Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!
MyHoster

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்.. கைதானவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய திட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஆற்காடு ரவுடி சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் வகையில் ஆம்ஸ்ட்ராங் அவரது ஆதரவாளர்களால் கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரின் என்கவுன்டரில் இறந்தவர் திருவேங்கடம் மட்டுமே. அருள், மலர்க்கொடி, வரறிவரரன், ஹரிதரன், சிவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் முழுமையாக கைது செய்யப்படவில்லை. கைது செய்ய போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது. இந்நிலையில், நாளுக்கு நாள் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் திரைமறைவில் செயல்பட்டதாக கூறப்படும் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 21 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர். வங்கி கணக்கில் உள்ள பணம், கொலைக்கு கொடுக்கப்பட்ட பணம், அதன் மூலம் வாங்கிய சொத்து அளவு குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES