Thursday , November 21 2024
Breaking News
Home / செய்திகள் /  `அந்த பையனுக்கு பயமில்ல…’ – ஹர்ஷித் ராணா வீசிய கடைசி ஓவரின் சுவாரஸ்யங்கள்!
MyHoster

 `அந்த பையனுக்கு பயமில்ல…’ – ஹர்ஷித் ராணா வீசிய கடைசி ஓவரின் சுவாரஸ்யங்கள்!

கொல்கத்தா மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி திரில்லாக நடந்திருந்தது. கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

கொல்கத்தா சார்பில் டெத் ஓவரில் 24.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க்கே மரண அடி வாங்க, 22 வயது இளம் வீரரான ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறார். அந்த கடைசி ஓவர் எப்படி ஹர்ஷித்துக்குக் கிடைத்தது என்பதே ஒரு சுவாரஸ்ய கதைதான். Harshith

ஹென்றிச் க்ளாசென் கொல்கத்தா அணியின் பௌலர்களை வெளுத்தெடுத்துக் கொண்டிருந்தார். அதில்தான் மிக முக்கியமாக ஸ்டார்க் வீசிய 19 வது ஒவரில் 26 ரன்களை வழங்கியிருந்தார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை நன்றாக வீசி க்ளாசெனின் விக்கெட்டை வீழ்த்தி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லவும் வைத்தார். ஹர்ஷித்துக்கு எப்படி கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது என ரஸல் போட்டிக்குப் பிறகு பேசியிருந்தார். Harshithஹர்ஷித்தின் பந்துவீச்சு அவரது திடகாத்திரமான குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. என்னிடம் வந்து கடைசி ஓவரை நான் வீச விரும்புகிறேன் என்றார். கேப்டனிடம் பேசி கடைசி ஓவரையும் வாங்கிவிட்டார். முதல் பந்தில் சிக்சர் கொடுத்த பிறகு மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்திருந்தார்.’ என ரஸல் கூறியிருக்கிறார்.

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அழுத்தமிகு சூழலில் ஹர்ஷித் எப்படி செயல்பட்டார் என பேசியிருக்கிறார். ‘கடைசி ஓவரில் 13 ரன்களுக்குள் சன்ரைசர்ஸை கட்டுப்படுத்த வேண்டும். எங்களிடம் அனுபவமிக்க பௌலர்கள் இல்லை. ஆனாலும் ஹர்ஷித்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. முடிவு என்னவாக இருந்தாலும் இதில் மாற்றம் இருந்திருக்காது. அவரும் ஆரம்பத்தில் கொஞ்சம் பதற்றமாக இருந்தார்.அவரின் கண்ணைப் பார்த்து ‘இது உனக்கான தருணம். விட்டுவிடாதே. உன்னை நீ நம்பு. ரிசல்ட்டை பற்றிக் கவலைப்படாதே.’ என்றேன். என ஸ்ரேயாஸ் கூறியிருக்கிறார்.

ரமண்தீப் சிங் கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணாவுக்கு ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து வந்த மெசேஜ் பற்றி பேசியிருந்தார். ‘கொஞ்சம் வேகமாக வீசினாலே க்ளாசென் சிக்சர்களாக விளாசியிருந்தார். அதனால், வேகத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து வீசுங்கள்.’ என ஹர்சித்துக்கு ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து மெசேஜ் வந்தது.’ இவ்வாறு ரமண்தீப் கூறியிருக்கிறார்.

ஹர்ஷித் ராணா நேற்று ஒரே போட்டியில் பல்லாயிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சு குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES