Tuesday , October 21 2025
Breaking News
Home / செய்திகள் / Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!
MyHoster

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

Earthquake: ஷாக்! இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 6.4!

இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலி. இங்கு இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது.

தேசிய நிலநடுக்கவியல் மையம் அளித்துள்ள தகவலின்படி, காலை 7.14 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹிங்கோலியில் 10 கிலோ மீட்டர் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மகாராஷ்ட்ராவில் நிலநடுக்கம் ஏற்பட்ட 3 மணி நேரத்தில் இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் 10 கிலோ மீட்டராக இது பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக பெரியளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

About Admin

Check Also

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம் உங்கள் கணக்கு சரியா உள்ளதா? அவ்வப்போது …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES