SBI வங்கியின் புதிய கட்டண முறைகள் ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி மற்ற வங்கியின் ATM- களில் மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதற்கு மேல் மற்ற வங்கியின் ஏடிஎம்களை பயன்படுத்தினால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு 10 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும். மேலும் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் போனால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டடம் வசூலிக்கப்படும்.
அதனைப்போலவே ஏடிஎம் அட்டையின் வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை இன்று ஏப்ரல் 1 முதல் sbi வங்கி உயர்த்த உள்ளது. கிளாசிக், சில்வர் மற்றும் குளோபல் ஏடிஎம் அட்டைகளுக்கான கட்டணம் ஜிஎஸ்டி சேர்க்காமல் 125 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதே போல மற்ற அனைத்து வகை ஏடிஎம் அட்டைகளின் வருடாந்திர பராமரிப்பு கட்டணமும் ஜிஎஸ்டி இன்று 75 ரூபாய் அதிகரிக்க உள்ளது.