மதுரை திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணியை இன்று முதல் ஆறு நாட்களுக்கு வீடு வீடாக சென்று 50 க்கும் மேற்பட்ட குழுவினர் களப்பணியில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவ சேவை செய்து வரும் இந்த குழுவினருக்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனத் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதற்கான தொடக்க விழா திருப்பரங்குன்றத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர் ஏ.பூபேஷ்குமார் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் ஹார்விப்பட்டி குமார் உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.