மதுரையில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது மதியம் 12 மணியிலிருந்து 5 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள் நீர்மோர் இளநீர் மேலும் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக மதுரை மாநகர் முழுவதும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ நீர் மோர் பந்தல்களை திறந்து வருகிறார்.
அந்த வகையில் இன்று புதன்கிழமை மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ முன்பு அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நன்னாரி சர்பத், இளநீர், வெள்ளரிக்காய், ரோஸ்மில்க் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார்,பரவை ராஜா, பழங்காநத்தம் ராஜாராம்,மார்க்கெட் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மூவேந்திரன், உசிலை தவசி, அனுப்பானடி பாலகுமார்,பி.ஆர்.சி திருமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நீர் மோர் பந்தல் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்