ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களே பிஎஸ்என்எல் திட்டங்களை (BSNL Plan) பார்த்து மூக்கில் விரல் வைத்து வரும் நேரத்தில், மாதத்துக்கு வெறும் ரூ.79 செலவில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை கொடுப்பது மட்டுமல்லாமல், 300 நாட்களுக்கு வேலிடிட்டியையும் கொடுத்து பிஎஸ்என்எல் தட்டித்தூக்கி இருக்கிறது.
இவ்வளவு மலிவான விலையில் எப்படி சலுகைகள் கிடைக்கிறது? வேலிடிட்டி முழுவதும் டேட்டா சலுகை கிடைக்குமா? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டெலிகாம் கட்டணங்கள் உயர்வுக்கு பிறகு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதிக கஸ்டமர்கள் குவிந்து வருகின்றனர். ஏனென்றால், அவ்வளவு மலிவான விலையில் ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் கிடைக்கின்றன. மற்ற நிறுவனங்கள் கொடுக்கும் விலையில் இருந்து கிட்டத்தட்ட பாதி விலைக்கு கூட பிஎஸ்என்எல்லில் திட்டங்கள் இருக்கின்றன. இதில் ரூ 797 மதிப்பிலான திட்டம் மிரள விட்டுள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 797 திட்ட விவரங்கள் (BSNL Rs 797 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) வருடாந்திர திட்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், 300 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 10 மாதங்களுக்கு சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) போன்ற முக்கிய சலுகைகள் வருகின்றன.
இருப்பினும், அதிகப்படியான சலுகைகளை பெற்று கொள்ள முடியாது. விலைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் சலுகைகள் கிடைக்கிறது. அதாவது, இந்த ப்ரீபெய்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை கொடுக்கப்படுகிறது.
டேட்டாவை பொறுத்தவரையில், தினசரிக்கு 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 120 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த 2 ஜிபிக்கு பிறகு ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, 40 கேபிபிஎஸ் வேகத்தில் தொடர்ந்து டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.
மொத்தமாக 6000 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். ஆகவே, முக்கியமான மூன்று சலுகைகளையும் பயன்படுத்தலாம். ஆனால், மேற்கூறிய மூன்று சலுகைகளும் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கஸ்டமர்களுக்கு வழங்கப்படும். இந்த 60 நாட்களுக்கு பிறகு 300 நாட்களுக்கு வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். அதாவது, தொடர்ந்து சிம் ஆக்டிவாக இருக்கும். இருப்பினும், வேறு சலுகைகள் கிடைக்காது.
இந்த 60 நாட்களுக்கு பிறகு பயன்படுத்தும் சலுகைகளுக்கு கட்டணங்களும் இருக்கின்றன. அதாவது, லோக்கல் கால்களுக்கு நிமிடத்துக்கு 1 ரூபாயும், எஸ்டிடி கால்களுக்கு 1.5 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். டேட்டாவை பொறுத்தவரை 1 எம்பிக்கு 25 பைசா வீதம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படும். லோக்கல் எஸ்எம்எஸ்களுக்கு 80 பைசா வசூலிக்கப்படும்.
அதேபோல நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 1.20 ரூபாயும், இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ்களுக்கு 6 ரூபாயும் கட்டணமாக இருக்கிறது. ஆகவே, சிம் ஆக்டிவ் மற்றும் இன்கம்மிங் கால் வருடம் முழுவதும் வர வேண்டும், இதற்கேற்ப திட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் மற்ற நிறுவனங்களைவிட இது மலிவான விலைதான்.