு ஏற்கனவே 19,305 மெகாவாட் என்ற உச்ச தேவையை பதிவு செய்துள்ளது. 2023ன் உயர் தேவையான 19,387 மெகாவாட்டை வரும் வாரத்தில் தமிழ்நாடு மீறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே நேற்று 19800 மெகாவாட் மின்சாரம் மக்களால் பயன்படுத்தப்பட்டு உள்ளது . அதீத மின் தேவை காரணமாக கடந்த வருடம் கோடை காலத்தில் மின் தடைகள் அதிகம் இருந்தது. அது ஆளும் திமுக மீது விமர்சனமாக மாறியது.

இந்த முறை லோக்சபா தேர்தல் வேறு வரும் நிலையில் மின்சார தடை பிரச்சனையாக மாற கூடாது. இந்த நிலையில் இந்த ஆண்டு அதேபோல் மின்தடை ஏற்பட கூடாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்., அதேபோல் பள்ளிகளில், கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங்கெட்கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, TANGEDCO ஏற்கனவே மாநிலம் முழுவதும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது, எனவே இந்த காலகட்டத்தில் பராமரிப்புக்காக ‘மின் தடை’ இருக்காது. அவசரகாலம் தவிர சப்ளையை நிறுத்தக் கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சார துறை முக்கிய அறிவிப்பு: இபி தொடர்பான புகார்களை இனி செயலியில் அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. TANGEDCO என்ற செயலியில் இதற்கான வசதி உள்ளது.

TANGEDCO செயலியை பயன்படுத்தி எளிதாக லாக் இன் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் என்ன மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும்.

மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின்கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்ஃபோன் 2 செயலியில் புகாரளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO. மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான 94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேகமான நடவடிக்கை: தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக இனிமேல் அதிவேகத்தில் மக்கள் குறைகளை தீர்க்க வேண்டும் என்று அரசு சார்பாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

புகார்கள்: அதன்படி புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்சனை 5 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். பெரிய பிரச்சனைகள் , டிரான்ஸ்பார்ம் பிரச்சனைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.

புதிய மின்சார இணைப்புகளை ஏற்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் அதை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

44 மின் பகிர்மான வட்டங்களாக தமிழ்நாடு மின் வாரியம் தற்போது செயல்படுகிறது. இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்படுகிறது. இந்த வாரியம்தான் மக்களின் குறைகளை போக்க உள்ளது.

புதிய நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்கள் மற்றும் நிர்வாக வசதிக்காக பிரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மின்சார வாரியம் இரண்டாக பிரிந்துள்ளது. மாநில மின் பயன்பாட்டு நிறுவனமான தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாங்கேட்கோ) முறையாக இரண்டு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதன்படி பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிலக்கரி மற்றும் எரிவாயு அடிப்படையிலான அனல் ஆலைகளின் பராமரிப்பு உற்பத்தி , உட்பட முழு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும், அதே நேரத்தில் TN பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் சிறந்த நிர்வாகம் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக மீட்டர் மற்றும் பில்லிங் உள்ளிட்ட விநியோக நடவடிக்கைகளைக் கையாளும். இதற்கு இடையில் பசுமை ஆற்றல் செயல்பாடுகளுக்காக ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை: அதன்படி மின்சார வாரியமான Tangedco அமைப்பை 3 ஆக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதாவது 3 நிறுவனங்களாக இதை மாற்ற பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்தின் கடன் 1.4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த பரிந்துரை அறிக்கை இந்த கடன் நிலைமையை நிர்வகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

என்ன பரிந்துரை: மின் உற்பத்தி, விநியோகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகிய துறைகளை கவனிக்கும் வகையில் தனி தனி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று இந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது. இதில் தமிழ்நாடு அரசுதான் இனி முடிவு எடுக்க வேண்டும். ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார வாரியம் இப்படி 3 வகையாக பிரிந்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இதே ஐடியா கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) 2017 இல், மின்சார வாரியத்தை தனி விநியோக மற்றும் உற்பத்தி நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரைத்தது. ஆனால் அப்போது இந்த மாற்றம் செய்யப்படவில்லை.

About Admin

Check Also

iew(opens in a new tab)Publish

Change block type or style Change text alignment Displays more block tools வணக்கம் தங்க நகைகளுக்கு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES