கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதே குளத்தில் குளித்த மேலும் 4 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர்களில் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிளவரதலா பகுதியைச் சேர்ந்த அனீஷ் (26), பூதம்கோட்டைச் சேர்ந்த அச்சு (25), பூதம்கோட்டை அடுத்துள்ள ஹரிஷ் (27), போதி நகரைச் சேர்ந்த தனுஷ் (26) ஆகியோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில், அனீஷுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதே போன்ற அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கன்னரவில பூதம்கோடு அனுலால் பவனைச் சேர்ந்த அகில் என்கிற அப்பு (27) கடந்த ஜூலை 23ம் தேதி மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாஅர். அவர் உயிரிழப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் இருந்தது. முதலில் தனது வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றார். அவருக்கு கடுமையான தலைவலி இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மரத்தில் இருந்து தவறி விழுந்ததில் அகில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவருக்கு கோலஞ்சேரி மலங்கரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கும் தலைவலிக்கும் தொடர்பிருக்கிறதா என பரிசோதிக்க, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தது