முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்
பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.
டிசம்பர் மாதம் இறுதியில் திடீர் என்று சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. சீனா, ஜப்பான், இத்தாலி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா என்று பல நாடுகளை இந்த வைரஸ் நிலைகுலைய வைத்துள்ளது.
கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவில் வுஹான் நகரத்தில் இந்த வைரஸ் உருவானது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் அவசர நிலை இல்லை.. பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்.. கர்நாடகா அரசு
எத்தனை பலி
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 4,627 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139 ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,169ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,796ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கொஞ்சம் கொன்ஜமாக் வேகமாக குறைந்து வருகிறது.
சீனா
இந்த கொரோனா வைரஸால் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டடுள்ளது. இத்தாலியில் முதலில் இரண்டு நகரங்கள் இந்த வைரசால் மூடப்பட்டது. தற்போது மொத்தமாக இத்தாலி மூடப்பட்டது, அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 12,462 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் வைரஸ்
அதற்கு அடுத்து ஈரானிலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் 9,000 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அங்கு நேற்று மட்டும் 63 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். 354 பேர் இதுவரை ஈரானில் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்து தென் கொரியாவில் 7,869 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 66 பேர் அங்கு இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர்.
அமெரிக்கா எப்படி
அமெரிக்காவில் 1,313 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 38 பேர் பலியாகி உள்ளனர். இதனால் வாஷிங்கடன் மொத்தமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் 2,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 48 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 2277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 55 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பாவில் இந்த வைரஸ் தற்போது வேகம் எடுத்து வருகிறது.
மொத்தம் எத்தனை
இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கி மொத்தம் 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முக்கியமாக தமிழகத்தில் வைரஸ் தாக்கிய நபர் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார். கேரளாவில் 14 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இதில் இரண்டு பேர் மோசமான நிலையில் இருக்கிறார்கள். கர்நாடகாவில் வைரஸ் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட முதியவர் நேற்று பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.