Thursday , November 21 2024
Breaking News
Home / செய்திகள் / ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற மதுரை நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!
MyHoster

ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற மதுரை நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!

மதுரையில் ரஜினியின் தீவிர ரசிகரின் மகளின் கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு குவியும் பாராட்டு..!

மதுரை,ஜூன்.17-

மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தீவிர ரசிகரின் மகள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் கல்வி பயில முடியாமல் இருந்ததை கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச்செயலாளர் அழகர்சாமி தனது சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாயை வழங்க முன் வந்தார். நிதி உதவி வழங்கிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மதுரை 59-வது வார்டு கிளை ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகன்.இவரின் மகள் ரம்யா,
இவர் டி.பி ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்றுள்ளார். நன்றாக மதிப்பெண் எடுத்தும் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரியில் சேர முடியாமல் இருந்தார். இதைக் கேள்விப்பட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி மாணவி ரம்யா கல்லூரி மேற்படிப்பு பயில தனது சொந்த செலவில் ஒரு லட்சம் ரூபாய் வழங்க முன்வந்தார்.

இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாணவி ரம்யாவுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா எல்லீஸ் ரஜினி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன் மற்றும் அவனியாபுரம் நகரச் செயலாளர் இன்ஜினியர் அவனி பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை மாநகர் தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் பி.அழகர்சாமி தனது சொந்த செலவில் கல்வி உதவி தொகையை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி குமரவேல் மற்றும் பாலநமச்சிவாயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்வி உதவித் தொகையை வழங்கிய ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் :-
மதுரை மகபூப்பாளையம் பகுதியில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தலைவர் ரஜினிகாந்த் பெயரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வரும் 59- வது வார்டு ரசிகர் மன்ற நிர்வாகி ரஜினி முருகனின் மூத்த மகள் ரம்யா டி.பி ரோட்டில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரின் தந்தையான ரஜினி முருகன் பெயிண்டிங் கூலி வேலை பார்த்து வருகிறார்.

எனவே மாணவி ரம்யா அடுத்த கட்ட கல்லூரி மேற்படிப்பு தொடர்வதற்காக தியாகராஜர் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வி பயில்வதற்காக கல்லூரி கட்டணத் தொகை ஆண்டுக்கு ரூபாய் 25 ஆயிரம் விதம் 3 வருடங்களுக்கும் சேர்த்து 75 ஆயிரம் ரூபாய் கட்டணத் தொகை மற்றும் யூனிபார்ம், கல்வி உபகரணங்கள் வாங்கும் செலவு உள்பட 1 லட்சம் ரூபாய் எனது சொந்த செலவில் வழங்கினேன். மேலும் மகபூப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம் என அவர் கூறினார்.

இந்நிகழ்வில் ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதயகுமார், ஹரிஷ், அஜித், சந்திரன், ரமேஷ், மலைகார்த்திக், மாதவன், ஜெயமணி, முருகவேல்,சரவணன், அவனி கார்த்திக், விக்கி, ரீகன், ராகுல் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் தீவிர ரசிகரின் மகள் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததை கேள்விப்பட்டு உடனடியாக உதவி செய்த ரஜினி ரசிகருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES