சேலத்தில் சிலம்பொலி கலை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிலம்பொலி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ரத்தினகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில சிலம்பாட்ட கழக தலைவர் வளசை முத்துராமன் ஜி முன்னிலை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், டிஜிட்டல் இந்தியாவின் படி தொடுவது கம்ப்யூட்டர் முறையில் பாயிண்ட் எடுக்கும் செயல்முறை எடுக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து சிலம்ப போட்டியிலும் இந்த கம்ப்யூட்டர் முறை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை சிலம்பொலி அறக்கட்டளை பொதுச்செயலாளர் மோகனசுந்தரம் வரவேற்று பேசினார்.
இப்போட்டியில் 500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.