மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நாள்தோறும் நடைபெறும் நற்பணிகளை வாழ்த்தி வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மணி வாழ்த்துரை வழங்கினார்.
வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியை சிவஜோதிகா புத்தகங்களின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியை ரோகுபாண்டி தொகுத்து வழங்கினார்.
விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.